இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி அந்த மக்களுக்குப் போய் சேர்ந்ததாக தகவல் இல்லை. நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ - கேட்ட ஜெயலலிதா மீது வழக்கு : அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையிலுள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனு விவரம் :
காப்பாற்றுங்கள் தாயே! மடிப்பிச்சை கேட்கிறேன்!! என்று காலில் மண்டியிடும் கருணாநிதியும், தமிழக தலைவர்களின் முழக்கங்கள் எங்கே? களத்தில் கடைசிவரை போராடுவோம் என மானம் காக்கும் தமிழ் மறவர்கள் எங்கே!! : ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக எழுந்து நிற்க முடியாத நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு முதல்வர் கருணாநிதி தாமே தலைமை ஏற்று ஓர் ஊர்வலம் நடத்தியிருக்கிறார். பாவம்! எத்தனை முறைதான் ஊர்வலம் நடத்துவார்? எத்தனை முறைதான் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவார்? எத்தனை முறைதான் சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் மீண்டும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றுவார்?

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் நூறு கோடி டாலரை தாண்டியிருக்கிறது. டிசம்பர் மாதத்தில் 1.01 பில்லியன் டாலர் ( சுமார் 4,950 கோடி ரூபாய் ) மதிப்புள்ள மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த அளவுக்கு மருந்து ஏற்றுமதி ஆகி இருப்பது டிசம்பர் மாதத்தில் தான். இதுவே, 2007 டிசம்பரில் 60.9 லட்சம் டாலருக்கு தான் நடந்திருந்தது. அதிலிருந்து 46.3 சதவீதம் உயர்ந்து இப்போது அது 101 கோடி டாலருக்கு நடந்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரித்து 8.44 பில்லியன் டாலருக்கு நடந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வருடத்தில் 6.97 பில்லியன் டாலருக்கு தான் நடந்திருந்தது. பார்மாசூடக்கல்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்
பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்ற செய்திகள் அடிப்படை இல்லாதவை என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைய அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எவ்விதக் கூட்டணியும் அமைக்காது என ஜெயலலிதா மறுத்துள்ளார்.
"தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரும் என சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் 2009 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்ற செய்திகள் எவ்வித அடிப்படையும் இல்லாதவை. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து நாங்கள் எந்தக் கட்சியுடனும், எந்த பேச்சும் நடத்தவில்லை," என ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்கள்ஸ்,
'விழாக்காலம்' என்றால் இனிப்பு இல்லாமல் இருக்குமா?
மைஸூர்பாகு தெரியும், மைஸூர் போண்டா தெரியும், ஏன் மைஸூர் ரசம் கூடத் தெரியும் ஆனால் இது என்ன மைஸுர் பாயஸம்?
இது நம்ம எழுத்தாளர் ஏகாம்பரி வழங்கிய சமையல் குறிப்பு. நான்பெற்ற இன்பம் வகையில்......
செய்ய எடுத்துக்கொண்ட நேரம் ஏழே நிமிடங்கள்.(செஞ்சதே ஒரு கப்தான். யாராவது செய்முறைன்னு சொன்னால் உடனே நம்பிச் செயலில் இறங்கிறக்கூடாது என்பது இந்த 35 வருச அனுபவம். அதான் கொஞ்சமாச் செஞ்சு பார்க்கணுங்கறது)
தேவையான பொருட்கள்(எல்லாம் அந்த ஒரு கப் பாயஸத்துக்குத்தான்)
முந்திரிப்பருப்பு: 6 (முழுசுமுழுசா இருக்கணும்)
உலர்ந்த திராட்சை: அரைத் தேக்கரண்டி( எண்ணித்தான் போடணுமுன்னா ஒரு 15 இருக்கட்டும்)
குங்குமப்பூ: அரைச்சிட்டிகை (இதுவும் ஒரு பத்து இழை)
சக்கரை: 5 டீஸ்பூன்
பால்: ஒரு கப்
கடலை மாவு: 2 டீஸ்பூன்(கும்மாச்சியா இருக்கட்டும்)
நெய்: மூணு டீஸ்பூன்
தண்ணீர் : 2 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்புப் பத்தவச்சு அதை'ஸிம்'மில் வச்சுக்குங்க. ஒரு பாத்திரம் அதுமேல் வச்சு நெய்யை ஊத்தி, நெய் காய்ஞ்சதும் முந்திரியைப் பொன்னிறமாக வறுத்துக்குங்க. அரைப்பொன்னிறமானதும் இதுலேயே திராட்சையும் சேர்த்துப் பொரிச்சு எடுத்துவச்சுக்கலாம்.
அதே பாத்திரத்தில் கடலைமாவைப்போட்டு கைவிடாமல், அடிப்பிடிக்காமல் வறுக்கணும். நல்லா இளம் ப்ரவுண் நிறமாகி நல்ல வாசனையா வந்ததும் சக்கரையையும், ரெண்டு டீஸ்பூன் தண்ணீரையும் சேர்த்துக் கிளறிக்கிட்டே இருங்க. நல்லா கூழ்போல வரும்.
மைக்ரோவேவில் ஒரு கப் பாலைக் கொதிக்கவச்சு, அந்தக் கூழில் சேர்த்துட்டு, குங்குமப்பூ சேர்த்து இளக்கி, எடுத்துவச்ச வறுத்த முந்திரி திராட்சையால் அலங்கரிக்கவும்.
நன்றி: எழுத்தாளர் ஏகாம்பரி
அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு, கேரளப் புத்தாண்டு விஷூ ஆகிய விழாக்களுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக