இப்படங்களை பாருங்கள்…
சில நிமிடங்களில் தயாரிக்கப்பட்டவை.
மூக்கை இழுக்க…
வாயை பெரிதாக்கா…
கண்ணை அச்சுறுத்தும் வகையில் உருவாக்க….
நான் மரியாதைகுறிய "புஷ்" படத்தை போட்டோஷாப்பில் திறந்துள்ளேன்.
1. Filter____ 2.Liquify
பில்டருக்கு சென்று லிக்யுபை யை தேர்வு செய்யுங்கள்.
ஒரு விண்டோ உடனே திறக்கும். நாம் தேர்வு செய்த படம் உள்ளே.
எண் 1. குறியிட்ட கருவி (Tool) குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்து இழுத்தால்… அதாவது முக்கு நீண்டு வரும்.
எண் 2. குறியிட்ட கருவி (Tool) குறிப்பிட்ட பகுதியை பெரிதாகும் பலூன் போல…
மேற்கண்ட செயல் முடிந்ததும் ஒகே… சேமியுங்கள்.
உங்கள் மின் அஞ்சம் மற்றவர்களை மிரட்டட்டும். சிரிக்கவைக்கட்டும்… உங்கள் பிளாக்கில் இப்படிப்பட்ட படங்களை பார்க்கலாமா?
அவ்வளவுதான்…

இன்னிக்கு காலைல நிகழ்ச்சி பண்றப்போ போன் வந்தபடி இருந்திருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சில சுபவீ என்னோட கதையான "அடையாளம் " பத்தி பேசிருக்கார்.எப்பவும் நிகழ்ச்சி சமயம் தொலைபேசியை உபயோகப்படுத்த முடியாததால எனக்கு இந்த விபரம் ஒன்பது மணிக்கு தான் தெரிய வந்துச்சு.சந்தோஷமாயிருந்துச்சு. அந்த கதை எங்கப்பாவோட சைக்கிள் தொலைஞ்சிப் போனப்ப எழுதின கதை.
பாளையங்கோட்டை ஸ்டேட் பாங்க முன்னால நிறுத்திட்டு பணம் எடுத்துட்டு வர்றதுக்குள்ள சைக்கிளைக் காணவில்லை. அப்பா அங்க இங்கனு எல்லா இடமும் தேடிப் பார்த்துட்டு ஒரு பொதுசனம் சொன்னார்னு போலீஷ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கப் போனப்ப அவர் = எதுக்கு சார் வீணா புகார்லாம். எப்படியோ ஏதாச்சும் பழைய சைக்கிள் ஒண்ணத் தான் காட்டி கேக்கப் போறோம்னாராம். அதுக்கு நீங்க ஒரு புது சைக்கிளே எடுக்கலாம்னாராம்.அவரோட நேர்மையான பேச்சுக்கு இந்திய இறையாண்மையின் சார்பில் ஒரு சலாம்.
அப்பாவுக்கு அந்த சைக்கிள் எவ்ளோ முக்கியம்னு எனக்கு நல்லா தெரியும். ராஜ்தூத் பைக், பியட், அப்புறமா மாருதிலாம் வாங்கினா கூட அவர் கஷ்டப்ப்ட்டு வாங்கின முதல் வாகனம் அதுவே.திண்டிவனதுல நல்லா வாழ்ந்த குடும்பம் அப்பாவோடது.தாத்தா அங்க டி.எஸ்.பியா இருந்தவர். ஹார்ட் அட்டாக்ல தாத்தா இறந்தப்பிறகு தான் அப்பா தலைல குடும்ப பொறுப்பு மட்டுமில்ல. தாத்தா வச்சுப் போன கடனும்.
நிறைய கஷ்டப்பட்டிருக்கார் அப்பா. பசியில் பஸ் டிக்கெட்டுக்கு காசில்லாம மெட்ராஸ்ல அவர் நடந்த நாட்கள், எம்சிசில காலேஜ் பீசைக் கட்ட உதவிய எபி மாமா,ஜேபஸ் மாமா எல்லாரையும் பத்தி அவர் ஒரு நாள் மின்சாரம் போன ராத்திரியில் முற்றத்தில் வச்சி சொன்னப்ப அமைதியா அழுதேன். நல்லவேளை மின்சாரமில்லை.அப்புறமா மார்த்தாண்டத்துல கல்லூரி பேராசிரியரா வேலை பாக்குற்ப்ப சுவர்முட்டி குடிச்சதுல இருந்து அத்தை கல்யாணத்துக்காக வாங்கின கடன் வரைக்கும் அப்பா என் கிட்ட எலலாமுமே சொல்லிருக்கார்.அப்பாவுக்கு கல்யாணம் ஆனப்ப அவருக்கு முப்பதிரண்டு வயசு. அப்புறமா அம்மா அன்னை உண்டாகி இருந்தப்ப அப்பா வாங்கினது தான் இந்த ராலே சைக்கிள்.அதை ஜங்ஷன்ல வாங்கிட்டு அம்மாவை வச்சு பெருமாள்புரம் வரைக்கும் அப்பா அழுத்திட்டு வந்தாங்களாம்(அந்த காலத்து அண்ணாமலை டூயட்னு அப்பாட்ட கிண்டல் பண்ணிருக்கேன்)
அப்பா அத ஒவ்வொரு நாள் ராத்திரியும் வீட்டுக்குள்ள நிறுத்துறதே ஒரு நாளின் முடிவாய் எங்க வீட்டுல இருந்துச்சு. அப்புறமா லைட்டை அணைச்சிட்டு தூஙகிடுவோம்.
சைக்கிள் தொலஞ்சப் பிற்கும் எங்க நாட்கள் முடிந்தப்படியும் கழிந்தப்படியும் தான் இருந்தது.ஆனா கூட அந்த சைக்கிளை அப்பா நிறுத்தும் இடத்தின் வெறுமை எங்களை பல நாள் அலைகழித்தப்படி இருந்தது.
அந்த சைக்கிளின் கேரியரில் உட்கார வைத்து தான் அப்பா என்னை ஸ்கூலுக்கு,மார்க்கெட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்கார்.இந்திரா காந்தி மிலிட்டரி லைனுக்கு வந்தப்போ கூட்டிட்டுப் போயிருக்கார்.
(இந்திரா காந்தி கூடயே நான் போட்டாபானு கேட்டேனாம் அப்ப. மிசா பத்தி அப்பா என் கிட்ட சொன்னது அப்பத் தான்)இந்த ஞாபகங்களைத் தூண்டி விட்ட சுப.வீக்கு மனமார்ந்த நன்றி.
கதை படிக்க அக்கக்கா குருவிகள் தொகுப்பு--

ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முகவை குமாரை (அதாங்க ரித்தீஷ்!) பாராளுமன்ற உறுப்பினராக நிற்க வைத்து மக்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் மு.க. தேர்தலில் ஜெயிக்கலைன்னா மீண்டும் அண்ணாச்சி நடிக்க வந்திடுவாருல்ல? ஒரு மாநிலத்துக்காக ஒரு தொகுதி பலியாவுறது தப்பில்ல மக்கா.

நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக