இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தனது உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாநிலை இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதனையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'த ஸ்ரேற்ஸ்மன்' இதழின் வெளிவிவகாரங்களுக்கான ஆசிரியர் சிம்ரன் சோதிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான்.
அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை.
கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின.
பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன.
விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர்.
தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது.
தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் அரசியல் அவாவுக்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது.
எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும் என்றார் அவர்.
இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தனது உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாநிலை இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதனையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ரொறன்ரோ நகரின் முக்கிய வீதிகளில் ஒன்றான யூனிவர்சிற்றி அவெனியு (University Avenue) இன் ஒரு பகுதி கனடியத் தமிழ் மக்களால் போக்குவரத்திற்கு மறிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மறிக்கப்பட்டிருந்த இவ்வீதியினை மீண்டும் போக்குவரத்திற்குத் திறப்பதற்காக காவற்றுறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பட்டபோது, கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ச்சியாக இரவு பகலாக நிறைந்திருந்த மக்கள் நேற்றைய தினம் அதிகாலைப் பொழுதில் மிகக் குறைவாகக் காணப்பட்ட சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி காவற்றுறையினர் இம் முயற்சியை மேற்கொண்டனர்.
இதன் போது ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் மீது காவற்றுறையினர் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவல் அறிந்த ரொறன்ரோ வாழ் கனடியத் தமிழ் மக்கள் கொட்டும் மழையின் மத்தியிலும் மீண்டும் அணிதிரளத் தொடங்கினர்.10,000 இற்கு மேற்பட்ட மக்கள் மீண்டும் அமெரிக்கத் தூதுவராலயத்தின் முன் வீதியில் திரண்டு அவ் வீதியைப் போக்குவரத்திற்கு முடக்கினர்.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகத் தங்கள் அரசியற் கட்சியின் ஆதரவைத் கனடியத் தமிழர்களுக்குத் தெரிவித்து புதிய ஜனநாயகக் கட்சியின் (New Democratic Party) உறுப்பினர்கள் இருவர் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் முன்னிலையில் உரையாற்றினர். தொடர்ந்து தொழிலாளர் சங்கம் ஒன்றினைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரும் உரையாற்றியிருந்தார்.
இம்மாதத்தின் ஆரம்பத்தில் கனடியத் தமிழர்களால் தலைநகர் ஒட்டாவாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் அங்கு குழுமியிருந்த தமிழ்மக்கள் முன்னிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவளித்து புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜக் லேடன் (Jack Layton) மட்டுமே உரையாற்றியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த கடும் மோதலில் சுமார் 270 படையினர் பலியாகியுள்ளனர், பல நூறு பேர் காயம் அடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலயங்களை சுற்றி நடந்த மோதலில் படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதல் விடுதலை புலிகளின் சிறப்பு அணியினால் மேற்கொள்ளப்பட்டது..மற்றொரு தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்ட படையினர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..தற்போது கடலிலும், நிலப்பரப்பிலும் விடுதலைபுலிகளுக்கும், படையினருக்கும் உக்கிரமான மோதல்கள் நடந்து வருகின்றன..
நாள் : 01.05.2009 (வெள்ளிக்கிழமை)
நேரம் : காலை 8 மணி
இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை
நிகழ்ச்சி : கொடிஏற்றுதல்
கொடி ஏற்றுபவர் :
தோழர் அ.முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காலை 9 மணி
ஓவியக்கண்காட்சி
திறந்து வைப்பவர் :
தோழர் துரை சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம்
பேரணி
மாலை 4 மணி
துவங்கும் இடம் : தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து.
முடியும் இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை.
பொதுக்கூட்டம்
மாலை 6 மணி
தலைமை :
தோழர் பரமானந்தன், ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சிறப்புரை :
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர் காளியப்பன், இணைச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர கலை நிகழ்ச்சி :
மக்கள் கலை இலக்கிய கலைக்குழு
நன்றியுரை :
தோழர் நிர்மலா,
பெண்கள் விடுதலை முன்னணி
அனைவரும் வருக!
நிகழ்ச்சி ஏற்பாடு:
மக்கள் கலை இலக்கிய கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக