செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-13

ஆமா எல்க்ஷன் வரப்போது ... இங்க 5 வருஷ்ம் முடியப்போது என்ன செய்றது ...

கலைஞர் அரசை நல்லா விமர்சித்து விட்டோம்... பல நல்ல திட்டங்களுக்கு தடையாவும் இருந்தாச்சு ( Satellite Town) ..இலங்கை தமிழரை பத்தி பேசியாச்சு...
இந்த வருஷம் என்ன பண்றது ...

மகன் - என்னபா அப்போ இந்த வாட்டி எனக்கு எம்பி ஸீட் இல்லையா...

எப்படி கலைஞர் காங்கிரஸில் இருந்து போரை இதோ நிறுத்த சொல்லுறேன் ..அதோ சொல்லுறேனு சொல்லி தபாச்சிறோ அது மாதிரி தான் நம்மலும் அவர் அரசுல இருந்துகிட்டு குற்றம் சொல்லிட்டு ஒட்டிக்கிட்டு இருக்கோம்...

மகனே நீ மட்டும் எம் பியா இல்லாடி நாங்க மானஸ்தங்கனு ராஜினாமா பண்ணி கலைஞருக்கு ஒரு நெருக்கடி கொடுத்திருக்கலாம்...

சரி இப்போ அன்னை சோனியா என்ன சொல்றங்க நம்ம பிளானை சொல்லிட்டியா.


என்ன பிளான் பா ?

உன்னைய போய் எம்பி ஆக்கின பாரு .. ஹா ஹா என் மகன் ஆச்சே என்ன செய்ய .. கொஞ்ம் புத்திசாலியா இரு..

பிளான் என்னானு கலைஞர்கிட்ட சொல்லிட்டேன்

அதாவது ...

நம்ம கட்சி கோவிச்சிகிட்டு அம்மாவோட இனையும்.. அப்போ அவரும் நம்மல திட்டுற மாதிரி திட்டுவாரு அறிக்கையில்...

நம்மளும் பதில் அறிக்கை விடுவோம்...

ம்ம்ம்ம்

அன்னை சோனியா கிட்டையும் சொல்லியாச்சு.... நம்ம அதிமுகவில் இருந்து ஜெயித்தாலும் கடைசியில் காங்கிரஸில் தான் அய்கியம் ... ஏனா உன்னை  அவங்க கட்சியில் நல்லா பாத்துகிட்டாங்க பாரு...

சரி நம்ம தோத்து போய்ட்டா ...

நம்ம தோத்து போய்ட்டாலும் அதான் டீல் .... அக மொத்தம் ... பாமாக நிக்கிற தொகுதில பாமாக ஜெயித்தாலும் அது திமுக கூட்டனி ஜெயித்தாலும் ஒன்னு தான் கடைசியில் காங்கிரஸ் தான்...

அப்பா நம்ம கட்சி எம்பிகள் தோற்த்தா ?

(திரும்ப திரும்ப தோற்த்தா தோற்த்தானு அவ்வளவு நம்பிக்கையா நம்ம கட்சி மேல ...ஜெயிப்போம்னு நம்பிக்கையே இல்லையா)
யாரு தோற்த்தா என்ன ஜெயித்தால் என்ன. டீல் படி உனக்கு ஒரு ராஜசபா ஸீட் உண்டு ...

அப்பா நானும் எலக்ஷ்ன்ல நிக்கிறேன்

புரியாத பயலா நீ ... ஒரு பய வோட்டு போட மாட்டான்... நீ தோத்து மண்னை கவ்வ வேண்டியது தான்... அதான் நீ நிக்காம உனக்கு ஒரு எம்பி ஸீட் ரெடில
அப்புறம் என்ன

சரி கடைசியில் காங்கிரஸில் ஏமாத்திட்டா ? எனக்கு ஸீட் இல்லாம போச்சுனா?

மகனே திருடனுக்கும் ஒரு பாலிஸி இருக்கிற மாதிரி நம்மகிட்ட ஒரு அக்ரிமென்ட் இருக்கு பாரு ...

சரி அப்பவும் அல்வா கொடுத்தா..

பஸ் உடை, மரத்தை வேட்டு .. போராட்டம்னு கிளப்பிடமாட்டோம்...
அப்போ கட்சியே நம்மக்கு தான..

HI Grand pa, how are u ... why are you talking for so much time..

ஏன்பா நம்ம பேத்தி தமிழ் நாட்டுல தமிழ்ல பேசலாம்ல...

இல்லை பா அவளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது ஏதோ கொஞ்சம் பேசுவா ஆனா அது தமிழ்னு ஒத்துக்கமுடியாது. ஹிந்தி இங்கிலிஷ்ல டாப் ..படிக்கிறது டில்லி கான்வென்ட்ல

அம்மாவிடம்....

( அய்யா பிளான் பத்தி கிசு கிசு வந்தது.... )

அவரு ஜெய்த்து அல்வா கொடுத்தது போன எலக்ஷ்ன்லேயே பார்த்தாச்சு..

அப்புறம் எதுக்கு ஸீடா ? அவரு நிக்கிற இடத்துல நம்ம நின்னாலும் தோற்த்து போய்டுவோம் ... அந்த தொகுதியா பார்த்து தான் கொடுத்துருக்கோம்..

அவரு 7 பத்தி நினைக்கிறாரு ... அவரு ஜாதி வோட்டு மீதி 33 இடத்துல நமக்கு தான்..  அப்புறம் தமிழ் இலங்கை பற்றி பேசும் வைகோ, டாக்டர், நம்ம உண்ணாவிரதம் எல்லாம் இப்போ நமக்கு நல்ல பலம்...

அவரு தப்பி தவறி ஜெயித்தால் அவருக்கு அவரு மகன் தான் முக்கியம் அதனால தான் 2010ல் ஒரு ஸீட் வைத்தேன் செக்....

எல்லா அரசியல் தலைகளுக்கு ஒன்றாய் ஒன்று சொன்னாங்க
"ஆக மொத்தம் மக்களுக்கு இந்த அரசியல்வாதி பத்தி தெரிந்தாலும், தாவினாலும், காசு கோடியாய் அடித்தாலும், தமிழ் மக்கள் உயிரேவிட்டாலும், நம்ம ஒரு ஒருத்தர் கிட்டயும் சொந்த மீடியா இருக்கு ஜிங் ஜா போட,
ஒட்டு போடும் மாக்கள் அவர்கள் 100 கொடுத்தா வோட்ட போடுவான் ஒருத்தனுக்கும் சொந்த அறிவு இல்லை,  பிரியானி இருக்கு கூட்டம் கூட ..  அப்படியே அறிவு இருக்கிறவன் ஒட்டு போட வருவது இல்லை..."

இப்படியே தலைவன் சொல்றான் என்று தன் குடும்பத்தை விட்டு... உயிரக்கொடுத்து கட்சிக்கு உழைக்கும் தொண்டன் நடு தெருவுல.. நம்ம ஏசி வீடுல
அவனுக்கு ஒரு கூவாட்டர் ஒரு பிரியானி அன்பா 10 வார்தை புகழ்ந்தா ..
கட்டி புடித்து ஒரு போட்டோ .. ஒரு சில ஆயிரங்கள் கொடுத்தா ..
நமக்கு கோடி தான்...

அவனுக்கு தெரு கோடி தான்...

எல்லாத்துக்கும் விடிவு காலம்.. எப்ப தான் வரும்.. நல்ல தலைவர்கள் இல்லையா...

என்னைக்கு காசு வாங்கம உழைக்கும் தொண்டனுக்கு ஸீட் கொடுக்குறாங்களோ ... சொந்த மக்களுக்கு ஸீட் இல்லையோ அன்றைக்கு தான் கடைக்கோடி தொண்டனுக்கு ஒரு உத்வேகம் வரும்

மே1 - ஒரு புதிய வரலாறு துவங்கும் ...


டிஸ்கி - இது ஒரு கற்பனை கதை ..உன்மை இல்லை
image courtesy - தினமலர் குபீர் காணர்
அதோ போறானே அவன் தமிழின துரோகி..
எதை வச்சு சொல்ற
இன்னிக்கு சித்திரை திருநாள்னு சொல்லாமே...தமிழ் புத்தாண்டுன்னு சொல்றான்.

2.ஆமாம்...இன்னிக்கு வெறும்..சித்திரை மாதம் பிறப்புதானே...பின் டி.வி.யில் ஏன் பண்டிகைநாள் போல நிகழ்ச்சிகள்.அவர்களை என்ன துரோகிகள்னு சொல்லணும்னு அதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்.

3.தமிழ் புத்தாண்டை மாத்தினதாலே...புத்தாண்டும் விரோதியா பிறக்குது.

4.இன்று எந்த படமும் வெளியாகவில்லை..-செய்தி
அதனால் என்ன...கலைஞர்..சன் எல்லாவற்றிலும்..காலை..மாலை..இரவு என 3 படங்கள் உண்டே..

5.மயிலைக் கண்டு ஆடும் வான்கோழி போல ஏண்டா ஆடிக்கிட்டு இருக்க
மானாடா...மயிலாட நிகழ்ச்சில ஆடப்போறேன்..

6.இன்னிக்கு சந்திரன் பிரகாசமா இருக்கே ஏன்?
சூரியன் முன்னால நிற்கப்போகுதே..அதுதான்..ஆனால் அதன் ஒளியே சூரியனாலேன்னு மரந்து போச்சே..

7.இன்னிக்கு அம்பேத்கர் பிறந்த நாள்..நல்லவேளை அதையும் தைத்திங்களன்று மாற்றவில்லை...என்கிறார் ஒரு அபிமானி.
இதுவரை இந்த வலைப்பதிவில் உருப்படியாக ஒரு பதிவுவேனும் எழுதியதாக இல்லை. ஆதலால் எதாவது 'உருப்படியாக' எழுதலாம் என்று தொடங்குவது தான் இந்தத் தொடர். இது உருப்படியாக வருமா இல்லையா என்பது பற்றி எதுவும் கூறமுடியாவிட்டாலும் இது தொடர்பாக கேட்கப்படக்கூடிய சில கேள்விகளுக்கு என் பதில்கள்.
  1. இது என்ன தொடர் கதையா? சிறுகதையா?
    தொடர் தான், ஆனால் கதை சிறியது.

  2. இதற்கு முன்னர் கதை எழுதிய அனுபவம் உண்டா?
    அம்புலிமாமாவில் வந்த கதையை பெயர் மாற்றி பாடசாலை சஞ்சிகைக்கு எழுதிய அனுபவம் உண்டு.

  3. ஏன் இந்த விபரீத முயற்சி?
    என்னால் முடிந்தது... ;-)

  4. இது கற்பனைக் கதையா? உண்மைக் கதையா?
    கதை உண்மையானது, ஆனால் சில சம்பவங்கள் கற்பனையானவையாக இருக்கலாம்.

  5. உண்மை என்றால் யாருடைய கதை?
    திரு. நிமலபிரகாசன் என்பவருடையது.

  6. இதில் எந்தெந்த கதாபாத்திரங்கள் உண்மையானவை?
    அனேக பாத்திரங்கள் உண்மையானவையாவே இருக்கும், ஆனால் பெயர்கள் கற்பனையானவை.

  7. இதை எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?
    மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க... ;-)

  8. இதை தொடர்ந்து எழுதும் எண்ணம் இருக்கிறதா?
    இப்போதைக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால் முடியுமா என்பது முடிந்த பின் தான் தெரியும்.

  9. நாங்கள் இதை வாசிக்கத்தான் வேண்டுமா?
    என் எழுத்தை வாசிப்பது உங்கள் தலையெழுத்து என்றால் வாசிக்கத்தான் வேண்டும்.

  10. வேறு சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் கேட்கலாமா?
    கேட்கலாம், ஆனாலும் பதில் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
முதலாவது பாகத்துடன் விரைவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: my story
--- This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.


More than a Blog Aggregator

by ஆதிமூலகிருஷ்ணன்

பாடல்களுக்கென்று தனியாக நூற்றியெட்டு தமிழ் சானல்கள் இருந்தாலும் பகல் நேரங்களில் போட்டி போட்டுக்கொண்டு குத்துப்பாடல்கள் போட்டு நம்மை டிவி பார்ப்பதில் இருந்து எப்படியாவது விரட்டிவிடுகிறார்கள்.. முதலில் அதற்காக நாம் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். எப்படியாவது அசந்து மறந்தாவது கேட்கிறமாதிரி போட்டுவிடுவார்களா என்றால் ம்ஹூம்.. சான்ஸே இல்லை.

பேய்களும், கோட்டான்களும் கூட உறங்கிவிடும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அவர்களை அறியாமல் ஒவ்வொருவராய் மெலடி, காதல், சென்டிமென்ட் என மெதுவாக போட ஆரம்பிப்பார்கள். நானும் நேற்றிரவு சில சொந்த சோகங்கள் மிகுதியாகவிட (நிஜமாப்பா..) அதை தணிக்கவேண்டி தனியாவர்த்தனமாய் வாங்கி வந்திருந்த நைண்டியை ஆரம்பித்திருந்தேன்.

சும்மாவே காதல் கவிதைகள்னா கொஞ்சம் புல்லரிச்சுக்குவேன், அதிலும் 90 உள்ளே போய்விட்டால் வரிக்கு வரி புல்லரிக்க ரெடியாகிவிடுவேன். நேற்று சன் ம்யூசிக்கிலேயும், இசையருவியிலும் மாறி மாறி காதல் மற்றும் அழகழகான பாடல்களாக போட்டு தாளித்துவிட்டார்கள்.

நினைவிலிருக்கும்  சில பாடல்களிலிருந்து சில சாம்பிள் வரிகள் மட்டும்..

டிஷ்யூம் : பூ மீது யானை.. பூ வலியைத்தாங்குமோ..

தீபாவளி : சிரித்தாய்.. இசை அறிந்தேன், நடந்தாய்.. திசை அறிந்தேன்..

12102006-THN14image1

மாயாவி : கடவுள் தந்த அழகிய வாழ்வு.. உலகம் முழுதும் அவனது வீடு..

மொழி : காதல் பேசும்போது மொழிகள் கிடையாது..

காதலர்தினம் : நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும்..

ஆயுதஎழுத்து : யாக்கைத் திரி.. காதல் சுடர்..

யாரடிநீ.. : ஆண் மனதை அழிக்க வந்த சாபம், அறிவை மயக்கும் மாய தாகம்..

சினிமாவே டுபாகூர், அதிலும் பாடல்கள் இன்னும் டுபாகூர்.. இருப்பினும் ரசிக்கிறோம். அழகிய ஒரு கிராமத்து ஃபோக் 'எம்டன்மகன்' படத்தில் 'கோலிக்குண்டு கண்ணு, கோவப்பழ உதடு..' பாடல் எடுக்கப்பட்ட விதமும், பரத், கோபிகாவின் நடிப்பும் பிரமாதப்பட.. ரசிக்கமுடிந்தது. இடையிடையே இது போல பாடல்களும் வருகின்றன.

எதற்கும் சனிக்கிழமை இரவுகளில் ட்ரை பண்ணலாம். மற்ற நாட்களென்றால்  மறுநாள் ஆப்பிஸில் மதிய மீட்டிங்கில் வழக்கமாக கொட்டாவி விடுபவர்கள், குறட்டைவிட நேரிடும்.. ஏற்கனவே சிச்சுவேஷன் சரியில்லை, அப்புறம் சீட்டுக்கு வேட்டு வரக்கூடும்.!

.

நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியது போன்று இன்று (ஏப். 13) சுவிஸ் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் சிலர் சுவிற்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தூதரகத்தில் இந்தியத் தேசியக்கொடி பறந்து கொண்டிருந்த கம்பத்தையும் தேசியக்கொடியையும் தாக்கி அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததை தொடர்ந்து அவர்கள் தூதரகத்திற்கு உள்ளே செல்லும் முயற்சியை கைவிட்டு தப்பிச் ஓடியுள்ளனர்.

இது குறித்து தூதரகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விரைந்து செயற்பட்டதை தொடர்ந்து தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பேர்ணிலுள்ள சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் இந்தியா எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடாத்திவரும் புலிகள் மற்றும் புலிசார்பு அமைப்புக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போன வருடம் வரை தமிழர்கள் உளமார வரவேற்ற புத்தாண்டு தினம். தற்போது தை முதல் நாள்தான் புத்தாண்டுக்குரிய நாளாகத் தமிழக அரசு, அரசாணை மூலமாகப் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், எம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தைப் பதிவுலகின் பார்வைக்கு வைக்கிறேன். கேள்விகளில் அரசியல் இல்லை. ஆதங்கமே மேலோங்கியிருக்கிறது.

தமிழக முதல்வரின் 5 ஆவது ஆட்சி இது. ஏன் இதற்கு முந்தைய 4 ஆட்சிக்காலங்களிலும் மாற்றவில்லை? இது சமீபத்திய ஞானமா? நாளை ஆங்கிலப் புத்தாண்டு தினமும் மாற்றப்படுமா? அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது ஏன்? வைகாசி, மாசி உள்ளிட்ட இதர மாதங்களின் முதல் நாட்களிலும் தமிழர்களுக்கு இதேபோன்று "சிறப்பு நிகழ்ச்சிகள்" கிடைக்குமா?

தை முதல் நாள் ஏற்கனவே பொங்கல் திருநாளாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறிருக்க, ஏன் புத்தாண்டையும் சேர்க்க வேண்டும்? கொண்டாட்டங்களுக்கான காரணங்கள் ஏற்கனவே அருகிக் கொண்டிருக்கும் போது, நாட்களிலும் கைவைத்தால் எப்படி?
 
இலங்கையும் இதே நாளைப் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறதாம்! இலங்கையில், தமிழ் பேசும் "பாவம்" மட்டுமே செய்த மக்களுக்கு வழங்கப்பட்டு  வரும் தண்டனைகளைக் குறிப்பிட கொடூரம் என்ற வார்த்தை போதுமானதாய் இல்லை. அரசாங்கங்கள் வாழ்வு தரவில்லை; வார்த்தையாவது தரலாம்.  அழுவதற்கும் தெம்பின்றிச் சொந்த மண்ணில் அகதிகளாய் வாழும் எம் தமிழினம், இலங்கையில் மீண்டும் நிம்மதியாய் வாழ்வதற்கு வழிவகை செய்தால் தினமும் எமக்குக் கொண்டாடுதற்குரிய தினம்தான்!


கருத்துகள் இல்லை: