செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-15

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக சமூக ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.

இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா, மத்திய சென்னையில் ஹைதர்அலி, பொள்ளாச்சியில் உமர், ராமநாதபுரத்தில் சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.

புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள் என்றனர்.

மேலும் பேசிய அவர்கள், 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். நாளையே தேர்தல் பிரசாத்தை தொடங்க உள்ளோம் என்றனர். அப்போது பேசிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி,

இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கைப் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்படவி்ல்லை என்றார்.

எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம் என்றார்.

இலங்கை சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆறு பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொழும்பு அருகே உள்ள கலுதாரா சிறையிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிறைக்கம்பிகளை அறுத்து சிறையிலிருந்து தப்பிக்க 11 சிறைவாசிகள் முயன்றனர். சிறைக் காலவர்கள் அவர்களை நோக்கிச் சுட்டதில் 6 கைதிகள் கொல்லப் பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றனர். ஒருவர் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார் என இலங்கை சிறைத்துறைத் தலைவர் கூறினார். தப்பிக்க முயன்ற ஒவ்வொருவர் மீதும் 4 அல்லது 5 கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வு குறித்து விசாரிக்க சிறப்பு புலணாய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Microsoft Surface – சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேசை வடிவில் இருக்கும் இதற்கு Keyboard, Mouse எல்லாம் தேவையே இல்லை. எல்லா வேலைகளுமே கைகளால் முடித்துவிடலாம். ஏதோ மேசையில் இருக்கும் பொருட்களை எடுத்து வைப்பது போல இதிலுள்ள File களைக் கையாளலாம். முழுவதும் Touch screen ஆன இதில் Drag and drop எல்லாம் அவ்வளவு எளிது. அப்புறம் இன்னுமொரு முக்கியமான விடயம், அவசரத்திற்கு இதை மேசையாகவும் பயன்படுத்தலாம். வீட்டில் இட நெருக்கடி என்றால் ரொம்ப யூஸ்புல் இல்லையா?. இனி சுவர், கூரை எல்லாம் இப்படித்தான் பயன்படப் போகிறதோ?

கருத்துகள் இல்லை: