அயர்லாந்து தலைநகர் DUBLIN நகரில் அயர்லாந்து மக்களும், அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் இணைந்து முதன்முறையாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கணக்காண ஐரிஷ் மக்களும் அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர். அங்கு வருகை தந்த அயர்லாந்து சோஷலிச கட்சியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோ ஹிஜின்ஸ் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மற்றும் பலர் அங்கு உரையாற்றினர். புலிக்கொடியற்று மக்களுக்காக நடத்தப்பட்ட இன்னொரு போராட்டம் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுவது மட்டுமல்ல [...]
அணில் குட்டி அனிதா:- எங்க ஓனரை ஓவரா கலாய்ப்பதால் அவங்க இப்படி எல்லாம் ஐடியா செய்யறாங்க.. உஷார் உஷார்.... !!
சிபியின் தொல்லை தாங்கமுடியாமல் எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்தபோது சிக்கியது சிபியின் கன்னத்துக்குழி :-
1. இரவில் மின்சாரம் போய்விட்டால் , சிபியின் கன்னத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வீட்டுக்கு வெளிச்சம் தரலாம்.
2. மெழுகுவத்தி ஸ்டேன்டாக பயன்படுத்தலாம்..
3. அப்படியே சுட சுட உருகும் மெழுகை அதில் சேமித்து வைத்து , திரும்பவும் திரிப்போட்டு எரியவிடலாம்.
4.. சிமெண்டு குழைக்க பாண்டாக பயன்படுத்தலாம்
5. பெயிண்ட்ங் செய்யும் போது கலர் குழைக்க பயன்படுத்தலாம்.
6. தாளிக்க கரண்டி இல்லைன்னா. .சுடசுட எண்ணெய் காயவைத்து குழியில் ஊற்றி அதை தாளிக்க பயன்படுத்தலாம்
7. யார் சாமிக்கு வேண்டிக்கிட்டாலும் சிபி யின் வாயில் அலகு குத்தறேன்னு வேண்டிக்கிட்டு.. குழிக்கு குழி ..கம்பியை விட்டு அலகு குத்தலாம். குழியின் காரணமாக நீளம் குறைவான கம்பியே போதும்
8. தீபத்திருநாளில் சிபியின் கண்ணத்தையும் தீபமாக்கிவிடலாம்...
9. குண்டூசி, ஸேஃப்ட்டி பின் போட்டு வைக்கலாம் எடுக்கும் போது எல்லாம் ஒரு குத்து குத்தலாம்.
10. தீபாவளிக்கு ராக்கெட் விட ஸ்டான்டாக பயன்படுத்தலாம்
11. புஸ்வானம் கூட வைத்து விடலாம்
12. பாம்பு மாத்திரை குழிக்குள் போட்டு ஆசைத்தீர கொளுத்தலாம்
13. சுடச்சுட அவித்த வேர்கடலையை கொட்டி அதிலிருந்து எடுத்து சாப்பிடலாம் நம்ம கை சுடாமல் இருக்கும்.
14. லவுட் ஸ்பீக்கரை இரண்டு கன்னத்துக்குழியிலும் பிக்ஸ் செய்துவிடலாம்
15. நெல்லு, அரிசி குத்த பயன்படுத்தலாம்.
16. அந்த குழியில் சின்னதா மஞ்சல் வட்டம் போட்டு வில் வித்தை அல்லது துப்பாக்கி சுடும் பொழுது மார்க்கிங்ஸ்டேண்டாக பயன் படுத்தலாம்.
17.. பூரி, வடை சுட்டு மீந்த கொதிக்கும் எண்ணெயை கொதிக்க கொதிக்க ஊற்றி வைக்கும் பாத்திரமாக பயன் படுத்தலாம்
18. மிளகாய் அதிகம் போட்டு ஊறுகாய் போட்டு வைக்கும் ஜாடியாக பயன் படுத்தலாம்

????!
பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலையில் சேர்த்திருக்கிறது. 5,000 பேரை புதிதாக சேர்த்திருந்தாலும், அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,772 பேர் மட்டுமே கூடியிருக்கிறார்கள் என்றும் மீதி பேர் போய் விட்டார்கள் அல்லது அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் இன்போசிஸ் சொல்லியிருக்கிறது. மார்ச் 31,2009 கணக்குப்படி, இன்போசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் மொத்தம் 1,04,850 ஊழியர்கள் பணியாற்று வதாக தெரிவித்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் மொத்தமாக அது 28,231 ஊழியர்களை புதிதாக சேர்த்திருந்தாலும், வெளியே சென்றவர்கள் போக மீதி 13,663 பேர் அவர்களது ஊழியர்கள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார்கள். இன்போசிஸின் ஹெச்ஆர்டி மற்றும் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் பிரிவின் தலைவர் மோகன்தாஸ் பை இதனை தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்
ஆனந்த தாண்டவத்தைத் தொடர்ந்து ருக்மணிக்கு அடுத்த படம் கிடைத்து விட்டது. நான் என்ற படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடிக்கிறார் ருக்மணி.
பொம்மலாட்டம் மூலம் தமிழுக்கு வந்தவர் ருக்மணி. முதல் படத்திலேயே தனது முக வசீகரத்தால் அனைவரையும் ஈர்த்த ருக்மணி நடிப்பிலும் பலரது பாராட்டைப் பெற்றார்.
இதையடுத்து அவர் நடிப்பில் ஆனந்த தாண்டவம் வெளியாகியுள்ளது. அவரது வித்தியாசமான நடிப்பு பலரையும் கவர்ந்து விட்டதால் புதிய பட வாய்ப்புகள் ருக்கைத் தேடி ஓடி வருகின்றனவாம்.
தற்போது ருக்மணி, ஆனந்த தாண்டவம் நாயகன் சித்தார்த்துடன் தனி ஜோடியாக இணைந்து நான் என்ற படத்தில் நடிக்கிறார். ஜீவா சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஜீவாவின் முன்னாள் உதவியாளர் ஆவார்.
ஆனந்த தாண்டவம் படத்தின் கேமராமேனும் இவர்தான். இப்போது இயக்குநராகிறார். ஆனந்த தாண்டவத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனே நான் படத்தையும் தயாரிக்கிறார்.
இப்படம் ஒரு திரில்லர் ஆகும். விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
கடந்த மாதம் தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கார் விபத்தில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ள என் டி ராமாராவின் பேரனும் நடிகருமான ஜுனியர் என்டிஆர், படுத்தபடியே தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
பிரச்சாரம் வித்தியாசமாகவும் இருக்கும், அனுதாப ஓட்டுக்களையும் அள்ளும் வகையிலும் இருக்கும் என்பதால் அவரது மாமாவும் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுதான் இந்த ஐடியாவைச் சொன்னாராம்.
இப்போது ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜூனியர் என்டிஆர், சில நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார். மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நடக்க முடியவில்லை. அதேநேரம் தனது பிரச்சாரமும் இந்த தேர்தலில் இருக்க வேண்டும் என விரும்பினாராம். இதனால் படுத்துக்கொண்டே தெலுங்கு தேசத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆந்திர சேனல்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட, நேற்று ஜூனியர் என்டிஆர் வீட்டு முன்பு குவிந்துவிட்டனர் சேனல்காரர்கள். பலர் இதை நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்தனர்.
பின்னர் அவரது பிரசாரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தனது முதல் 'படுத்தபடி பிரச்சார'த்தில் அவர் பேசியதாவது:
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. காங்கிரஸ் மந்திரிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் வளைத்து போட்டு விற்று விடுவார்கள். எனவே காங்கிரசை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
சந்திரபாபு நாயுடு மிகவும் எளிமையானவர். அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் ஆந்திராவை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றிக்காட்டுவார். எனவே ஆந்திர மக்கள் தெலுங்கு தேசத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்றார் ஜூனியர் என்டிஆர்.
ஸ்னேகா, பிரசன்னா இணைந்து நடித்துள்ள அச்சமுண்டு அச்சமுண்டு இன்னும் தமிழகத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் அமெரிக்காவில் ஒரு விருதைத் தட்டி விட்டது.
அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள படம்தான் அச்சமுண்டு, அச்சமுண்டு. அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியைச் சுற்றி நடைபெறும் திரில்லர் கதை இது.
இந்தப் படத்தில் பிரசன்னாவும், ஸ்னேகாவும் அபாரமாக நடித்திருப்பதாக பேசப்படுகிறது. இப்படம் கடந்த 2 வருடமாக தயாரிப்பில் இருந்து வந்தது.
இந்த கோடையில்தான் இப்படம் தமிழகத்தில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு விருதை வாங்கி விட்டது அச்சமுண்டு அச்சமுண்டு.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள கார்டன் ஸ்டேட் திரைப்பட விழாவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் சிறந்த உள்ளூரில் (அமெரிக்காவில்) தயாரிக்கப்பட்ட பொழுது போக்குப் படம் என்ற விருது அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு கிடைத்துள்ளது.
ஏப்ரல் 5ம் தேதி இந்த விருது வழங்கப்பட்டதாக அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே விருதுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது அச்சமுண்டு அச்சமுண்டு - அப்படியானால் இப்படத்துக்கு நிறைய விருதுகள் உண்டு என நம்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக