சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள எம்பிலிப்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மகிந்த இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? இதனை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் எதற்காக? உலகம் முழுவதற்குமே அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது தெரியும்.
ஆனால், இதில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அனைத்துலக இராஜதந்திரிகள் பலர் இவை எதனையும் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக இருப்பது அனைத்துலக அனர்த்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்வதாக அமையும் என்பதையிட்டு உலகத்துக்கு நான் எச்சரிக்க விரும்புகின்றேன்.
எமது படையினர் தாய்மார்களையும், சிறுவர்களையும் எவ்வாறு மீட்டு வந்தார்கள் என்பதை புதுமாத்தளனில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வயதானவர்களை படையினர் தூக்கி வந்தார்கள். இவை அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் கூட அனைத்துலக சக்திகள் சில எம்மீது குற்றச்சாட்டைச் சுமத்துகின்றன.
உலகம் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். இவற்றையிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் இதனை நாம் மனிதாபிமான நடவடிக்கை எனக் குறிப்பிடுகின்றோம். இது மற்றொரு நாட்டுடன் நாம் செய்யும் ஒரு போர் அல்ல.
ஈராக் எவ்வாறு குண்டுவீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்" என மகிந்த தனது உரையில் தெரிவித்தார்.
Benazir Bhutto: Bin Laden was Murdered
Bin Laden could be dead, whereabouts unknown: Zardari
தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி நடவடிக்கையில்
தற்போது சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டுவந்த இந்த ஊடகங்கள்
சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
முன்னர் பதிவு இணையத்தளமும் இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் சிக்குண்டு மீண்டதையும் இந்தவேளையில் நாங்கள் உங்களுக்கு மீள ஞாபகப்படுத்த விளைகின்றோம். தமிழர் தாயகத்தின் இனப்படுகொலையை மறைப்பதற்கு இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் அவலத்தையும், இனப்படுகொலைகளின் ஆதாரங்களையும் மீண்டும் சங்கதி, தமிழ்க்கதிர் ஊடகங்கள் விரைவில் வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.
அத்துடன், எமது இணையத்தள தரவுகளின் அடிப்படையில் உலகில் சங்கதியும், தமிழ்க்கதிரும் பார்வையிடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- சங்கதி, தமிழ்க்கதிர்-
இவற்றோடு தமிழ்மணம் எமது பதிவுகளை முகப்பில் நீக்கியதையும் சேர்த்துப்பார்த்தால் புரியும்
- தமிழ்மணம் முகப்பில் ஈழத்தமிழர்களது பதிவாளர்களை நீக்கியது கருத்து கணிப்பு முடிவுகள்
- தமிழ்மணத்தை புறக்கணிப்போம்
இதேநேரம் இன்று வியாழக்கிழமை சிறீலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட தரையிறக்க முயற்சி ஒன்று கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ள என வன்னியில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் வீழ்ந்து வெடிக்கின்றன. இன்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைப் பகுதியிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடுவாழ் ஈழத் தமிழர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ் ஆர்வலர்கள் தியாகு, புகழேந்தி, தங்கராஜா, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன், வைத்தியலிங்கம், கவிஞர் தாமரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினர்.
இப்போராட்டத்தின் முடிவில் தமிழ்நாடு வாழ் ஈழத் தமிழர்களின் சார்பில்>
இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்,
பேச்சுவார்த்தை மூலம் தமிழர்கள் அவரவர் இடங்களில் மீண்டும் குடியேற ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து பழ.நெடுமாறன் பேசுகையில்,
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை இலங்கை அரசு முறையாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை ஐ.நா. சபையிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனால் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை இலங்கை அரசு புறக்கணிக்கிறது.
தமிழ் மண்ணில் இருக்கும் வரை இலங்கைத் தமிழர்கள் யாரும் அகதிகள் அல்ல. அவர்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார் பழ.நெடுமாறன்.
பின்னர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை பழ.நெடுமாறன் முடித்து வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.
இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது.
பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து ஸ்கொட்லாண்டின் எடின்பறோ நகரத்தில் மக்களால் போராட்டம் நடாத்தப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக