செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-15

என் வாழ்க்கையில் ,முதல் முறையாக ,,இந்த தேர்தல் சமயத்தில்தான் ,எனக்கு என் சொந்த ஊரில் இருக்கும் பாக்கியம் கிட்டியிருக்கிறது.என் சுட்டு விரலில் கரும்புள்ளி பதியும் அதிர்ஷ்டமும் சேர்ந்திருக்கிறது.
ஊர் ஊரா 3 வருடத்துக்கு ஒரு இடமென மாற்றலாகிப்போய்க்கொண்டிருந்தால் எப்படி ஓட்டளிப்பது?தபாலில் அனுப்பியிருக்கலாம்,ஒரு நடை வந்து போயிருக்கலாம் என்று முணு முணுக்கிறீர்கள் .தெரிகிறது.?
அடுத்தவாரம் தேர்தல் என்றால் இரண்டு நாளில் ஆத்துக்காரரின் வங்கி சொற்படி நாங்கள் ராஜபாளையம் போகணும்,மதுரை மாற்றலை ஏற்று, மதுரை சலோ என்று ஓட வேண்டும்,ஊட்டி மும்பை என்று வங்கி எங்களை ஓட்டியதில் நாங்கள் ஓட்டு பதியும் வாய்ப்பை இழந்தோம்.எங்கள் ஓட்டெல்லாம் ,யார் யார் ,யார் யாருக்கெல்லாம் எப்படியெல்லாம் போட்டார்களோ?
எத்தனை தேர்தல்களை புறக்கணித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால்,கொஞ்சம் இதுவாகத்தான் இருக்கிறது.[எதுவாக ?வெட்கப்படுகிறேன் வேதனைப் படுகிறேன்,துக்கப் படுகிறேன்..துயரப்படுகிறேன்.]{விசு சார் கொஞ்சம் வார்த்தைகளைத் தந்து உதவுங்களேன்.}
இந்த முறை ,எங்கள் தொகுதி வாக்குச் சாவடி அடுத்த தெருவில்தான் .ஒட்டு பதிவு செய்தபிறகு ,இதுவரை போடாததற்கு பிராயச் சித்தமாக விட்டுப்போன 8விரல்களிலும் புள்ளி குத்தி விடச் சொல்ல இருக்கிறேன் .குத்துவார்களா?.[என் வயதை கணிப்பது இருக்கட்டும், மேலே வாசியுங்கள்]

இன்னொரு விஷயம் சொன்னால் ,எல்லோரும் என்னைப் பார்த்து,
"குத்து குத்துன்னு குத்தணும் குத்தணும்,மொத்து மொத்துன்னு மொத்தணும் மொத்தணும்"னு பாடிட்டே துரத்தி வருவீர்கள்.
லண்டனில் 3 ஆண்டு இருந்த சமயம், எங்கள் தொகுதி, நார்த் ஃபின்ச்சிலி வேட்பாளரை, 10 டெளனிங் ஸ்ட்ரீட் க்கு அனுப்பிவைக்க என் ஓட்டைப் பதிந்தேன்.
எ...ஸ்..ஸ்கேப்
ரொம்ப stress, ஒவர் வேலைப் பளு என்று இப்பொழுது முக்கியமாய் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் அதிகம் யோகா கத்துக்கப் போகிறார்கள்.

அவர்களை யோகா சொல்லி தருபவர்கள் ஏனோ ப்ரைன்வாஷ் செய்து விடுகிறார்கள். அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்றும், திருமணம் செய்யவேண்டாம் என்றும் கற்பிக்கப் படுகிறது. குடும்பத்தை விட்டு வேலைக்காக அடுத்த ஊரில் இருப்பவர்கள் தான் அதிகம் இதில் மாட்டிக் கொள்கிறார்கள்.

முதலில் பெற்றவர்களும் பிள்ளைகள் கெட்டுப் போகாமல் இருந்தால் போதும் என்று நினைத்து இவர்கள ஒன்றும் சொல்வதில்லை. சொத்தில் ஒரு பகுதி அல்லது மாதம் மாதம் ஒரு பெரியத் தொகை வசூல் நடக்கிறது. சிலர் வேலையை விட்டு விட்டு அந்த கூட்டத்தில் முழு நேரமாய் சேர்ந்து விடுவதும் உண்டு.

பிள்ளைகள் இப்படி செல்வதைத் தடுக்க முடியாமல் ஜோசியம் என்று அலையும் பெற்றவர்கள் இப்போது அதிகம். திடீரென்று வருமானமும் நின்று சொந்தப் பந்தங்களிடம் சொல்லவும் முடியாமல் வருந்துகிறார்கள்.

அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டும். திருமணம் செய்ய காலம் கடத்துவது, மிக இள வயதில் நிறைய பணத்தைப் பார்த்து விடுவது போன்றவற்றால் தற்போது இப்படி யார் கையில் ஆவது மாட்டிக் கொள்கிறார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.

கன்னம்கரேலென்ற
புதிதாய் போட்ட 
தார் சாலையின் 
இரு பக்க ஒரங்களிலும் 
திட்டுத் திட்டாய்
தீவுகள் போல் 
பல வண்ணங்களில்
உதிர்ந்து கிடக்கும்
பெயர் தெரியாதப்
பூக்களை ஒவ்வொன்றாக
ரசித்து நடந்து 
சாலையின் கடைசிக்கு
வந்து ஒரு புழுதி
படிந்த காரின்
கண்ணாடியில்
I love this avenue
என்று ஒற்றை விரலால்
எழுதுகையில்
என் தலையிலும்
சில பூக்கள்
உதிர்ந்தன

http://raviaditya.blogspot.com/feeds/posts/default
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை கண்துடைப்பு என்று கூறிய விடுதலைப் புலிகள் இயக்கம், "மனிதாபிமானமும், அரசியல் தீர்வுக்காண அடித்தளமும், அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை" என்று கூறியிருந்தது. விடுதலைப் புலிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய சிறிலங்க [...]
குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட, உலகின் முதலாவது ஒட்டகம் (பெண், அதற்கு இடப்பட்டுள்ள பெயர் Injaz) கடந்த ஏப்ரல் திங்கள் 8ம் நாள் ஐக்கிய அரபு எமிரேட்டில் பிறந்துள்ளது.இன்னொரு முழு வளர்ச்சி கண்ட ஒட்டகத்தின் சூலகத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களை ( கலத்தின் கரு) பிறிதொரு ஒட்டகத்தின் முட்டைக்குள் செலுத்தி அதனை ஆய்வுசாலையிலும் கருப்பையிலும் என்று வளர்த்து இவ்வொட்டகத்தை குளோனிங் (பிரதிப்பிறப்பு)

இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்

உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது

காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
நீ
சரி செய்த போது தான்
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது
என்பது
உனக்குத் தெரியுமா...?

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவின் எண்ணிக்கை சற்றே
கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................


கருத்துகள் இல்லை: