நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிய நகுலை, பின்னாலேயே இழுக்கிற பிரச்சனை ஒன்று... மேனேஜர்? ஐந்து கரத்தானை வழிபட்டு கதை சொல்ல வருபவர்கள், இந்த ஆறுமுகத்தானிடம் மாட்டிக் கொண்டு படுகிற அவஸ்தை கொஞ்ச நஞ்மல்ல என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
விஷால் நடிக்கும் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் கதையை முதலில் நகுலிடம்தான் சொன்னாராம் அப்படத்தின் இயக்குனர் திரு. நகுலிடம் கதை சொல்ல அனுமதி வாங்கிக் கொடுத்ததே திருவின் மாமனாரும், திரைப்பட இயக்குனருமான அகத்தியன்தான். காதல் கோட்டை படத்தில் தேவயானியை அறிமுகப்படுத்தியவர் இவர். மருமகனை நகுலிடம் கதை சொல்ல அனுப்புவதற்கு முன், தேவயானியை தொடர்பு கொண்டாராம். 'சார், நான் இந்தளவுக்கு இருக்கேன்னா அதுக்கு நீங்கதான் காரணம். இது கூட செய்யலைன்னா எப்படி?' என்று நெகிழ்ந்த தேவயானி, தம்பியை அழைத்து அன்றைய தினமே கதை கேட்க வைத்தாராம். நகுலுக்கும் கதை பிடித்துவிட, அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள் இருவரும்.
பிறகுதான் பிரச்சனையே! நந்தியை மீறி சிவனை வழிபட்டால் என்னாகும் என்பதை போக போக புரிய வைத்தாராம் மேனேஜர். தேதி ஒதுக்கி தருவதில் தொடர்ந்து சிக்கலை எழுப்பி வந்தாராம். என்ன காரணத்தாலோ மேனேஜரை மீற முடியாமல் நகுலும் தடுமாற, திரு என்ற கிளி விஷால் என்ற கிளைக்கு தாவியது. சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறாராம் நகுல்!
இதுபோன்ற முன்னணி நிறுவங்கள் பலவும், மேனேஜரை தாண்டி நகுலை அடைய முடியாமல் தவிக்கிறார்களாம். வணங்க வேண்டிய ஆறுமுகனே, நகுலின் மார்க்கெட்டை சுனங்க வைப்பார் போலிருக்கே?
சென்ட்டிமென்ட் வொர்க் அவுட் ஆயிருச்சு போல! அயன்னு பேரு வச்ச யோகம்,அயர்ன் மாதிரி இரும்பு மனிதர் ஆகப் போறாரு சூர்யா. வேறொன்றுமில்லே, சொந்தமா சினிமா கம்பெனி துவங்கப் போறாராம். ஏற்கனவே 'பருத்திவீரன்' தயாரித்த சி.ஜே.ஞானவேல் இவரோட நெருங்கிய உறவினர். இப்போ அவரையும் கூட்டு சேர்த்துகிட்டு களம் இறங்கப் போறாரு சூர்யா! கோலிவுட்டில் சுட சுட பரவும் இந்த செய்தியும், அதன் பின்னணியும் இன்னும் பரபர...
இவரை தயாரிப்பாளர் ஆக்கியதில் பெரும் பங்கு அந்த என்ஆர்ஐ மினிஸ்டரையே சேரும் என்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அன்னிய நாட்டில் புகழேணியில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கும் இவர் மீது லஞ்சப் புகாரும் வர ஆரம்பித்திருக்கிறதாம்.
சேர்த்து வைத்த பணத்தை உருப்படியாக முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிற மினிஸ்டர், நாலுக்கும் உதவுற நல்ல பிள்ளையாக நினைப்பது சூர்யாவைதானாம். ஆரம்பத்தில் யோசித்தாலும், புதிய பேனரில் தயாராகும் படங்களில் தானும், தம்பியும் மட்டுமே நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சூர்யா.
கோலாகல துவக்க விழாவில் கலந்து கொள்ள மினிஸ்டர் வருவாரா?
'ஆத்தா வந்திரு, அருள்வாக்கு தந்திரு'ன்னு ஆடாத குறைதான்! மற்றபடி நயன்தாராவுக்காக கோவிலே கட்டி கும்பிட தயாராக இருக்காங்க தமிழ்நாட்டு ரசிகர்கள். ஆனா, கேரளாவிலே அப்படியில்லே, ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான்! அது நடிகையா இருந்தாலும் சரி, நம்பூதிரியா இருந்தாலும் சரி.
'பாடிகாட்' படப்பிடிப்புக்காக திருச்சூர் போயிருந்தார் நயன். அங்கே பக்கத்திலேயே இருக்கிற புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட போனாராம். புடவை அணிந்த பெண்களுக்குதான் தரிசன அனுமதி. இது அந்த கோவில் சட்டம். சுடிதாருடன் உள்ளே வந்த நயன்தாராவை வாசலிலேயே தடுத்தனர் கோவில் அதிகாரிகள். ஆனால், அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே போய்விட்டார் நயன். இதை கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் நயன்தாரா மேல் கோபமாகி அவரை சிறை பிடிக்குமளவுக்கு போய்விட்டதாம் நிலைமை.
பிறகு அவரே அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட பிறகுதான் வெளியேற அனுமதித்தார்களாம். இந்த சம்பவம் தமிழகத்திலும், கேரளாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளை, பில்லா கோலத்தில் உள்ளே போகாமல் இருந்தாரே, அதுவரைக்கும் நிம்மதி!
ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.
சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம். வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.
2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.
3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.
4. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.
5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா? வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.
7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
முதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்துவிடுங்கள்.
கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் 'ஞாபகங்கள்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது.
இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.
வைரமுத்து பேசும்போது, ''இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.
உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.
உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது அமெரிக்கா'' என்று ஆவேசப்பட்டார்.
ஐயா, தமிழ் கவிஞன் என்ற வகையில் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் அப்படித்தான்!
உலக நாடுகள் கண்டித்தன. பட்சே கேட்கவில்லை. நல்லாத்தான் இருக்கு உங்கள் பேச்சும் வாதமும்!
தெற்காசியாவின் தலைவன் என்று பீத்திக்கொள்ளும் உங்கள் நாடு கண்டித்ததா, அதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. உங்கள் நாடு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று குறைந்த பட்சம் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தமிழ் நாடு, நீங்கள் விருப்பும் தலைவர் என்ன சொல்கிறார், செய்கிறார் அதைத் தொடாமல் பேசினால் எந்தவகையான அம்னீசியா உங்களுக்கு? நமக்கே வியர்க்கவில்லை என்றால் உலக நாடுகளுக்கு ஏன் வியர்க்கப் போகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக