அப்போது, '' இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும்.
நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை'' என்று ஆவேசப்பட்டார்.
நக்கீரன்
அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
'அக்ட் நௌவ்' அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் வடபகுதியில் பாதித்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கென 2000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்களுடன் 'வணங்கா மண்' நிவாரணக் கப்பல் பிரித்தானியாவிலிருந்து இலங்;கையை நோக்கிப் புறப்படவிருந்தது.
எனினும், பிரித்தானிய கடற்பரப்பிலிருந்து குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்குப் புறப்படுவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் வழங்கவில்லையென, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த காலங்களிலும் இவ்வாறான நிவாரணக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தமக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய இலங்கை அரசாங்கம், குறிப்பிட்ட கப்பலைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.
அதேநேரம், 'வணங்கா மண்' நிவாரணக் கப்பல் இன்னமும் பிரித்தானிய கடற்கரையிலிருந்து புறப்படவில்லையென அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் அர்ஜுன் எதிர்வீரசிங்கம் கூறியுள்ளார்.
மார்ச் 31ஆம் திகதி இந்தக் கப்பல் புறப்படவிருந்தபோதும், இலங்கை அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிவாரணக் கப்பலை முற்றாகச் சோதனையிட்டு பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் குறிப்பிட்ட கப்பலை இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைய அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் கூறியுள்ளார்.
எனினும், முன்னனுமதி பெறாமல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை கடற்படை எச்சரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நோர்வே அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பை நோர்வே அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். நோர்வேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியொன்றின் போது இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்பட்டதாகவும், தூதரகம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குலுடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நோர்வே அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த சம்பவம் வருந்தத்தக்க ஓர் சம்பவமாகும் என நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் தெரிவித்துள்ளார்.
Sri Lankan embassy in Oslo attacked by LTTE supporters
என் நண்பர் ஒருவர் வருகிற 15ம் தேதி வேலைதேடி துபாய் செல்ல இருக்கிறார். அதன் காரணமாக அவரிடம் உள்ள பொருட்களை விற்பதற்கு அலைந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் உள்ள ஒரு பிளக்ஸிபல் கம்ப்யூட்டரை (Flexible Computer) விற்க வேண்டும் என என்னிடம் கோரியிருந்தார். அதனால் இந்த பதிவில் அவருடைய பிளக்ஸிபல் கம்ப்யூட்டரை இணைத்திருக்கிறேன். ஒரே விலை 1,000 ரூபாய். பேரம் பேசக்கூடாது. எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது.,
இந்த வகை Flexible Computer கள் லேப்டாப்களை விடச் சிறந்தது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மிக எளிதாக எடுத்துச்செல்லாம். மடிக்கணினி என்னும் லேப்டாப்களை உக்கார்ந்து கொண்டு மடியில் அல்லது டேபிள் மேல் வைத்துத் தான் இயக்கமுடியும்.ஆனால் இது போன்ற பிளக்ஸிபல் கம்பியூட்டர்களை நீங்கள் நடந்துகொண்டே இயக்கலாம்.
அவசரத் தேவையாதலால் அவருக்கு உதவி செய்யும் பொருட்டு புதிதாக கம்ப்யூட்டர் தேவைப்படுபவர்கள் உடனே என் மெயிலில் தொடர்பு கொள்ளவும். அதன் காண்ஃபிகிரேசன் பின்வருமாறு
Brand: hp
System Configuration: -
Pentium IV 1.6 G H z (Intel Pentium 2 duo core)
1 GB DDR Ram
15.4 inch widescreen opengl x2AGP
Video Card (32 MB )
Nvidia AGP graphics card
120 GB SCSI HDD
DVD writer
SBlive SoundBlaster
2x Fire Wire
3xUSB ports
Complete with accessories & Easy comfort carry-case.
தயவு செய்து தேவை உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
அந்த Flexible Computer ஐக் காண இங்கே கிளிக்கவும்
UPDATE TODAY : அதிசய உலகம் "நம்ப முடியாத அதிசயங்கள்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக