நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது
சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது
பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது
இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி
என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு
அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.
ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை
"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"
காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்
"நல்லவேளை
நான் மலரில்லை
தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை
நல்ல வேளை
நான் கனியில்லை
கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை
இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"
அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்
இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்
வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே
விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே
நன்றி மரணமே
நன்றி
வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு
பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்
வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்
தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்
ஆகா
சுகம்
அத்வைதம்
வருந்தாதே விருட்சமே
இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்
வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்
கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்
எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்
--------------------------------
நன்றி;
http://cartoonworld.mywebdunia.com/2009/04/01/1238598180000.html
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை தொடக்கம் மீண்டும் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று புதன்கிழமை காலை சிறிலங்கா படையினர் பாதுகாப்பு வலயப் பகுதிகளான பொக்கணை, முள்ளிவாய்க்கால் பிரதேசங்களை நோக்கி ஆட்லறி எறிகணைஈ மோட்டார், 40 மி்மீ கனோன் பீரங்கி, ஆர்.பி.ஜி உந்துகணை, 50 கலிபர் மற்றும் கனரக துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிலங்கா படையினரால் தாக்குதல் நடத்தப்படும் இலக்கு (பாதுகாப்பு வலயம்) மிக குறுகிய தூரத்தில் இருப்பதால் படையினர் ஆட்லறி தாக்குதல்களை முள்ளியவளை, நெடுங்கேணி, ஒட்டிசுட்டான், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் மற்றும் சாலை ஆகிய தளங்களிலிருந்தே ஏவுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களின்போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இப்பகுதிகளில் அண்மைய நாட்களில் பெய்துவரும் கடும் மழையினால் பதுங்குகுழிகளும் வெள்ளம் நிரம்பியிருப்பதால் இழப்புகள் அதிகரிக்கக்கூடிய வாயப்புகள் உள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.
படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொள்வதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்வதிலும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படையினர், முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து காயமடைந்த பொதுமக்களை எடுத்து வராதபடி புதுமாத்தளன் வைத்தியசாலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுள்ள வீதியை இலக்குவைத்து 40 மி்மீ கனோன் பீரங்கிகள், ஆர்பிஜி உந்துகணை மற்றும் 50 கலிபர் தாக்குதல்களை நடத்தியவண்ணம் உள்ளனர்.
எனினும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் காயமடைந்தவர்களை உழவு யந்திரங்களில் ஏற்றிக்கொண்டு வெள்ளைக் கொடியைப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு செல்கின்றதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்கள் சரமாரியாக நடத்தப்படுவதனால் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட்டுக்கூற முடியவில்லை. எனினும் இன்று காலை 7.40 மணி தொடக்கம் 10.40 மணி வரையுமுள்ள மூன்று மணித்தியால காலப்பகுதியில் சுமார் 180 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. எனினும் சிறிலங்கா படையினர் தாக்குதல்களை இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்வதனால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதுவரையில் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு இன்று காலை தொடக்கம் இதுவரை 38 காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 12 பொதுமக்கள் மருத்துவமனைக்கு உழவு யந்திரங்களில் எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும், புதுமாத்தளன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது அனைத்துலக அழுத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரவித்து வரும் குற்றச்சாட்டுகளை ஐக்கிய நாடுகள் சபை உள்வாங்கி அதன் அடிப்படையில் கருத்து வெளியிடுவதை தடை செய்யும் வகையில் புலம் பெயர் தமிழர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
வன்னியில் அப்பாவி மக்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தி தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொன்று குவிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கண்டிப்பதற்கு கூட ஐக்கிய நாடுகள் சபையால் முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேரடி யுத்த முனைகளில் கூட தடை செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள் மற்றும் இரசாயன குண்டுகளை அப்பாவிகள் மீது வீசும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத அல்லது அது குறித்து கண்டனம் கூட வெளியிட முடியாத ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர்கள் போல் செயல்பட்டு விடுதலைப் புலிகளை ஆயுதங்களை களையுமாறு கோருவது விசனமளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையானது தனது கையாலகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக விடுதலைப் புலிகள் மீது குற்றச்hட்டுகளை முன்வைத்து தம்மை தற்காத்துக் கொள்ள முயல்கின்றது இதனை அனைத்துலகத்திற்கும் அதன் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டியது அவசியமாகின்றது.
மக்களுக்கு மனிதநேய பணிகளை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் அனைத்து அமைப்புகளையும் வன்னியில் இருந்து வெளியேற்றியுள்ள அரசாங்கம் தனது யுத்த நிகழச்சி நிரலுக்கு அமைவாக செயல்படுத்தி வரும் அரச சார்பு பரப்புரை வலையமைப்பின் தகவல்களின் அடிப்படையில் ஐநாவின் செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் தமது கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பினையும் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் இதனை தொடர அனமதிப்பது அனைத்துலக ரீதியில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
குறிப்பாக ஒரு பக்ச் சார்பான கருத்துக்களையும் ஸ்ரீலங்கா அரசு நிலைப்பட்ட வாதங்களையும் முன்வைக்கும் பி.பி.சி போன்ற ஊடக வலையமைப்புகளுக்கு வன்னியின் உண்மை நிலையினை தெளிவு படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஐநாவின் முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான மின்னஞ்சல்கள் மற்றும் நேரடி தபால்களை அனுப்பி அவர்களின் ஸ்ரீலங்கா அரச சார்ப்பு போக்கினையும் கருத்து நிலைப்பாட்டையும் மாற்ற வேண்டியது புலம் பெயர் தமிழர்களின் முக்கிய பணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்பராவில் உள்ள IN FRONT OF THE LODGE, ADELAIDE AVENUE இல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.09) காலை 10:00 மணிக்கு பேரணி நடைபெறவிருக்கின்றது.
இப்பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கான பேருந்துகள் Aurban, Homebush, Seven Hills, Pendle Hill ஆகிய இடங்களில் இருந்து காலை 7:45 நிமிடத்துக்கு புறப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சிட்னியில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:
Dush Spices: 96882772 / 0425253695
Pyramid Spices: 97644433 / 0412486573
Sri Balan: 0415185206
Velupillai: 97499691 / 0412440759
Tony: 96884996 / 0401747039
Krishna: 98966405 / 0412065356
மெல்பேர்ணில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:
Dominic: 0404802104
Gowriharan: 0402078430
Ramesh: 0414185348
Paranee: 0450477455
ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரை வழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர்.
தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு இராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன.
இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இதற்கு வசதியாகவே சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருந்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாத்தளன் தொடக்கம் வலைஞர்மடம் உள்ளடங்கலான பகுதிகளை நோக்கி மிகச் செறிவான எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், தாங்கிகளின் தாக்குதல்களுடன் மற்றும் கனரக துப்பாக்கித் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர்.
படையினரின் எறிகணைகள் மக்கள் வாழும் பகுதிகளில் மிகவும் செறிவாக வீழ்ந்து வருவதால் பொதுமக்கள் தரப்பில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய பேரபாயம் உருவாகியிருப்பதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களின் விபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
நேற்று எமது மக்களின் வருகை குறைந்திருந்தாலும் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். நேற்று காவல்த்துறையினரால் ஏற்பட்ட இன்னல்களையும் எதிர்கொண்டு இன்று இன்னும் அதிகமான உணர்வுடனும் உறுதியுடனும் எங்கள் மக்கள் போராடினார்கள். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்கொண்டு போராடும் இனம் தமிழினம் என கடந்த சில நாட்களில் கனடா அரசிற்கும், உலகிற்கும் விளங்கியிருக்கும்.
இன்று ஏழாவது நாளாகத் தொடரும் உண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்து கொண்ட திரு. ஜுலியஸ் ஜேம்ஸ் அவர்களின் உடல்நலம் பாதிப்புற்று கடுமையான வயிற்று வலியால் ழுவவயறய ஊiஎiஉ வைத்தியசாலையில் அவசர மருத்துவச் சேவையாளர்களால் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் தன்னுடைய உண்ணாநோன்புப் போராட்டத்தைக் கைவிடமாட்டார் என உறுதி கூறினார். எமது உறவுகள் தமது பாதிபுற்ற உடல் நலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நம்பிக்கை தளராமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக