மும்பையில் ஒரு நெடிய பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற பல நாள் ஆசை நேற்றுத்தான் நிறைவேறியது. கார் அல்லது பைக் பயணத்தின் போது, பெரும்பாலும் நமது கவனம் சாலையின் மீதேதான் இருக்கும். லோக்கல் ரயில் பயணத்திலோ பெரும்பாலும் இருப்புப் பாதைகளையும் ரயில் நிலையங்களையும் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதே சமயம், டவுன் பஸ் பயணமோ நாம் வாழும் ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது.
கேட்வே ஆப் இந்தியாவின் அருகே இருந்து பந்திரா வரை செல்லும் ஒரு பேருந்தில் நேற்று நான் பயணித்த போது, (தென் மும்பையில் சியான் செல்லும்) முக்கிய சாலையில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட ஐந்து கிமீ நீளத்திற்கு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. சரி ஏதோ தேர்தல் பிரச்சாரம் போல இருக்கிறது என்று எண்ணியிருந்த போது, சக பயணி ஒருவர் "சல்மான் கான் வருகிறார், பிரச்சாரம் செய்ய" என்று கூறினார். அப்போது அவர் கண்களில் ஒருவித பளபளப்பு இருந்ததை உணர முடிந்தது. சாலையிலும் மக்கள் பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். கைகளில் மாலைகளோடு பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.
நாட்டின் பிற பகுதிகளில், குறிப்பாக கிராமப் பகுதிகளில், சினிமா நடிகர்களை காண பெருந்திரளான மக்கள் கூட்டம் வருவது சகஜமான ஒன்றாகவே இருக்க முடியும். காரணம் அங்குள்ள மக்கள் அதிகம் துறைகளில் மட்டுமே, திரை நடிகர்களை பார்க்கின்றனர். ஆனால், திரை நட்சத்திரங்கள் வசிக்கின்ற நகரமான மும்பையில் கூட இப்படியா என்று எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இங்கு பல நட்சத்திரங்களை மிக அருகிலேயே பார்க்க கூடிய வாய்ப்புக்கள் பல சமயங்களில் சாதாரண மக்களுக்குக் கூட உண்டு என்ற நிலையில் ஒரு நடிகரைக் காண இவ்வளவு கூட்டம் இருப்பது அதுவும் வணிக நகரமான மும்பையில் இவ்வளவு ஆரவாரம் வெளிப்படுத்தப் படுவது வியப்பையே உருவாக்கியது.
சல்மான் எப்போதும் போல பளபளவென்று உற்சாகமாகவே இருந்தார். ஒரு வண்டியில் நின்று கொண்டு மக்களிடம் கையசைத்துக் கொண்டிருந்தார். தென்மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மிலிந்த் தியோராவும் இதர காங்கிரஸ் தலைவர்களும் அவர் அருகே மிக பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.
எனக்கு அப்போது தோன்றிய ஒரு கருத்து,
"இன்று தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டையாட உதவும் சல்மான் கான், நாளை காட்டிற்குள் கன் (gun) உதவியுடன் மானை வேட்டையாடினாலோ அல்லது நாட்டிற்குள்ளேயே கார் உதவியுடன் மனிதர்களையே வேட்டையாடினாலோ அவர் உதவியுடன் பதவிக்கு வரும் இந்த இந்த அரசியல் வியாதிகளால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?"
நன்றி.

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை இலங்கைக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது. 1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள இலங்கைதூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை 2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு இலங்கைனால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை 3. நோர்வே அரசாங்கம் புலிகளின் பன்னாட்டு உறவுச் [...]
தலைப்பு உதவி : கலைஞர் டிவி :-)
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் - ஜெயலலிதா அறிக்கை கீழே..
ஜெயலலிதா அறிக்கை
கலைஞர் டிவியில் நாளை "சித்திரை திங்கள் முதல் நாளை முன்னிட்டு - அஞ்சாதே ( அஞ்சாநெஞ்சன் இல்லை ) புதிய தமிழ் திரைப்படம். காப்பி வித் அணுவில் தயாநிதி மாறன் வருகிறார்.
பகுத்தறிவு சந்தேகம்:
இனிமேல் எல்லா மாத முதள் நாளும் கலைஞர் டிவியில் இந்த மாதிரி ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி இருக்குமா ?
இட்லிவடை வாசகர்களுக்கு சித்திரைத்திருநாள் நல்வாழ்துகள்.

பூக்கள் பூத்துக்குலுங்கும் தமிழ்ப்புத்தாண்டு திருநாளில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வதாரி ஆண்டு, தீவிரவாத ஆண்டாய், பொருளாதார சீரழிவு ஆண்டாய், தமிழினத்தை அழிக்கும் ஆண்டாய் வந்து சென்றது. இன்று பிறக்கும் விரோதி ஆண்டு வளமிக்க ஆண்டாய் மலர்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் அமைதி தழைக்கவும், செல்வம் செழிக்கவும், மகிழ்ச்சி பொங்கவும் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் புத்தாண்டில் ஊக்கமுடன் உழைப்போம், தடைகளை தகர்த்தெறிவோம். சுயநலத் துரோகிகளை தூக்கி எறிவோம். உரிமைகளை மீட்போம். தமிழினம் வாழ வழி வகுப்போம் என்று சூளுரைத்து தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதில் உவகை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
கலைஞர் டிவியில் நாளை "சித்திரை திங்கள் முதல் நாளை முன்னிட்டு - அஞ்சாதே ( அஞ்சாநெஞ்சன் இல்லை ) புதிய தமிழ் திரைப்படம். காப்பி வித் அணுவில் தயாநிதி மாறன் வருகிறார்.
பகுத்தறிவு சந்தேகம்:
இனிமேல் எல்லா மாத முதள் நாளும் கலைஞர் டிவியில் இந்த மாதிரி ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி இருக்குமா ?
இட்லிவடை வாசகர்களுக்கு சித்திரைத்திருநாள் நல்வாழ்துகள்.
இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை இலங்கைக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.
1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை
2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு இலங்கையினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை
3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை
ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம், தமிழீழ விதலைப் புலிகள், ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளுடனான தொடர்பாளராக நோர்வே செயற்பட்டு வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் நோர்வே தனது ஏற்பாட்டாளர் நிலை, தொடர்பாளர் நிலை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக