இந்த வலைப்பூவின் 'மேல்-வலது' பகுதியில் ஷீரடி சாய் பாபாவின் படம் போட்டு கிளிக் செய்தால், மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஷீரடி பாபா கோவிலிலிருந்தே Live Relay தர்ஷன் தெரியும்படி செட் செய்தேன்.
அந்தப் பக்கம் 'Windows Media Player 9 or above' வேண்டும் என்று கேட்டது. லிங்க் ரெடியாக கொடுத்து இருந்தார்கள்.
உடனே, லைன் ஸ்பீட் check செய்து ஸ்பீடா இருந்தா, இப்பவே டவுன்லோடு செஞ்சுக்கலாம். ஸ்லோவா இருந்தா ராத்திரி பார்த்துக்கலாம்னு, கூகிள்லே போய் "Broadband Speed Test"ன்னு அடிச்சேன்.
வந்த links திருப்தியாக இல்லை. முழித்துக் கொண்டு இருந்தபோது, Intel கூட Broadband Speed Test சர்வீஸ் கொடுக்கிறதா எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தது.
அப்படி பிடித்ததுதான் இந்த Link - Intel Broadband Speed Test .

டெஸ்ட்டுக்காக upload/download பண்றேன்னு, பேர் தெரியாத வெப்சைட் malware, virus-னு கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணிட்டா, நான் எங்கே போறது.
அதுக்குத்தான், Intel மாதிரி நம்பகமான வெப்சைட்களை பயன்படுத்துவது நல்லது என்று தோன்றுகிறது.
கொசுறா, File Size கொடுத்துட்டா, அது டவுன்லோடு ஆக எந்த டைப் கனெக்ஷனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னும் கணக்கு போட்டு சொல்லிடுது.

ஜாலி, ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்!
அப்படியே, February மாத பதிவுகளையும் இதுவரை பார்க்கலேன்னா பார்த்துருங்களேன்.
.

' நான் பக்கத்திலே இருக்க செல்போன் ஷோரூம் வரைக்கும் போயிட்டு வந்துடறேங்க . இன்னிக்கி ஃப்ரீ டெமோ காட்டறாங்களாம். பேப்பர்லே விளம்பரம் வந்து இருக்கு', சொல்லிக்கொண்டே கிளம்பினாள் என் மனைவி, சரியான செல்போன் ஜொள்ளி.

'எந்த போன் பார்க்கப்போற?' என்றேன்.
'நோக்கியா N95'.
'அப்ப பார்க்கத்தான் போறே. வாங்கப் போறதில்லைதானே?' என்று கிண்டல் செய்துகொண்டே, 'நான் முன்னாடியே டெமொ பார்த்தாச்சேடி!'
'அப்படியாங்க! போனதை, சொல்லவே இல்லியே. என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே'.
'நோக்கியா N95 மட்டும் இல்லே. ஆப்பிள் ஐ-போன், பிளாக்பெர்ரி பேர்ல், மோடரோலா ரேஸர் எல்லாம் டெமோ பார்த்தேன்.
அய்யோ! அதேல்லாம் காஸ்ட்லி போனாச்சே? ஆப்பிள் ஐ-போன் எல்லா இடத்திலேயும் கிடைக்காதே?
அது மட்டும் இல்லே. மொத்தம் 15 போன் பார்த்தேன். பிடிச்ச போனோட மெனுவையும் தட்டிப்பார்த்துட்டுதான் வந்தேன். வால்பேப்பர் மாற்றச் சொல்லிப் பார்த்தேன். Safari browser லோட் பண்ணச் சொல்லிப் பார்த்தேன்.
ஏதோ ஒன்னு ரெண்டு போன்தானே சேல்ஸ்மேன் காட்டுவாரு. நிறைய கேள்வி கேட்டா முறைப்பாங்களே? அதெல்லாம் அவங்க டெமோ காமிச்சாங்கன்னு பேச்சுக்கு வெச்சிக்கிட்டா கூட, நீங்க எதுவும் வாங்காம வரமுடியுமா என்ன? நீங்க சொல்ரதைப் பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு.
ஆங்.. கண்டுபுடிச்சிட்டேன். இன்னிக்கி ஏப்ரல் 1. என்னை ஏப்ரல் ஃபூல் ஆக்குறீங்க.
'நிச்சயமா இல்லை'.
அவளை Tryphone.com கூட்டிக் கொண்டு போனேன்.
இந்த வெப்சைட்டில் 15 செல்போனின் picture போட்டு வெச்சு இருக்காங்க. அது சாதாரண picture இல்லே, virtual handsets.
நம்ம செல்போன்லே ஒவ்வொரு மெனுவையும் தட்டும்போது screen எப்படியெல்லாம் மாறும், Call பட்டன் press செய்தால் என்ன அனிமேஷன் வரும், இதெல்லாம் கம்ப்யூட்டர் screen-லேயே தெரியற மாதிரி program செய்து இருக்கிறார்கள்.

மெஸேஜ் அனுப்பறது எப்படி, வீடியோ எடுப்பது எப்படின்னு முக்கியமான topic எல்லாத்துக்கும் டெமொ வெச்சிருக்காங்க.
Play கிளிக் செய்து ஒவ்வொன்னையும் பார்த்துக்க வேண்டியதுதான்.
உண்மையான போனில் என்ன display வருமோ அதே மாதிரி இதில் வருவதுதான் சிறப்பு.
வழக்கம் போல specs, comparison, reviews கூட பார்த்துக்கலாம். அப்...பு....ற.......ம்... சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, நாற்காலி, கீபோர்ட், மவுஸ் என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது.
' ரகசியத்தை சொல்லிட்டீங்க இல்லே. கிளம்புங்க . இனிமே நான் பார்த்துக்கிறேன்.' சொன்னது என் மனைவி.
ம்ம்ம்ம்.. என் நிலைமையை பார்த்தீர்களா.
இந்த ஐ-போனை கிளிக் அடிச்சி பாருங்களேன்.

'எந்த போன் பார்க்கப்போற?' என்றேன்.
'நோக்கியா N95'.
'அப்ப பார்க்கத்தான் போறே. வாங்கப் போறதில்லைதானே?' என்று கிண்டல் செய்துகொண்டே, 'நான் முன்னாடியே டெமொ பார்த்தாச்சேடி!'
'அப்படியாங்க! போனதை, சொல்லவே இல்லியே. என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே'.
'நோக்கியா N95 மட்டும் இல்லே. ஆப்பிள் ஐ-போன், பிளாக்பெர்ரி பேர்ல், மோடரோலா ரேஸர் எல்லாம் டெமோ பார்த்தேன்.
அய்யோ! அதேல்லாம் காஸ்ட்லி போனாச்சே? ஆப்பிள் ஐ-போன் எல்லா இடத்திலேயும் கிடைக்காதே?
அது மட்டும் இல்லே. மொத்தம் 15 போன் பார்த்தேன். பிடிச்ச போனோட மெனுவையும் தட்டிப்பார்த்துட்டுதான் வந்தேன். வால்பேப்பர் மாற்றச் சொல்லிப் பார்த்தேன். Safari browser லோட் பண்ணச் சொல்லிப் பார்த்தேன்.

ஆங்.. கண்டுபுடிச்சிட்டேன். இன்னிக்கி ஏப்ரல் 1. என்னை ஏப்ரல் ஃபூல் ஆக்குறீங்க.
'நிச்சயமா இல்லை'.
அவளை Tryphone.com கூட்டிக் கொண்டு போனேன்.

நம்ம செல்போன்லே ஒவ்வொரு மெனுவையும் தட்டும்போது screen எப்படியெல்லாம் மாறும், Call பட்டன் press செய்தால் என்ன அனிமேஷன் வரும், இதெல்லாம் கம்ப்யூட்டர் screen-லேயே தெரியற மாதிரி program செய்து இருக்கிறார்கள்.

மெஸேஜ் அனுப்பறது எப்படி, வீடியோ எடுப்பது எப்படின்னு முக்கியமான topic எல்லாத்துக்கும் டெமொ வெச்சிருக்காங்க.
Play கிளிக் செய்து ஒவ்வொன்னையும் பார்த்துக்க வேண்டியதுதான்.
உண்மையான போனில் என்ன display வருமோ அதே மாதிரி இதில் வருவதுதான் சிறப்பு.
வழக்கம் போல specs, comparison, reviews கூட பார்த்துக்கலாம். அப்...பு....ற.......ம்... சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, நாற்காலி, கீபோர்ட், மவுஸ் என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது.
' ரகசியத்தை சொல்லிட்டீங்க இல்லே. கிளம்புங்க . இனிமே நான் பார்த்துக்கிறேன்.' சொன்னது என் மனைவி.
ம்ம்ம்ம்.. என் நிலைமையை பார்த்தீர்களா.
இந்த ஐ-போனை கிளிக் அடிச்சி பாருங்களேன்.
"ஜவ்வு மாதிரி இழுக்காதே. சொல்ல வேண்டியதை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டுப் போ."
இந்த அறிவுரையை நாம் பல முறை கேட்டும் இருப்போம். சொல்லியும் இருப்போம்.
அதையே "அதிகபட்சம் 140 எழுத்துகளுக்குள், இன்டர்நெட்டில் சொல்லவேண்டும்" என்ற இன்னொறு restriction கொடுத்தால் அதுதான் "ட்விட்டர்".

ட்விட்டர் என்ன என்று கேட்பவரா நீங்கள்? என்னுடைய அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருங்கள். இந்தப் பதிவு ட்விட்டர் தெரிந்தவர்களுக்கு!
சோஷியல் நெட்வொர்க்கிங் மற்றும் மைக்ரோ-ப்ளாக்கிங் தளமான ட்விட்டருக்கு இன்று '3' வயது ஆகிறது.

"விஷயம் அவ்வளவுதானா" என்று கேட்பவர்கள், இந்த பதிவின் முதலிரண்டு வரிகளை திரும்ப படிக்கவும்.
.
இந்த வலைப்பூவில் உள்ள 3 பதிவுகளை சென்னையில் இருந்து வெளியாகும் "தமிழ் கம்ப்யூட்டர்" பத்திரிகை, தன் மார்ச் 16-31, 2009 இதழில் 34-ம் பக்கம் முழுக்க என் அனுமதி இல்லாமல் "வலைப்பூங்காவில் பறிக்கப்பட்ட செய்திப்பூக்கள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த வலைப்பூவில் இருந்து எடுத்தது என்றுகூட ரெஃபரன்ஸ் கொடுக்கவில்லை.
இந்த நிலை தொடராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
மனைவி, மக்களுக்கு கூட நேரம் ஒதுக்காமல் பதிவு சிறப்பாக வர வேண்டும் என்று பகல், இரவு பாராமல் உழைத்த எனக்கு இது கசப்பாக இருக்கிறது. மேற்கொண்டு பதிவு எழுத மனம் தயங்குகிறது.
இது பற்றி சட்டம் தெரியாத நான், என்ன செய்வது என்பதை உங்களிடம் கேட்கிறேன்.
அறிவுரை சொல்வீர்களா?
வருத்ததுடன்,
பிரபு

என்ன பொருத்தம், நமக்குள் என்ன பொருத்தம்
காதலெனும் நாடகத்தில் கல்யாணம் சுபமே!
காதலெனும் நாடகத்தில் கல்யாணம் சுபமே!
என்று பாடிக்கொண்டிருந்த என்னிடம், ஓடி வந்தாள் என் மனைவி.
'என்னங்க.. நீங்க பாடறதைக் கேட்ட பிறகுதான் ஞாபகம் வருது. உங்க மொபைலைக் கொடுங்களேன்.'
'எதுக்குன்னு முதல்ல சொல்லு.'
'காதல் பொருத்தம் பார்க்க ஜோடியின் பேரை SMS அனுப்பிச்சா, எவ்வளவு பொருத்தம்னு சொல்லுமாம். பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். என் அண்ணனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கே. போட்டுப் பார்க்கலாம்னுதான்.'

'நீங்க எப்பவுமே இப்படித்தான். ஆசைக்குப் போட்டு பார்க்கிறேனே.'
'ஏதோ ஒரு சேனல்ல கூடதான் இப்படி விளம்பரம் வருது. நான் என்னிக்காவது நம்ம பொருத்தம் இப்படி பார்த்து, காசை கரியாக்கி இருக்கேனா? இன்டெர்நெட்டில் ஃப்ரீயா பார்த்துக்கலாமே.'
'அப்படியா! எனக்கு யாருமே சொல்லவே இல்லியே.'
அவளை http://www.lovecalculator.com/ கூட்டிக் கொண்டு போனேன்.
அவ்வாறே, MGR & Nambiar போட்டால் 'ஜீரோ' சதவீதம் வந்தது.
மற்ற பொருத்தங்கள் பார்த்ததில் சில,
cat & rat 0%
India & Pakistan 1%
microsoft & open source software 1%
microsoft & monopoly 93%
இதற்குள், " அப்படி என்னதான் இன்ட்ரெஸ்டா பார்த்துட்டு இருக்கீங்க"ன்னு பக்கத்து ஃப்ளாட் மாமி வந்து அவங்க பங்குக்கு ஃப்ரீயா பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
அரை மணி நேரத்தில் எல்லா ஃப்ளாட்டுக்கும் நியூஸ் பரவி, ஒரு குட்டி கும்பலே வந்துடுச்சின்னா பார்த்துக்குங்களேன்.

எனக்கும், உங்களுக்கும், பலருக்கும் உடனே ஞாபகம் வரும் பல பிரபல ஜோடிகள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பகைவர்கள் லிஸ்ட்டை போட்டுப் பார்த்தாலும், ஹிட்சுக்கு ஆசைப்பட்டு தரம் தாழ்த்திக்க வேண்டாமேன்னு, ரிசல்ட்டை சென்சார் பண்ணிட்டேன்.
உங்களுக்கு இஷ்டமானதை நீங்களே போட்டு பார்த்துக்குங்க.
Disclaimer: குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் பொழுதுபோக்கிற்கும், விளையாடிற்கும்தான். அப்படியே நம்பி உங்கள் பொன்னான வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டாம்.
உங்களுக்கே தெரியும். சுதந்திர மென்பொருள் Firefox browser Search Bar-ல் default ஆக கூகிள்தான் இருக்கிறது.
Search bar-ன் down arrow-வை கிளிக் செய்து யாஹூவையோ, விக்கிபீடியாவையோ செலக்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மெனுவில் மைக்ரோசாஃப்டின் search engine http://www.live.com/ இருக்காது.
வேண்டுமென்றால் Address Bar-ல் live.com அடித்து அங்கே போய் தேடலாம். ஆனால் கீபோர்டு ஷார்ட்கட் Control+K பயன்படுத்தினால் cursor நேரா search bar போய் விடும் வசதி இருக்கும்போது எத்தனை பேர் மற்ற search engines போவார்கள்?
இதனால் Firefox பயன்படுத்துபவர்களில் பலர் கூகிளிலும், சிலர் யாஹூவிலும்தான் தேடுகிறார்கள்.
முதலில் அவ்வளவாக கண்டுகொள்ளாத மைக்ரோசாஃப்ட், firefox அதிக சந்தைப் பங்கு பெற்றவுடன் விழித்துக் கொண்டது.

Search engine பிசினஸ் இப்போது ஒரு prestige issue-வாக மாறி விட்டது. Market Share-க்கு ஏற்ப விளம்பர வருமானமும் அதிகரிப்பதால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை.
இப்படியே விட்டால் firefox-ல் இருந்து தன் search engine "live.com" வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமோ, என்று கவலைப்பட்ட மைக்ரோசாஃப்ட், சுலபமாக live.com வர firefox-க்கு வழி செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது.
இதற்காக official-ஆ Microsoft Live Search add-on (extension) புரோகிராம் எழுதியது.
இதை Mozilla Link-ல் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதை இன்ஸ்டால் செய்தவுடன், search bar down arrow-வை அழுத்தி live.com செலக்ட் செய்து கொள்ளலாம்.
இப்போ, வெறும் Control+K அடித்தால் live.com தேடல் ரெடி.

போனஸாக, கூகிள் ஸ்டைல் autosugget-ம் வருகிறது.
யார் நினைத்து இருப்பார்கள். இப்படி firefox-க்கு மைக்ரோசாஃப்ட் addon எழுதும் என்று.
எதிரி வளர்ச்சி அடைத்தாலும், அவனது வெற்றியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பாடத்தை மைக்ரோசாஃப்டிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

Search bar-ன் down arrow-வை கிளிக் செய்து யாஹூவையோ, விக்கிபீடியாவையோ செலக்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மெனுவில் மைக்ரோசாஃப்டின் search engine http://www.live.com/ இருக்காது.

இதனால் Firefox பயன்படுத்துபவர்களில் பலர் கூகிளிலும், சிலர் யாஹூவிலும்தான் தேடுகிறார்கள்.
முதலில் அவ்வளவாக கண்டுகொள்ளாத மைக்ரோசாஃப்ட், firefox அதிக சந்தைப் பங்கு பெற்றவுடன் விழித்துக் கொண்டது.

Search engine பிசினஸ் இப்போது ஒரு prestige issue-வாக மாறி விட்டது. Market Share-க்கு ஏற்ப விளம்பர வருமானமும் அதிகரிப்பதால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை.
இப்படியே விட்டால் firefox-ல் இருந்து தன் search engine "live.com" வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமோ, என்று கவலைப்பட்ட மைக்ரோசாஃப்ட், சுலபமாக live.com வர firefox-க்கு வழி செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது.
இதற்காக official-ஆ Microsoft Live Search add-on (extension) புரோகிராம் எழுதியது.
இதை Mozilla Link-ல் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதை இன்ஸ்டால் செய்தவுடன், search bar down arrow-வை அழுத்தி live.com செலக்ட் செய்து கொள்ளலாம்.
இப்போ, வெறும் Control+K அடித்தால் live.com தேடல் ரெடி.
போனஸாக, கூகிள் ஸ்டைல் autosugget-ம் வருகிறது.
யார் நினைத்து இருப்பார்கள். இப்படி firefox-க்கு மைக்ரோசாஃப்ட் addon எழுதும் என்று.
எதிரி வளர்ச்சி அடைத்தாலும், அவனது வெற்றியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பாடத்தை மைக்ரோசாஃப்டிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
ஆதரவும் ஆலோசனையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி,
Copyright Notice இப்போது பிளாகில் சேர்த்துள்ளேன்.
அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்.