வியாழன், 2 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-01

ஜெர்மனியைச் சேர்ந்த ஓக்ஸ் வேகன் கார் தயாரிப்பு நிறுவனம், 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையைத் துவக்கியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஓக்ஸ் வேகன் கார் தயாரிப்பு குழுமத்தின் புதிய கார் தயாரிப்புத் தொழிற் சாலை, மகராஷ்டிர மாநிலம் புனேவை அடுத்த சகான் தொழில் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. 575 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையை, மகாராஷ்டிர கவர்னர் ஜமீர் திறந்து வைத்தார். விழாவில், ஓக்ஸ் வேகன் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோசம் ஹிஸ்மேன் பேசியதாவது: எங்களது நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள், உலகின் 60 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இது 61வது தொழிற்சாலை. எங்கள் குழுமம், ஒன்பது வகையான கார்களைத் தயாரித்து, 150 நாடுகளில் விற்பனை செய்கின்றன. ஓக்ஸ் வேகன் குழுமத்தின் 66 சதவீத உற்பத்தி, ஜெர்மனியைத் தவிர இதர நாடுகளில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் தற்போது 120 டீலர்கள் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு அவுரங்கபாத்தில் அமைக்கப்பட்டுள்ள எங்களது தொழிற்சாலையில் இருந்து ஸ்கோடா, ஓக்ஸ் வேகன் மற்றும் ஆடி வகை கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக புனே கார் தயாரிப்பு தொழிற்சாலை 3,800 கோடி ரூபாய்(580 மில்லியன் யூரோ) முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நிறுவனங்கள் சார்பில், இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் இந்த முதலீடு தான் அதிகமானதாகும். புனே தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்; 2,500 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.
இந்தியா மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நாட்டை முன் னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென இந்திய மக்கள் நினைக் கின்றனர். அதற்காக உழைக்கவும் துவங்கி விட்டனர். இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு கார் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இதனால், இந்தியாவின் ஆட்டோ மொபைல் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில், ஆண்டுக்கு 20 லட்சம் கார்கள் தேவையாய் இருக் கும். ஜெர்மனிய தொழில் நுட்பமும், இந்திய திறமையும் இணையும் இந்தத் தொழிற்சாலை மிகப் பெரிய வெற்றியைப் பெறும். ஓக்ஸ் வேகன் நிறுவன தலைவர் ஜெயெர்க் முல்லர், துணைத் தலைவர்கள் டெட்லெப் விட்டிங், கே.கே.சுவாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் அல்ரிச் ஹெகன் பெர்க் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்
சேதுராமன்:
1. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை நல்லது தான் - வருண் மாதிரி வரும்போதே சூறாவளியாக வந்து தான் கெட்டதுமல்லாமல், கட்சிக்கும் கெட்ட பெயர் சேர்க்க வேண்டுமா?
பதில்: போன வாரமே நான் ஏற்கனவேயே கூறியபடி நாவடக்கமும் மிகவும் தேவை அரசியல்வாதிக்கு. யாகாவாராயினும் நாகாக்க என்பதை முக்கியமாக அவர்கள் மறக்கக் கூடாது. வருண் காந்தி இதை அறிவது முக்கியம். அதுவும் காங்கிரஸ் சார்பு செயல்பாட்டை உடைய தேர்தல் கமிஷன் இம்மாதிரி தருணத்துக்காகவே காத்திருக்கிறது என்பதையும் அவர் மறக்கக்கூடாது. இதற்கென்றே பேச்சை எழுதித் தருபவர்களது துணையை நாடியிருக்க வேண்டும்.

2. கிழங்களுக்கெல்லாம் இன்னம் அரசியல் ஆசை போகவில்லை போலிருக்கிறதே? ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஷெகாவத், இன்னமும் போட்டியிட ஆசைப் படுகிறார்களே - இது தேவைதானா? இன்னொன்று நேரு குடும்பத்தினருக்கு தாசானுதாசனாய் என் வாழ் நாள் பூராவும் உழைத்தேனே என்று புலம்புகிறாரே?
பதில்: அரசியலில் யாரும் யாருக்காகவும் விட்டுத் தரவெல்லாம் மாட்டார்கள். ஏன் அதை எதிர்ப்பார்க்க வேண்டும்?

3. ஐக்கிய முன்னணிக்குள்ளேயே புரசல் வந்திருக்கிறதே - ஷரத்பவார் பிரதமர் பதவிக்குப் போட்டி போடுவாரா? இவர் பிரதமராக வருவது நல்லதா?
பதில்: எல்லா அணிகளிலும் குழப்பம்தான். சான்ஸ் கிடைத்தால் ஷரத் பவார் என்ன, வேறு எந்த அரசியல் வாதியுமே போட்டியிடுவார். அதனால் நாட்டுக்கு நல்லது வருமா என்பது அவரது செயல்பாட்டை பொறுத்ததே.

4. தமிழ் நாட்டிலும், கூட்டணிகள் இன்னமும் பேரம் பேசுவதிலேயே இருக்கின்றனரே - விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையே இல்லை போலிருக்கிறதே?
பதில்: விட்டுக்கொடுப்பதா? சரியாப் போச்சு போங்க. யாரேனும் விட்டுக் கொடுப்பதுபோல வெறுமனே மயிரிழை சந்தேகம் வந்தாலும் போச்சு. சம்பந்தப்பட்ட கட்சிக்கு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள். சீட் தராமல் வெறுமனே இதயத்தில் இடம் தந்து விடுவார்கள்.

5. சஞ்சய்தத் போட்டியிடக்கூடாதென்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது உங்கள் கருத்து?
பதில்: சரியான தீர்ப்புதான். அது சரி ஒரு சிறு சந்தேகம். பை சான்ஸ் தண்டனையை கோர்ட் நிறுத்திவைத்தால் அவர் போட்டியிட வந்தால் அவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஏதேனும் அறிவுரை தருமா? அல்லது அதெல்லாம் வருண் காந்திக்கு மட்டுமே செல்லுமா?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்

வருண். இவரைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று சிலர் என்னைக் கேட்டார்கள். சின்ன பையன்களை (தன் கட்சியில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்) காங்கிரஸ் கட்சி தான் ஹிரோவாக்கிறது என்றால் இப்ப பிஜேபியும் அதை செய்கிறது.

மேனகா, சோனியாவின் குழாயடி சண்டை மீடியாவின் மூலம் மற்றொரு முறை அரங்கேறியுள்ளது. வருண் என்ற இளைஞர் பேச்சு நிச்சயம் மதவாத வன்முறை பேச்சு தான். இந்த மாதிரி பேச்சுக்கு தான் கூட்டம் கூடும் என்று அவர் நினைத்ததின் விளைவு இது.

அத்வானி அன்று நடத்திய மீடியா கூட்டதில் கூட அவர் கருப்பு பணம் பற்றி 1 மணி நேரம் பேசிய பின் மீடியா அவரிடம் கேட்ட கேள்வி "வருண்" பற்றியது தான். ஆக மீடியாவும் பரபரப்புக்கு தான் அலையுகிறார்கள். அவர்களும் டை கட்டிய ரவுடிகள்.

சோனியா மேனகா குடும்ப சண்டையை நன்றாக உபயோகப்படுத்தியுள்ளார்கள் பிஜேபி. வருண் பேசியதற்கு காரணம் அவர்கள் தான். வருண் பேசிய பேச்சு அவருக்கே கூட மறந்து போயிருக்கலாம் ஆனால் CNN-IBN அதை பத்து நாட்களுக்கு பின்பு எப்படியோ தங்கள் டிவியில் போட்டு ( நாங்க தான் இதை முதலில் ஒளிபரப்பினோம் என்று பெருமை வேற ) பரபரப்பு செய்துவிட்டார்கள்.

வருண் கீதையில் இப்படி தான் சொல்லியிருக்கிறது என்று சொல்லுவது எல்லாம் சுத்த பேத்தல். இதற்காகவே இவரை இடுப்புக்கி கீழே சுடனும். இஸ்லாம் தீவிரவாதிகள் குரானை கோட் செய்வது போல தான் இதுவும்.

அசிங்கமாகப் பேசுவது, உதார் விடுவது தான் அரசியல் என்று வருண் நினைத்துவிட்டார். அருண் ஜெட்லியுடன் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு இவருக்கு ராஜ்நாத் போன்றவர்கள் டியூஷன் எடுக்க வேண்டும்.

அரசியல் எந்த அடிப்படையும் அறியாத, ஒரு முதிர்ச்சியற்ற இளைஞனுக்கு சோனியாவின் எதிரி குடும்பத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக இவருக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள் பிஜேபி. பிஜேபி எப்படி தாழ்ந்து போயிருக்கிறது (அல்லது வளர்ந்திருக்கிறது ) என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. முதலில் வருண் பேசியது தவறு என்று ஒத்துக்கொண்ட பிஜேபி பின்பு இந்த பிரச்சனை பெரிசாக பெரிசாக இதில் என்ன தப்பு ? அது அவருடைய பேச்சே இல்லை என்று பல பொய்களை சொல்லி சீப்பான அரசியலை செய்ய ஆரம்பித்தது. இதைக் கூட கீதையில் சொல்லியிருக்கலாம் யார் கண்டது.

உண்மையான பிரச்சனையை விட்டுவிட்டு தேர்தல் கமிஷன் கூறிய கருத்தை பிடித்துக்கொண்டு பிரச்சனையை திசைதிருப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

வருணின் தொகுதியான பிலிபிட் காவல் நிலையத்தில் ஜாமின் கேட்டு பிறகு வேண்டாம் என்று சொல்லி, ஜெயிலுக்கு பொய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, கொசு கடித்தது என்று தன் வீரத் தழும்பை மக்களிடம் காண்பித்து, அனுதாபம் பெற்று ஜெயித்துவிடுவார்.

ஜட்டி பனியன் கூட போட தெரியாத இந்த பையன் நாலை பிரியங்கா, ராகுலிடம் இவர் சண்டை போடவே நேரம் பத்தாது. இவர் எப்படி மக்கள் பிரச்சனையை தீர்க்க போகிறார்?

பிஜேபி கட்டுப்பாடு உள்ள கட்சி என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டார்கள். இந்த மாதிரி சில்லரை பசங்களை வைத்து அரசியல் நடத்துவது இவர்கள் மேல் இருக்கும் கொஞ்ச நெஞ்ச மரியாதையும் போக்கிவிடும்.

இதில் பிஜேபி, காங்கிரஸ் கவலைகளை விட பெரிய கவலை முலாயம் சிங்குக்கு. மாயாவதி வருணை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை தன்னிடமிருந்து பிரிப்பது அவருக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது, வருண் அந்த சமூகத்திற்கு எதிராக பேசியதை விட...
இவர்கள் தான் சிறுபான்மையின காவலாளிகள்.


பிகு: இந்த கட்டுரையில் காந்தி என்ற சொல் தேவையில்லை. அதனால் பட இடங்களில் போடவில்லை.



பிகு: மேலே உள்ள படம் ஸ்ரீநகரில் சில நாட்களுக்கு முன்பு எடுத்தது. ஏன் எந்த மீடியாவும் இதை கண்டுக்கொள்ளவில்லை ?


More than a Blog Aggregator

by Jaffer
ந்தைகள் மீண்டும் உயர ஆரம்பித்ததோடு, அவைகள் பெற்ற உயரத்தையும் தக்க வைத்துக் கொள்ள போராடி வெற்றியும் பெற்று வருவதை அனைவரும் கவனித்திருக்கலாம். உலக சந்தைகளோடு, நம் சந்தைகளும் ஒரே மாதிரியாக பின்பற்றிக் கொண்டுள்ளது.

சந்தைகள் வெறும் உயர்வோடு மட்டும் அல்லாமல், அவற்றின் Volumeம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சந்தைகள் ஒரேயடியாக உயராமல் படிப்படியாக அவ்வப்போது ஒரு Profit Bookingஐ சந்திப்பதால் ஒரு சிறு சரிவையும் சந்தித்துக் கொண்டே உயரும் என நினைக்கிறேன்.

நேற்றைய புதிய கணக்குகள் நல்ல முறையில் துவங்கியிருப்பதாகவே எண்ணுகிறேன். அவற்றிற்கு உலக சந்தைகளோடு நம் சந்தைகளின் உயர்வே சாட்சி. அனைவரும் எண்ணுவதுபோல இந்த உயர்வு Short Coveringஆல் ஏற்பட்ட உயர்வு என என்னால் நினைக்க முடியவில்லை. Short Coveringஆல் ஏற்பட்ட உயர்வு என்றால் உயர்ந்த உடனேயே மீண்டும் சந்தை இறங்க ஆரம்ம்பித்து விடும். ஆனால் இந்த உயர்வு ஆரோக்யமான பலம் பொருந்திய உயர்வு எனதான் நான் நினைக்கிறேன்.

ஆனாலும் முதலீட்டாளர்கள் அவசரப்படாமல் சிறிது பொருத்திருந்து சந்தை 3500க்கு மேல் என்ன நிலைப்பாடு கொள்கிறது என்பதைப்பொருத்து நம் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை அவசரப்படாமல் பணத்தை பத்திரமாக வைத்திருப்பதுதான் நல்லது என நான் நினைக்கிறேன்.

இன்றைய சந்தைகள் நேற்றைய அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளின் உயர்வால் இன்று ஆசிய சந்தைகளும் உதவினால் உயர துவங்கும் என நினைக்கிறேன்.

இன்றைய சந்தைகளின் டெக்னிக்கல் நிலைகள்,

2891 - 2928 - 2994 - 3032 - 3098 - 3135 - 3201

.


More than a Blog Aggregator

by வெட்டிப்பயல்
பேய் படம் பார்க்கறதுனு முடிவு எடுத்ததுக்கு அப்பறம் லாஜிக் பார்க்கக் கூடாது. பேய் டீவில எப்படி வருது, கரண்ட் போனதுக்கு அப்பறம் எப்படி டீவி தெரியும், மாதவன் ஃபோட்டோ மட்டும் ஏன் கோணலா தெரியுது, நாய் ஏன் வீட்டுக்குள்ள வரலை இப்படி எல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. இந்த மாதிரி படத்தை எல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

எங்க ஏரியால யாவரும் நலம் வரலை. 13B தான். இங்கிலிஷ் சப் டைட்டிலோட பார்த்தாச்சு. உங்களுக்கு அட்ரனலின் சுரக்கறது பிடிக்கும்னா இந்த படம் நிச்சயம் பிடிக்கும். பல இடங்களில் உங்களுக்கு அட்ரனலின் சுரப்பது நிச்சயம். அனைத்து பேய் படத்திலும் இருக்கும் பழிவாங்கல் தான் கதை என்றாலும் அதைப் பிடித்த விதம் அருமை. படத்தின் முதல் நாயகன் PC ஸ்ரீராம் தான். கேமராவை எங்க எங்க வெச்சி எடுத்திருக்காருனு யோசிக்கறதுக்குள்ள அடுத்த ஆச்சரியத்துக்கு எடுத்துட்டு போயிடறாரு.

அடுத்து எல்லாப் பேய் படத்துக்கும் பலம் இசை. ம்யூட் பண்ணி பார்த்தா நிறைய பேய் படம் சிரிப்பு படமாகிடும். இந்த படத்துலயும் பின்னனி இசை பெரிய பலம். நிறைய காட்சிகளில் நமக்கு பயத்தை ஏற்படுத்த இந்த இசை முக்கியமான பணியை செய்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி பண்ணாம சில இடங்களில் பின்னனி இசை இல்லாம அமைதி காத்து நமக்கு நம்ம இதய துடிப்பைக் கேட்க வைத்ததற்கு இசை அமைப்பாளரை நிச்சயம் பாராட்டி ஆகணும்.

இது பேய் படம்னாலும் எந்த ஒரு இடத்திலும் முகம் ஃபுல்லா பவுடர் பூசியோ இல்லை உருவம் மோகன் மாதிரி சந்தனம் பூசியோ பயமுறுத்த முயற்சிக்கவில்லை. அங்க நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சியும் மாதவன் முகத்துல ஏற்படுத்துற கிலிக்கு குறையாம நமக்கும் ஏற்படுத்துற காட்சி அமைப்புகளுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.




படத்தோட கதையை எங்கயும் சொல்லி உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு அருமையான அனுபவத்தை கெடுக்கக் கூடாதுனு தான் எந்த காட்சியையும் சொல்லலை. அட்ரனலின் சுரக்கறதை ரசிக்கிற ஆளா நீங்க இருந்தா இந்த படத்தை தவறாம தியேட்டர்ல போய் பாருங்க. நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். ராத்திரி ஷோக்கு தனியா போயிடாதீங்க.

படத்துல சில பல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல த்ரில்லர் கொடுத்ததுக்காக அதை எல்லாம் கண்டுக்காம விட்டுடலாம். 
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன்: 2:44)

கருத்துகள் இல்லை: