புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29


கிறிஸ்தவம் பார்வை தளத்தில் தொடராக வெளிவரும் பைபிள் கூறும் பயங்கரவாதம் பகுதி 2 என்ற எமது பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

"பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!

பைபிளின் பயங்கரவாதக் கருத்துக்களுக்கு பதில் சொல்லவும் அதனை மறைக்கவும் இயலாமல் விழிபிதுங்கிய போலி உமர் ஆங்கில தளத்தில் கண்ட பன்றிக்கறி கட்டுரையை மொழி பெயர்த்து வெளியிட்டு புளங்காகிதம் அடைந்தார். மொழி பெயர்த்த கையோடு அதனைத் தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் வெளியிட்டிருந்தார். அதற்கு சில முஸ்லிம்களும் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். முஸ்லிம்களை விட்டு விடுவோம். சில கிறிஸ்தவர்கள் கொடுத்திருந்த கருத்துக்கள் போலி உமரின் கருத்துக்களை அப்படியே மறுப்பதாக இருந்தன. தன் கருத்தில் தடம் புரண்டு தத்தளித்த பன்றிக் கறி புகழ் போலி உமர் பன்றிக்கறி சாப்பிடலாம், தவறில்லை ஆனால் நான் சாப்பிடமாட்டேன் என்று தன்னைப் பரிசுத்தப் படுத்த முயன்று கடைசியில் இறைவன் சொன்னதற்காக பன்றிக் கறி சாப்பிடாமல் இருக்கலாம் என்று மீண்டும் குழம்ப தன் கருத்துக்கு தானே எதிர் கருத்து பதிவு செய்தார்.

குழம்பி, குழப்பி, குழப்பத்தின் உச்சகட்டத்துக்கே சென்று கடைசியில் பன்றிக் கறி கட்டுரையை தமிழ்கிறிஸ்தவ தளத்திலிருந்து நீக்கி விட்டனர்.

கிறிஸ்தவர்களே உங்கள் குழப்பத்தை உலகம் அறிந்து தெளிவு பெறட்டும். பன்றிக் கறி பதிவை மீண்டும் வெளியிடுங்கள். செய்வீர்களா?

பன்றிக் கறி பற்றி கிறிஸ்தவர்களுக்கே ஒரு சரியான தெளிவான கருத்து இல்லை. இந்த லட்சணத்தில் தான் தெளிவான இஸ்லாமின் கோட்பாடுகளை இவர்கள் விமர்சிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.


நன்றி : கிறிஸ்தவம் பார்வை


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி
பிரபல பதிவராக யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதற்கு பத்து பத்து வழிகளை அவ்வப்போது பலர் அள்ளிவிட்டும் வருகிறார்கள். நான் அப்படி எதுவும் சொல்லப்போவதில்லை.இதற்கு எளிய வழி எதுவும் இல்லையா? இருக்கிறது.

சென்னையில் அவ்வப்பபோது நடத்தப்படும் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளுங்கள். பல பிரபல பதிவர்கள் அங்கு வருவார்கள். பிரபல பதிவர்களை சந்தித்து அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். புதிய பதிவர்களை வரவேற்கும் விதமாக நடைபெறும் இந்த சந்திப்பு வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகே நடைபெறும். எல்லோரும் வட்டமடித்து அமர்ந்திருப்பார்கள். அனுமதி இலவசம். என்ன ரெடியா?

இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள-

பாலபாரதி – 9940203132

லக்கிலுக் – 9841354308

அதிஷா – 9884881824

கேபிள் சங்கர் - 9840332666
குடந்தையில் நாங்கள் குடியிருந்தபோது நடந்த சம்பவம் இது. என்வீட்டிற்கு எதிரே புதிதாக குடிவந்த குடும்பத்தில் இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள். இரண்டு பெண்களில் எனது வயதையொத்த ஒரு பெண்... அதுவும் அழகாகவும். மனசு கும்மாளம் போட ஆரம்பித்தது. மீசை முளைத்த பருவம் அது. பின்னே இருக்காதா என்ன?
எங்கள் ஊரில் கோ- எஜிகேசன் அனைத்து பள்ளிகளிலும் கிடையாது. மெட்ரிக் பள்ளிகளில் மட்டும்தான்.(மெட்ரிக்குலேசன் ஸ்கூல் - நிறைநிலை பள்ளி. திகழ்மிளிர் கவனித்திற்கு!) காலையில் அந்த பெண் பள்ளிக்கு பேருந்தில் செல்வாள். நான் மிதிவண்டியில் செல்வேன். அந்தப்பெண் செல்லும் பேருந்தை தொடரும் எனது மிதிவண்டிப் பயணம். பேருந்து நிலையத்தில் அவள் இறங்கும்போது அவளுக்கு முன் ஒரு அரைவட்டம் அடித்து எனது இருப்பை காட்டிக்கொள்வதும், மாலையிலும் அதேபோல் வீட்டிற்கு அருகில் இறங்கும் போதும் நடக்கும். இப்படித்தான் கொஞ்ச நாளா போச்சு. பேசுவதற்குதான் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. பொங்கல் திருநாள் வந்தது. என் நண்பனின் யோசனைப்படி வாழ்த்து மடல் என் கையழுத்தில்லாமல்
அன்புள்ள
அன்புள்
அன்பு
அன்

என்று எழுதியனுப்பினேன். அனுப்பி இரண்டு நாளாகியும் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. கிடைத்ததா... இல்லையா... எனக்குள் மிகப்பெரிய தவிப்பு... போஸ்மாஸ்டரிடம் அவங்க வீ்ட்டிற்கு ஏதாவது கிரீட்டிங் கார்ட் வந்ததா? என்று கேட்டேன். ஆமா வந்தது என்றார். அப்ப கிடைத்துவிட்டது. ஆனால் எந்த ரியாக்சனும் தெரியவில்லையே... ஒரே குழப்பம்தான்.
போகி அன்று வீட்டிற்கு வெள்ளை அடித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் அந்தப்பெண்ணின் அக்கா அந்த கிரிட்டி்ஙகார்டை எடுத்துக்கொண்டு வந்தார். வந்தவர் நேரே என் அப்பாவிடம் அந்த கார்டை கொடுத்து, விசயத்தை சொல்லி,கண்டிச்சு வைங்க என்று மட்டும் சொல்லிவிட்டு போய்வி்ட்டார்.
அந்த நிமிடங்களை நினைச்சு பாருங்களேன்.எனக்கு கையும்,காலும் வெலவெலத்துப்போயிட்டது.
தப்பு செஞ்சா என் அப்பா அறைந்துவிடுவார். அறைந்தால் அவரின் கைவிரல் அப்படியே பதிந்துவிடும். அப்படி அடிப்பார். அன்று மட்டும் அந்த அதிசயம் நடந்தது.கார்டை வாங்கிக்கொண்டவர் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. வீட்டிற்குள் சென்றுவி்ட்டார். நான் சுண்ணாம்பு அடிப்பதா, அவரின் பின்னால் செல்வதா... ஒன்றும் புரியவில்லை. கையில் மட்டையை வைத்துக்கொண்டு நிற்கிறேன்.
இரண்டு மூன்று நாட்களாகியும் அதைப்பற்றி பேசவேயில்லை. என் அம்மா மட்டும் "ஏன்பா இப்படி செஞ்சே? உனக்குன்னு உன் அக்கா மக இருக்கா" என்றார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். அந்த வருட பள்ளிவிடுமுறையில் அவர்கள் வீட்டை காலிசெய்து போய்வி்ட்டார்கள். அவ்வளவுதானா என் முதல் காதல்?
இனிமேதான் மேட்டரே...!

(காலங்கள் வேகமாக உருண்டோடியது...வேலைக்காக சென்னை வந்தேன். எனக்காக என் அக்கா மகள் இருக்கிறாள் என்று அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அவளைப் பார்த்து, என்னை உனக்கு பிடித்திருக்கிறதா? என் அம்மா உன்னைப்பற்றிச் சொன்னார்கள் என்று சொன்னேன். அவளும் அவளுக்கும் விருப்பம் இருந்தது. சரியென்று சொல்ல, அவளையே வீட்டிற்கு தெரியாமல் காதலித்து, வீட்டாரின் சம்மத்துடன் கல்யாணமும் முடிந்தது.)

அப்புறம் என்ன என்கிறீர்களா?

இதே சென்னையில் பல வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்த்தேன். கடைத்தெருவில்...
அதன்பிறகு, சிலநாட்கள் கழித்து நான் குடியிருக்கும் தெருவில்...எனக்கு பகீரென்றாகிவி்ட்டது.இவளெங்கே இங்கே?

நான் குடியிருக்கும் தெருவில்தான் அவளும் குடியிருக்கிறாள். கல்யாணம் ஆகி, ஒரு பையனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன். பேசி பழகாமலே முறிந்ததால் எங்களுக்குள் வீரியமான தாக்கம் இல்லை என்பதுதான் உண்மை. வேலைக்கு செல்லும்போது சமயத்தில் அவள் எதிர்படும்போது சங்கடமாகத்தான் இருக்கிறது, அவளை பார்ப்பதற்கே! எங்கோ பார்ப்பதுபோல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறேன். சமயத்தில் அவளும் அப்படித்தான் செய்கிறாள். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் இம்மாதிரி யாருக்கும் வாய்க்கக்கூடாது. எங்கிருந்தாலும் வாழ்க!
கல்லாறு சதீஷுக்கு டாக்டர் பட்டம்

[Monday March 30 2009 07:54:24 PM GMT] [விசாலி]


சுவிஷ் தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீஷுக்கு சர்வதேச திறந்த பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.


புலம் பெயர் தமிழ் படைப்பாளியான கல்லாறு சதீஷ், தனது தரம் மிக்க படைப்புகளின் மூலம் புகழ் பெற்றவர்.

கல்லாறு சதீஷின் படைப்புகள் எடுத்துக்கொண்ட புதிய கருக்களினால், உலகத் தமிழ் மக்கள் மத்தியில் மதிப்புப் பெற்றார்.

பனிப் பாறைகளும் சுடுகின்றன, சொர்கங்களும் தண்டிக்கின்றன,தமிழர் புலம்பெயரியலை தத்துரூபமாகப் பதிவு செய்துள்ளன.



கல்லாறு சதீஷுக்கு தமிழகத்தில் இலக்கிய விருது வழங்கப் பட்டது.

சுவிஷ் கலாசார அமைச்சகத்தினூடக இரண்டு முறை பணப் பரிசு பெற்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்,இவர் எழுத்துக்களைப் பாராட்டி தங்க மோதிரம் பரிசளித்துக் கெளரவித்தார்.

கல்லாறு சதீஷின் எழுத்துக்கள் சுவிஷ் வாசகர்கள் மத்தியிலும் சென்றது.

இதனால் இவரின் பல கதைகள் மொழி பெயர்க்கப்பட்டன.



சுவிஷில் தமிழர்களின் 20வது ஆண்டில் கல்லாறு சதீஷின் எழுத்துக்கள் தமிழர் சாதனை என பேர்ன் நகரில், சுவிஷ் மக்களால் விழா எடுத்துப் பாராட்டப்பட்டது.

சுவிஷ் எழுத்தாளர் சம்மேளனம் கல்லாறு சதீஷை தங்களது அங்கத்தவராக அங்கீகரித்தது.

சுவிஷ் பல்கலைக் கழகம் கல்லாறு சதீஷின் எழுத்துக்களைப் பாடமாக ஏற்றுக்கொண்டுள்ளது, இப் பாடத்திட்டத்தில் கல்லாறு சதீஷின் வாழ்க்கைக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

சுவிஷ் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள தமிழ்த் திருமணம் எனும் திரைப்படத்தின் பாடலாசிரியராகவும், தமிழ் நிபுணராகவும் கல்லாறு சதீஷ் பணியாற்றியுள்ளார். இத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கல்லாறு சதீஷ், எழுத்தாளராக, மேடைப்பேச்சாளராக, பேட்டியாளராக, சமூக சேவகராக மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

கல்லாறு சதீஷ் இலாப மையம் என்னும் மக்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

மிகத் தகுதி மிக்க கல்லாறு சதீஷுக்கு மார்சல் ஆர்ட்டிற்கான சர்வதேச பல்கலைக் பல்கலைக் கழகமும்,

கொம்பிலிமென்ரார் மெடிசனுக்கான சர்வதேச திறந்த பல்கலைக் கழகமும்
கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.

டாக்டர் பட்டம் குறித்துக் கல்லாறு சதீஷைக் கேட்டபோது" டாக்டர் பட்டம் மகிழ்சியைக் கொடுத்தாலும்,தினம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்குரியதாகவில்லை, இருப்பினும் துயரப்படும் மக்களின் விடியலுக்காக டாக்டர் பட்டம் பயன் படும் என்று கருதுகிறேன்" என்றார்.
-நன்றி லங்காசிறி சுவிஸ் செய்திகள் .
கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழா 2008-07-14


கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழா
கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் விழா பொன்மணி வைரமுத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்கினார்.
வெற்றி தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் செழியன் வரவேற்றார்.
விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு விருதும் ரூ.20 ஆயிரம்பணமுடிப்பையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
வைரமுத்து எழுதிய பாற்கடல் நூல் பற்றி தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் திறனாய்வு உரை நிகழ்த்தினார்.
வைரமுத்துவிடம் ஏற்பட்ட அனுபவம் பற்றி முத்தையன் எழுதிய 'தோப்பு குயிலாக' என்ற நூல் பற்றி கவிஞர் ப்ர்வீன் சுல்தானா பேசினார்.
வைரமுத்துவின் கவிதைகளை இந்தியில் மொழி பெயர்ப்பு செய்து மத்திய அரசின் விருது பெற்றுள்ள காமாட்சி - சுப்ரமணியன் தம்பதியினர் கவுரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் அவ்வை நடராஜன், டத்தோ சரவணன், கல்லாறு சதீஷ், அமைச்சர்கள் அன்பழகன், ஏ.வேலு, பொன்முடி, மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகள்
> காவிரி கடைமடையில் முருகதாசு > பரத்வாஜ்க்கு 50வது படம் > ஆன்டி ஹீரோ சூர்யா > களைகட்டும் பெப்சி தேர்தல் > அழகான பெண்களோடு இணைத்து பேசினால் ரசிப்பேன் > புலம்பி தள்ளிய பிரபுதேவா > ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் > கந்தசாமி தந்த சாமி > அரசியலுக்கு வந்தால் அதிலும் வெற்றி பெறுவேன் > தனுஷ் ஸ்ரேயா 'குட்டி'
மேலும் செய்திகள....
கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்;
தஞ்சைநிலம் எல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருந்தால்
உழவின்றி உய்யா துலகு!

பற்றாக் குறையென்றே பஞ்சப்பண் பாடுகிறார்;
முற்றாக நீரை முடக்குகிறார்; -அற்றார்
புழங்கவும்* நீர்வழங்கார் போக்கால் வயல்காய்ந்
துழவின்றி உய்யா துலகு!

வழங்கும் மனமின்றி வைத்ததனைக் காத்துப்
புழங்கும்* வகையறியாப் புல்லர் -முழக்கம்
பழுதன்றி வேறில்லை பாரதமே! காண்பாய்
உழவின்றி உய்யா துலகு!

வியலாய்* முகில்வழங்கும் நீரை வழங்க
வியலா தெனமறுப்பார் வீணர் -வயற்குக்
கொழுநீரும்* இன்றேல் கொழுவூண்றிக் கீறும்
உழவின்றி உய்யா துலகு!

புழங்குதல் -கையாளுதல்; வியல் -மிகுதி; கொழுநீர் -பெருகும் நீர்


அகரம் அமுதா

கருத்துகள் இல்லை: