இலங்கை அதிபர் ராஜபக்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்பேரில் தவறான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என்று கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கை:
போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாட்களாக அதிகமான படைகளை ராஜபக்ச கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்துவருகிறார்.
ஆனால் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகமே என்பது நிரூபணமாகிவிட்டது.
அன்னையர் முன்னணி அமைப்பு தலைவர் சரசுவதி தலைமையில் நூறு பெண்கள் ஈழத் தமிழர்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டார்கள். அனுமதி கிடைக்கவில்லை. தனியார் இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்று அவர்கள் ஒவ்வொரு இடமாகத் துரத்தப்பட்டு வருகிறார்கள்.
ஈழத் தமிழர்களை ராஜபக்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபக்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் இன்று வியாழக்கிழமை காலை 8:50 நிமிடமளவில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.
இதில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதல்களினால் மக்களின் 7 கூடாரங்கள் முற்றாக அழிந்து நாசமாகின.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையினதும் நட்டாங்கண்டல் மருத்துவமனையினதும் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் காயமடைந்தவர்களுக்கு 'திலீபன்' மருத்துவ சேவைப்பிரிவினரும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
மாத்தளன் மருத்துவமனைக்குச் செல்லும் வீதி படையினரின் கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதானால் காயமடைந்தவர்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மும்மொழிகளில் தயாராகும் ராவணா(அசோக வனம்) படத்தில் மணிரத்னம் முதலில் சீதையாக ஐஸ்வர்யா ராயை புக் செய்தார். பின்னர் ராமராக நடிக்க சாருக்கை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டார். முதலில் மறுத்த ஐஸ்வர்யா ராய் பின்னர் மணிரத்னத்திற்காக ஒப்புகொண்டார். சில படங்களிலிருந்து வெளியேறிய சாருக் இப்படத்தில் முதலில் நடிக்க ஆர்வம் காட்டினார். அச்சமயத்தில் இவர் நடிக்க சங்கர் இயக்குவதாக இருந்த ரோபோட்டும் கைவிடப்பட்டது. ஆனால் மணிரத்னம் மொத்தமாக ஆறுமாததிற்கு கால்ஷீட் கேட்டார். சாருக் அதற்குள் "ரப் னே பனா தி ஜோடி" என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். அதனால் ராவணாவில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தனது வருத்தத்தை வெளியிட்டிருந்தார். சாருக் நடிக்கமுடியாததால் ஐஸ்வர்யாராய் மணிரத்னத்திடம் பேசி ராமர் ரோலை தனது கணவருக்கு வாங்கிக் கொடுத்துவிட்டார். இனிவரும் காலத்தில் மணிரத்னத்னம் மற்றும் ஐஸ்-டன் இணைய ஆவலாக உள்ளதாக சாரூக் தெரிவித்துள்ளார்.
* அசல் பட போஸ்டர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்...அஜித்தின் டான் கெட்டப்..டான்-ஆக தோன்றும் அஜித் ஒரு தடவை கூட்டாளிகளுடன் டீலிங் நடத்தும்போது மொத்த கூட்டமும் கொலை செய்யப்படுகிறார்கள். இது எவ்வாறு நடந்தது என்பதை ஆராய "அசல்" அஜித் வருகிறார். * படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா அல்லது ஒரே வேடமா என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். * சிவாஜி ப்ரொட்க்ஷ்ன்ஸ்-க்காக முதன்முறையாக பாடலெழுதுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து. * இப்படத்தின் இசையமைப்பாளர் பரத்வாஜ் அஜித்தின் காதல்மன்னன் மூலமாக தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர். இதே கூட்டணியில் உருவான அமர்க்களம் பரத்வாஜின் 25-வது திரைப்படம். இப்போது அசல் பரத்வாஜின் 50-வது திரைப்படமாகும். இதனால் இதுவும் சிறப்பாக அமைய பரத்வாஜ் சிரமேற்கொண்டுள்ளார். * "வில்லன் " வெற்றிப்படத்திற்கு வசனமெழுதிய யூகி சேது இப்படத்திற்கும் வசனமெழுதுகிறார். -- அனைத்து செய்திகளும் ஒரு வெற்றிப்படத்தின் அறிகுறியாக தெரிவதால் இக்கூட்டணி வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம்!! தல-ன்னா சும்மாவா?
திலீப்புடன் நடிக்கும் பாடிகாட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஒத்த பாலத்திற்கு வந்திருந்தார் நயன்தாரா. எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் அங்குள்ள கோயில்களுக்கு செல்லும் பழக்கமுடைய நயன் ஒத்த பாலத்திலுள்ள கோயிலுக்கு சென்றிருக்கிறார் .அந்த கோயிலுக்குள் பெண்கள் சேலை அணிந்துதான் செல்ல வேண்டுமாம். ஆனால் நயன் சூடிதார் அணிந்து சென்றிருந்தார். கோயில் நிர்வாகிகள் அவரை தடுக்க , இவரோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார். உடனே அங்கிருந்த பக்தகோடிகள் அவரை சூழ்ந்து கொண்டு சிறைபிடித்துவிட்டனர். நயன் படப்பிடிப்பு குழுவினருக்கு போன் போட்டிருக்கிறார். படப்பிடிப்பு குழுவினர் வந்து நயனின் அருமைபெருமைகளை எடுத்துச்சொல்லியும் நயன்தாராவை ஜனங்கள் விடுவதாயில்லை. இறுதியில் கோயில் நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டு நழுவிவிட்டார். சினிமாவில் டூ-பிசில் வலம் வந்தவரை சுடிதாரில் வந்ததற்காக மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். சாமிக்கே வெளிச்சம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக