புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

எல்லோருக்கும் (அநேகமாக) Facebook என்றால் என்ன என்று தெரியும். ஆனால் செல்வந்தர்கள் மட்டுமே இணைந்து கொள்ளக்கூடிய www.affluence.org/ பற்றித் தெரியுமா?

பல சமூக வலைப்பின்னல்களைப் பேணும் தளங்கள் சகலரும் தங்களை இணைத்து கொள்ள வாய்ப்பு வழங்குவது தானே பெரும்பாலும் நாம் கண்டுவருவது. ஆனாலும் அதற்கு நேர்மாறாக www.affluence.org/ என்ற இந்தத் தளமானது "The exclusive organization of the world's wealthiest people." என்ற வாசகம் தாங்கி நீங்கள் ஒரு செல்வந்த பிரபு என்று நிரூபித்தால் மட்டுமே இணைந்து கொள்ள அனுமதிக்கிறார்கள். (ஆனால் இணைந்துகொள்ள கட்டணம் இல்லை – இலவசமானது.)

இந்தத் தளமானது கடந்த வருடம் புரட்டாதி (September) மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 20,000 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது. அங்கத்துவராக இணைய விரும்புபவர் $3 மில்லியன் பெறுமதியான சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று நிரூபிக்கவேண்டும் அல்லது குறைந்தபட்ச ஆண்டு வருமானம் $300,000 ஆக இருக்கவேண்டும்.

சரி கனக்க யோசிக்காதீங்க… இணைய முடியாவிட்டாலும் ஒரு தடவை போய் பாருங்கோ… (யாராவது உலகின் ஏழைகள் மட்டுமே இணையக்கூடிய தளம் ஒன்றை ஆரம்பியுங்கோ பார்ப்போம்… நடந்தமாதிரி தான்… ;0) )

 

Source : Metro,London

வணக்கம் நண்பர்களே,

வழமையாக என் பஞ்சாமிர்தம் வ.பூவிற்கு வருகின்ற நண்பர் ஒருவர் "எப்படி அதில் இடம்பெறும் YouTube காணொளிகளைத் தரவிறக்கலாம்?" என்ற கேள்வியோடு தனிமடலில் தொடர்பு கொண்டார். அவரின் கேள்விக்கு தனியாகப் பதில் சொல்லாமல் வேறு சிலருக்கும் உதவலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை இடுகின்றேன்.

தரவிறக்கம் செய்வதற்கு உதவும் வகையில் பல இணையத்தளங்கள் உள்ளன.

- இந்தத் தளத்தில் நீங்கள் தரவிறக்கவேண்டிய காணொளியின் முகவரியை கொடுத்தால் போதுமானது. காணொளிகளை .flv (Flash Video) கோப்பாகவோ அல்லது .mp4 கோப்பாகவோ சேமிக்கலாம்.

இப்படிப் பல தளங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை விட நீங்கள் உங்கள் கணினியில் Realplayer ஐ நிறுவி இருந்தால் தரவிறக்கலை மேலும் இலகுவாகச் செய்யலாம். நீங்கள் செய்யவேண்டியது தரவிறக்கவேண்டிய காணொளியின் மீது வலது பக்கமாகச் சொடுக்குவதன் மூலம் வரக்கூடிய பட்டியலில் "Download This Video To RealPlayer" என்பதை அழுத்துவது மாத்திரமே. (RealPlayer ஐ நிறுவியிருத்தல் அவசியம்.)

realPlayer

இதனைத் தவிர, நீங்கள் நெருப்பு நரி(Firefox) இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின், உங்களுக்காகவே பல Add-ons கொட்டிக்கிடக்கிறது. குறிப்பிடத்தக்க ஒன்று : Video DownloadHelper (இப்படி இன்னும் பல… முயன்று பாருங்கள்… நல்லதாக இருந்தால் அடியேனுக்கும் அறியத்தாருங்கள்…)

உதவிக் குறிப்பு:

நீங்கள் .flv கோப்பாகத் தரவிறக்கினால் அதனைப் பார்வையிட Flash Video Player ஐ தரவிறக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு வகையில் இந்தப் பதிவு உங்களுக்கு உதவியிருப்பின் ஒரு வார்த்தை எழுதுங்கள்…

Google இன் Street View பற்றி சிலர் அறிந்திருக்கலாம். அறியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கத்தை சொல்லிவிட்டு விசயத்திற்கு வருவம்…

Street View என்றால் என்ன?

Google Maps மற்றும் Google Earth இன் உள்ளமைந்த பகுதியாக விளங்கும் இது, உலக நாடுகளின் வீதிகளை, 360 பாகையில் படம்பிடிக்கக்கூடிய கமெராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு (சரியான சொற்றொடர் பயன்படுத்தியுள்ளேனா தெரியல.) என்ன விசேஷம் என்றால் நீங்கள் ஒரு வீதியில் நடந்து செல்கின்ற உணர்வு உங்களுக்குத் தோன்றும். அண்மையில் இலண்டன் நகரின் வீதிகளின் காட்சியை அதிகாரபூர்வாக Google நிறுவனம் வெளியிட்டது. அங்க தான் வந்தது வம்பு…

என்ன விசயம்?

Street View இற்காக படம் எடுக்கப்பட்ட சமயத்தில் சாலைகளில் யார் நடந்துசென்றார்கள், எந்த கார் எந்தப்பக்கமாகப் போனது போன்ற பல நீங்கள் பார்க்கும் போது உங்கள் கண்ணுக்கு தென்படலாம். (வில்லங்கமான சிலவும்) சாலைகளில் செல்பவர்களின் முகங்கள் மற்றும் கார் இலக்கத்தகடு ஆகியன தெரியாதவாறு மறைக்கப்பட்டுள்ளது என்று Google சொன்னாலும் அது முழுக்க உண்மையில்லை. Street View ஐ பார்த்துக் கொண்டிருந்த இலண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் Range Rover கார் பெண் நண்பியின் வீட்டுக்கு வெளியே நிற்பாட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். அதனால் என்ன என்று தானே கேட்கிறீங்க? அதாவது அந்தப் படம் எடுக்கப்பட்ட திகதியில் அந்தப் பெண்ணின் கணவன் வியாபார விடயமாக வெளியே செல்வதாக சொல்லிச் சென்றது தான் பிரச்சனைக்கு காரணம். இதனால் அந்தப் பெண் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார். (பாவம் Google என்ன செய்யும்? )

2007 ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை அண்மையில் இலண்டனில் அறிமுகப்படுத்தப்ட்டதன் பின் பலர் இரகசியத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் தர்மசங்கடமான நிலையில் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை புதிய பிரச்சனைகள் வருமோ தெரியல… ?

[Google இற்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்தச் சேவையை இலங்கைக்கும் விஸ்தரிச்சால் நன்றாக இருக்கும்… பல வில்லங்கங்கள் தெரியவரலாம்… ]

 

Source : Metro,London

வணக்கம் நண்பர்களே,

உங்கள் வீட்டில ஒரு கணினி அதோடு இணைய இணைப்பு வேற… நீங்க பல மாதிரியான இ.பக்கங்களுக்கு சென்று வாறீங்க… (ஒரு மாதிரிப் பக்கங்களும் உள்ளடங்கலாம்.;-) ) எல்லாம் முடிந்த பிறகு நீங்க உங்க வேலையை பார்க்க… உங்க பிள்ளையும் அதே கணினியை பயன்படுத்துது… ஏடாகூடமா எல்லாம் சில வேளைகளில் பக்கங்கள் முகத்தில் அறையும்… சில நேரம் தெரிந்து நடக்குது… பல சமயங்களில் தெரியாமல்…

இதற்காக பல பெற்றோர் தங்கள் இ.உலாவியில் பல கட்டுப்பாடுகளை கூட நிறுவியிருக்கிறார்கள்.

சரி விசயம் என்ன? இந்த அவஸ்தைகளை மறந்து என் குழந்தை அதற்கு தேவையான பக்கங்களுக்கு மட்டுமே சென்று வருது என்ற நிம்மதிப் பெருமூச்சோடு உங்க வேலையை நீங்க கவனிக்க விரும்பினால்…?

இதற்கு வழி குழந்தைகளுக்கான இ.உலாவியை உங்க கணினியில் நிறுவுவது…

KiDZUi – The internet for Kids என்ற சுலோகத்தோட காணக்கிடைக்கின்ற இந்த இ.உலாவி குழந்தைகளுக்கு பல விதங்களில் நன்மை செய்யும்.

kidzui

உங்கள் கணினியில் Kidzui ஐ நிறுவுதல்.

  • நீங்கள் தனியாக இயங்கும் மென்பொருள் போன்று நிறுவலாம். அல்லது நெருப்பு நரி(Firefox) இ.உலாவி பயன்படுத்துபவர்கள் இதனை ஒரு Add-on போன்றும் நிறுவலாம்.
  • நிறுவிய பின் பெற்றோர் அல்லது பொறுப்பாளர் தங்கள் பெயரில் ஒரு பயனர் கணக்கை தொடங்கவேண்டியது அவசியம்.

இது ஒரு குழந்தைகளுக்கான வடிக்கட்டப்பட்ட இ.உலாவி போல செயற்படுது. அவர்களின் வயது என்ன என்று ஆரம்பத்தில் பதிவு செய்து விட்டால் அந்த வயதினருக்கு தேவையான காணொளிகள், விளையாட்டுக்கள் போன்றவை காணக்கிடைக்குது.

Kidzui ஐ நிறுவ விரும்புபவர்கள் : இங்கே அழுத்தவும்

----------------------------------------------------------------------------

கொசுறுத் தளம் : http://www.starfall.com/ [குழந்தைகளுக்கு மட்டும் – என்ர புருஷன் குழந்தை மாதிரி என்று நினைப்பவர்களும் பயன்படுத்தலாம். ;0) ]



More than a Blog Aggregator

by வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
கறுப்பு...
நிறங்களின் தாய்
மற்றதெல்லாம் சேய்!

வண்ணக்கலவையின்
உச்சமிது
மற்றதெல்லாம் மிச்சமே!

நிறமிகளின் நிறையே
கறுப்பு
குறைபாடே வெண்மை!

இல்லாமையின் நிறம்
கறுப்பு
எல்லாமிருப்பதின் நிறமும்
கறுப்புதான்!

துக்கத்தின் நிறமென்று
யாரிதைச் சொன்னது?
தூக்கத்தின் நிறமென்றால்
அதில் உண்மையிருக்கும்!
தூக்கம் வந்தாலே
கரு'மை" பூசிய இமைகள்
கண்களுக்கு
கருமை போர்த்தும்!

வெண்மேகம்
கருமை சூடினால்
பூமியெங்கும்
பூப்பூக்கும்!

கருவண்டு
சுவைத்திடவும்
மலர்களெல்லாம்
தேன் வடிக்கும்!

கருமை மூடிய
இரவில்தான்
அடுத்த தலைமுறைக்கான
தேடல் நடக்கிறது!
கருவறை தொட்டு
உலகைக் காணும்வரை
கறுப்பின் கதகதப்புதான்
பாதுகாப்பே!

இயற்கையின்
தொலைக்காட்சியில்
பிறை நிலவும்
நட்சத்திரமும்
கருமை தந்த
அலுக்காத
நெடுந்தொடரல்லவா?!

வெண்மையை
ஆதிக்கமாகவும்
கருமையை
அடிமையாகவும்
வரலாறு பேசுகிறது!
இன்றோ
வெண்மையை
ஆதிக்கம் செய்கிறது
கறுப்பு!

கறுப்பாய் பிறந்ததற்கு
வருத்தப்பட்டால்
புன்னகை தொலைத்திருக்கும்
வைரம்!

கர்வப்படு;
கறுப்பாய் பிறந்ததற்கு...
சில நிமிடங்களாவது!
நண்பர் நட்புடன் ஜமாலின் சமீபத்திய "10 வரியில் தெரியாத கவிதை" பதிவையும் அதற்கான பின்னூட்ட எண்ணிக்கையையும் கண்டு டரியல் ஆகி மனம் நொந்து வலைகளில் உலாவிய போது தான் இந்த குளு, குளு படங்கள் கண்ணில் மாட்டியது..."நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக" என்ற கோட்பாட்டிற்கிணங்க உங்கள் பார்வைக்கு...




நான் தான் நமீதா...




ஹூம் அப்படி பாக்காதீங்க...வெட்கமா இருக்கு...





குளுகுளு படங்கள்...




நான் குளித்தால் தீபாவளி...ஹோய்...





நானும் பொண்ணு தாங்க...நம்புங்க


என்ன நண்பர்களே, கவர்ச்சி மழையில் நனைஞ்சீங்களா..? ( என்னங்க இப்படிகொலை வெறியோட பார்க்கறீங்க...இந்த மகாபாதகன் இவ்வளவு மோசமானவனா என்று நீங்க யோசிச்ச படி பதிவை ஓபன் பண்ணும் போதே யோசிச்சிருக்க வேண்டாமா.. இன்னிக்கு ஏப்ரல் ஒன்று என்று....

ENJOY THE APRIL FOOL DAY.......

கருத்துகள் இல்லை: