வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17



More than a Blog Aggregator

by சூர்யா ௧ண்ணன்



1. திரைப்படங்களின் இறுதியில் வரும் ஸ்க்ரோலிங் கிரிடிட்ஸ் போலபவர்பாயிண்டில் டெக்ஸ்ட் அனிமேஷன்

டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்டை டைப் செய்து கொள்ளுங்கள்.

அந்த டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும்அதில் Add Effect -> Entrance -> Fly in தேர்ந்தெடுக்கவும். ' Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதை தேர்வு செய்யவும்.

இப்பொழுது அந்த எஃபெக்ட் கீழே உள்ள கட்டத்தில் வந்திருக்கும். அதில் ரைட்கிளிக் செய்து Effect Options -> Text Animation -> Group Text -ல் 'One Object ' கொடுத்து விட்டு பிரிவ்யூ பாருங்கள்.

மறுபடியும் அதே டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும் அதில் Add Effect -> Exit -> Fly out தேர்ந்தெடுக்கவும். ' Options' ல்உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதையும், 'Direction' ஃபீல்டில் To Top என்பதையும் தேர்வு செய்யவும்.

கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தி பார்க்கவும்..,


2. நீங்கள் எடிட் செய்து கொண்டிருக்கும் ஸ்லைடிலிருந்து ஸ்லைடு ஷோவைதுவக்க..,

உங்கள் பிரசன்டேஷனில் 50 ஸ்லைடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 46 வது ஸ்லைடில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுதுஸ்லைடு ஷோ கிளிக் செய்தால் முதலாவது ஸ்லைடிலிருந்துதான் ஸ்லைடுஷோ துவங்கும். ஆனால் 46 வது ஸ்லைடிலிருந்து துவக்க Shift+F5 முயற்சித்துப் பாருங்கள்..,

3.
சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ

வழக்கமாக ஸ்லைடு ஷோ முழு திரையில் வரும். சில சமயங்களில், இடையில் ஏதாவது ஸ்லைடில் எடிட் செய்ய வேண்டியிருந்தால், ஸ்லைடுஷோவை நிறுத்தி (எஸ்கேப் கீயை மாங்கு, மாங்கென்று அடித்து) மறுபடிவரவேண்டும்.

இதற்கு மாற்று வழியாக 'Ctrl' யை பிடித்துக் கொண்டு இடது புறம் கீழே உள்ளஸ்லைடு ஷோ பட்டனை கிளிக்கி பாருங்கள். ஒரு சிறிய விண்டோவில்ஸ்லைடு ஷோ வரும். மிகவும் எளிதாக ப்ரசன்டேஷனுக்கும், ஷோவுக்கும்மாறிக்கொள்ளலாம்.
இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி இன்று மேலும் ஒருவர் தீக்குளித்திருக்கின்றார். கரூரைச் சேர்ந்தவர் ஆ.சிவானந்தம் (வயது 46). சென்னைக்குச் சென்ற இவர், இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:15 நிமிடமளவில் வடபழனியில் தமிழகத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு எதிரே உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ மூட்டிக்கொண்டார்.

டெஸ்ட்

நரேஷ் குப்தாவுக்கு மருத்துவ பரிசோதனை இது என்ன பெரிய நியூஸ் என்று கேட்பவர்களுக்கு ...

தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று காலை 10 மணியளவில் சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

பின்னர், அவர் டீன் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நிர்வாகம் சார்பில் டீ, பிஸ்கெட் வழங்கப்பட்டது. அதை அவர் வாங்கி குடிக்க மறுத்து விட்டார். இது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பின்னர், நரேஷ் குப்தா மருத்துவமனையில் உடல் முழுவதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனைகளை முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பயன்படுத்தத் தொடங்கினால், அவை மேலும் மேம்படும் என்று போன மாசம் ஞாநி எழுதியது நினைவிருக்கலாம்

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்! அந்தக் கதையாக, பா.ஜ.க. பிதமர் வேட்பாளர் அத்வானிக்கு தலித்துகள் மீது கரிசனம் வந்து விட்டது. டாக்டர் அம்பேத்கரின் 118வது பிறந்த நாளையொட்டி, "தலித் சேதன ரத யாத்திரை" ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.தேர்தல் வந்து விட்டாலே பா.ஜ.க.வுக்கு என்ன செய்வது என்றே புரியாது? ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு ரத யாத்திரை நடத்துவது பா.ஜ.க.வுக்கு வழக்கம். ஏற்கனவே நடத்திய "ரத யாத்திரைகள்

ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் .........
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

கருத்துகள் இல்லை: