ரியாத் தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் 30ந் தேதி வியாழன் இரவன்று "சிரிப்போம் சிந்திப்போம்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ரியாத் இந்திய பன்னாட்டு பள்ளியில் நடத்தவிருக்கிறது.
ரியாத் தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் 30ந் தேதி வியாழன் இரவன்று "சிரிப்போம் சிந்திப்போம்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ரியாத் இந்திய பன்னாட்டு பள்ளியில் நடத்தவிருக்கிறது.
டிஸ்கி
இந்த பதிவு சாதாரண திரை ரசிகனாக இருந்து எழுதியது. எனவே இதை படித்து விட்டு ஏன் இப்படி இருக்கறீங்க? திரையில் மட்டும் ரசிகனாக இருங்க. நன்கு படித்தும்! இதை போல ஏன் செய்கிறீர்கள்? இந்த மாதிரி நடிகர்களை தூக்கி வைத்து ஆடுவதை எப்போது தான் நிறுத்த போகிறீர்களோ! நீங்கெல்லாம் எப்ப தான் திருந்த போறீங்களோ!!!!! போன்ற வழக்கமான அறிவுரை!! பின்னூட்டங்களை தவிர்க்கவும் :-)) பதிவை ரொம்ப ஆராய்ச்சி செய்யாமல் ஜாலியாக எடுத்துக்கொள்ளவும்
அனைத்து திரை ரசிகர்களுக்கும் தனக்கு பிடித்த நடிகரின், இயக்குனரின் படத்தின் முதல் நாள் முதல் காட்சி அல்லது முதல் நாள் படம் பார்க்க வேண்டும் என்பது கீழ் தட்டு மேல் தட்டு ரசிகர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும், அதுவும் இதை போல விசயங்களில் தலைவர் படம் என்றால் அது பற்றி சந்தேகமே தேவையில்லை. முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் வாங்க அடிதடியே நடக்கும், யார் யாரிடமோ சொல்லி டிக்கெட் வாங்கி தர சொல்லி படுத்தி எடுப்பார்கள், படம் ரிலீஸ் ஆகும் இரண்டு நாள் முன்பு பார்த்தீர்கள் என்றால் டிக்கெட் வாங்கியாச்சா, வாங்கியாச்சா என்று இதே கேள்வியா தான் இருக்கும் ரசிகர்களுக்குள்.
பல சிபாரிசுகள் எல்லாம் வேண்டும் இதற்க்கு..பொய் கூறவில்லை, வேண்டும் என்றால் எந்திரன் படம் வரும் போது பாருங்கள்..எங்கெல்லாம் கூறி சிபாரிசு செய்து டிக்கெட் வாங்குகிறார்கள் என்று..படம் வெளிவரும் இரண்டு நாள் முன்பு இருந்து எல்லோரும் ஆரம்பித்து விடுவார்கள்.. மச்சி! டிக்கெட் வாங்கிட்டியா!..டேய்! அவன் எப்படியோ இரண்டு டிக்கெட் வாங்கிட்டாண்டா! எனக்கு ஒண்ணு வாங்கி கொடுக்க சொல்லுடா! மாமே! அவன் நாலு டிக்கெட் வைத்து இருக்கேன்னு ஓவரா சீன் போடுறாண்டா! டேய்! எப்ப்படியாவது வாங்கி கொடுடா ப்ளீஸ்! ப்ளீஸ்!! ப்ளீஸ்!!! இதை போன்ற வசனங்களை கேட்கலாம் :-)
தலைவர் படம் ரசிகர்கள் தான் முண்டியடித்து பார்க்கிறார்கள் என்றால் ரஜினியை பிடிக்காதவர்களும் உடனே பார்த்து விடுவார்கள், எதற்கு என்றால் படம் மொக்கை குப்பை சொத்தை என்று படம் எப்படி இருந்தாலும் இதை போல விமர்சனம் எழுத தட் மீன்ஸ் வயித்தெரிச்சல் பார்டீஸ் ஹி ஹி ஹி ஹி இது ரஜினி படம் மட்டுமல்லாது அனைத்து நடிகர்களுக்கும் ஏற்படும் ரஜினிக்கு மற்றவர்களை விட அதிகம்.
எனக்கு முதல் காட்சி பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் இருந்தாலும் இந்த பால் ஊத்துறது, கொடி பிடிக்கிறது, கட் அவுட் வைக்கிறது இதில் எல்லாம் உடன்பாடு இல்லை. நம்ம சும்மா விசில் அடிப்பது கூட்டத்தோடு கூட்டமா ஒரு ஆட்டம் போடுவது இது தான் நம்ம வழக்கம். இந்த அளவோடு என் கொண்டாட்டம் முடிந்து விடும்.
நான் பாட்ஷா படம் பார்த்ததில் இருந்து ரஜினி ரசிகன் ஆனேன், அதன் பிறகும் எனக்கு முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை அல்லது அந்த அளவிற்கு ஆர்வமில்லை அல்லது துணையில்லை.
அதன் பிறகு சென்னை வந்தவுடன் என் அறை நண்பன் தீவிர தலைவர் ரசிகன் அவனுடன் சேர்ந்து போக ஆரம்பித்து விட்டேன், இது வரை நாங்கள் இருவரும் அனைத்து ரஜினி படமும் முதல் நாள் பார்த்து விட்டோம், குசேலன் மட்டும் சேர்ந்து பார்க்கவில்லை (நான் சிங்கை வந்ததால்). முதன் முதலாக முதல் காட்சி என்று சென்றது "அருணாச்சலம்" படம் தான். படம் நன்றாக இருந்தாலும் ரஜினியின் அந்த வசீகரமான ஸ்டைல் இதில் என்னவோ குறைந்தது போன்ற உணர்வு, அதனால் பெரிய பாதிப்பை என்னில் ஏற்படுத்தவில்லை, பாடல்களும் சுமார் ரகம் தான். படம் 150 நாட்கள் ஓடியதாக நினைவு
இந்த படம் பார்த்தது ஆல்பட் திரை அரங்கில், ரஜினி படம் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வருவது இந்த திரை அரங்கம் தான். இதில் பார்த்தால் தான் முதல் நாள் படம் பார்த்த மாதிரியே இருக்கும், அந்த அளவிற்கு ரசிகர்களிடையே பிரபலம். அதற்க்கு தகுந்த மாதிரி திரை அரங்கு முதலாளியும் ரஜினி ரசிகர், எங்கு பார்த்தாலும் ரஜினி சம்பந்தப்பட்ட ஷீல்டுகளும் படங்களும் வசனங்களும் என்று இருக்கும்.
புதுசா வருகிறவர்கள் இது ரஜினியின் திரை அரங்கா என்று சந்தேகம் வருமளவிற்கு இருக்கும்.ரஜினியின் அனைத்து படங்களும் வெளியாகி விடும், முத்து படம் இங்கு வெளியாகவில்லை (அப்போது பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தன, அதனால் தேவியில் வெளியாகியது), அதே போல சாந்தியில் (சிவாஜி தயாரிப்பு) சந்திரமுகி வெளியானதால் அந்த படமும் இங்கு வெளியாகவில்லை.
அதன் பிறகு சென்றது "படையப்பா" அபிராமி திரை அரங்கில், சும்மா படம் பின்னிவிட்டது, கலக்கலான திரைக்கதை, காட்சி அமைப்புகள், ஸ்டைல் தாறுமாறு. திரைஅரங்கில் செம ஆட்டம், முதன் முதலா திரை அரங்கில் ஆடியது இந்த படத்திற்கு தான். சண்டை காட்சிகளும் பஞ்ச் வசனங்களும் இதில் ரொம்ப பிரபலம், சரவெடியா இருக்கும்
மாலை ஐந்து மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கி (அதுக்கு தான் கிடைத்தது) சென்று இருந்தோம், சாதாரண படம் அல்லது படம் வெளி வந்து ரொம்ப நாள் ஆகி படம் ஆரம்பிக்க நேரமானாலே ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள் :-), அதுவும் தலைவர் பட முதல் நாள் படத்திற்கு சொல்லவே தேவையில்லை..
மணி 5.10 ஆகியும் உள்ளேயே விடவில்லை, எல்லோரும் தள்ளுதள்ளுனு தள்ளறாங்க..முன்னாடி வேறு கண்ணாடி கதவு.....திறக்கவில்லை என்றால் அழுத்தம் தாங்காமல் உடைந்து விடும் நிலைமை அவனவன் பொறுமை இழந்து கத்த ஆரம்பித்து விட்டான், முந்தைய காட்சி இன்னும் நேரப்படி முடியாததால் அவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள்..நேரம் ஆக ஆக தள்ளுமுள்ளு அதிகம் ஆகி விட்டது..இன்னும் கொஞ்சம் நிமிடம் தாமதம் செய்தாலும் கண்ணாடி கதவு உடைந்து விடும் போல நிலைமையில் கதவு திறந்து விட்டார்கள்..அவ்வளோ தான் டிக்கெட் கலெக்டர் ஒரு வழி ஆகிட்டாரு விதியை நொந்துட்டே எல்லோரையும் அனுப்பி வைத்தாரு
படம் ஆரம்பம் முதல் கடைசி வரை அருமை. ரம்யா கிருஷ்ணன் கடைசியில் எல்லோரும் பேசும் வழக்கமான வசனத்தையே பேச..நாங்களும் வழக்கம் போல அதை பற்றி எல்லாம் கண்டுக்காம பார்த்துட்டு இருக்க :-) திடீர்னு "அப்படின்னு சொல்லுவேன்னு நினைத்தியா" ன்னு கேட்க, எல்லோரும் மறுபடியும் பரபரப்பாகிட்டாங்க.. அதன் பிறகு ரம்யாகிருஷ்ணன் சொல்லும் வசனமும் அதற்க்கு ரஜினி சொல்லும் வசனமும் அசத்தலாக இருக்கும். ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசம், படம் சூப்பர் சூப்பர் னு.
இந்த இரண்டு படமும் நல்ல அனுபவம்.. ஆனா அடுத்த படம் "பாபா" பப்படம் ஆகி விட்டது, எண்ணையில் பொறித்த வாழைக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிட்டாங்க படம் பார்த்தவங்க எல்லோரும்..அப்போது அது பெரிய சோக நிகழ்வாக!! இருந்தாலும் அதை இப்போது நினைத்தால் காமெடியாக இருக்கிறது..அது பற்றிய அனுபவங்கள் எனது அடுத்த இடுகையில் :-)
பாரதத்தில் நடைப் பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்தான் இவை....
பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் செல்லுங்கள். இல்லையேல் சில வருடங்களுக்கு முன் உங்கள் தாத்தா பாட்டியின் சொற்களை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் போதாதென்றால் நீங்கள் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர் எதையாவது ரெஃபரன்ஸ் புத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கதைக்கு வருவோம்.
.....................................................................................................................
அந்த மாபெரும் நாட்டின் இளவரசனுக்கு பெண் தேடுகிறார்கள். அண்ணன், தம்பி இருவருமே பலசாலிகள்..
முதலில் அண்ணனுக்குப் பெண் தேடுகிறார்கள்.
தம்பிக்கு பெண் கொடுக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். அண்ணனுக்கு எல்லோரும் தயங்குகிறார்கள்.
இந்தியத்துணைக்கண்டத்திலே ஏற்க்குறைய மேற்காசிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். பெண் கேட்கிறார்கள். மூத்த இளவரசனுக்கு பெண் கொடுக்க தயங்கி நிற்கிறார்கள். பெண்கேட்கச் சென்ற குடும்பப் பெரியவர், போருக்கு அழைக்கிறார். அந்நாட்டு இளவரசியின் அனைத்து அண்ணன்களையும் கொள்கிறார்கள். அந்நாட்டின் மன்னனையும் கொல்கிறார்கள். அந்த நாட்டையே அழித்து விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு இளவரசி வருகிறாள். நாட்டின் சண்டையை முடிவுக்கு கொண்டுவரவும், தனது சின்னத்தம்பியைக் காப்பாற்றவும் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.
ஆனால் இந்த கொடிய உலகத்தைக் காண சகிக்காமல் தனது கண்ணைக் கட்டிக் கொள்கிறார்.
அந்த இளவரசிதான் பாரதப் போரின் மகாராணி காந்தாரி அவர்கள்.
அவர் கண்ணைக் கட்டிக் கொண்டது பீஷ்மர் முதலானவர்களை பார்க்க விரும்பாமையா? இல்லை திருதிராஷ்டிரன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க விரும்பாத ஒரு பாசத்தின் காரணமாகவா...............
..................................................................................................................
காந்தார தேசத்திலிருந்து தப்பி வரும் குட்டி இளவரன் சகுனி ஒரு சபதம் செய்கிறார். தனது நாட்டை சின்னா பின்னப் படுத்திய பீஷ்மரின் நாட்டையும் வம்சத்தையும் அழிப்பதாக சபதம் செய்கிறார். பின்னர் படிப்படியாக காய் நகர்த்தி பாரதப் போருக்கு காரணமாக அமைந்து கௌரவர்களையும் பாண்டவர்களின் மகன்களையும், ஏராளமான போர்வீரர்களையும் அழிக்கிறார். ஏறக்குறைய தனது சபதத்தில் வெல்கிறார்.
எதிர்மறை நாயகனாக பெருவாரியான வெற்றிகளைக் குவித்த சகுனி .. மகாபாரத்தின் நாயகனா? வில்லனா?
...........................................................................................................
மற்றுமொரு சுவாரசியமான ஒரு ஒற்றுமை... பாண்டவர்களுக்கு தந்தை ஐவர். ஐவருக்கும் மனைவியாக திரவுபதி...
.............................................................................................

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களை திங்கள்கிழமை (13-04-2009) புதுடெல்லியில் சந்தித்து முல்லைத்தீவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தை நிறுத்த இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென கேட்டுக்கொண்டது. சுமார் ஒருமணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கை தமிழர் பிரச்சினை தற்போது ஒரு தீவிரமான கட்டத்தை அடைந்துள்ளது என்றும் தமிழர்; நீதியானதும் நியாயமானதுமான கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதை [...]
துபாயில் சர்வதேச அளவிலான கல்விக் கண்காட்சி 15.04.2009 புதன்கிழமை முதல் 18.04.2009 சனிக்கிழமை வரை துபாய் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, லண்டன், பிரேஷில், ஓமன், துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, எகிப்து, ரோமனியா, லெபனான், பெல்ஜியம், பிரான்ஸ், கனடா, சைப்ரஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர், ஈரான்,பஹ்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக