செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-13

Youtube தளத்தில் 18,908,793 முறை பார்க்கப்பட்ட காணொளிப் பதிவு. 16,413 மக்கள் மறுமொழியிட்டிருக்கிறார்கள். அசத்தலான குறும்பு விலங்குகளின் சேட்டை - காணொளியாக




funny animal clips!

18,908,793 views
16,413 Comments

ஒளிக்களஞ்சியம் - Amazing Video of 101 Photoshop Tips - போட்டோஷாப் 101 நுட்பங்கள் - உங்களுக்காகவே


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறப் போகும் இவ்வேளையில் தேர்தல் களப்பணியில் கூகிள் நிறுவனமும் இணைகிறது.

பொதுத்துறை செய்தி நிறுவனங்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் (Television channels) ஆகியவை ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் தனியாகக் கருத்துக்கணிப்புகளை (Election Surveys) நடத்திக் கொண்டிருக்கின்றன.

06-ஏப்ரல்-2009 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) நட்புறவுடன் கூகிள் நிறுவனத்தின் இந்தியத் தேர்தல்மையம் (Google India Elections Center) ஆரம்பமானது. இந்தியத் தேர்தல் வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

இந்தக் Google நிறுவனத்தின் தேர்தல் மையத்தில் என்ன சேவைகள் வழங்கப்படுகின்றன? என்ன என்ன தேவைகளுக்காக இந்த மையத்தை நாடலாம்?

1. ஒரு வாக்காளரானவர் தான் எங்கே எந்தப் பகுதியில் (polling location) ஓட்டளிக்கப் போகிறோம் என்பதைக் காண்பதற்காக

2. அவரது தொகுதியின் மேப் வரைபடம் (Map) ஆகியவற்றைக் கண்ணுறவதற்காக

3. தொகுதி தொடர்புடைய மேலதிகத் தகவல்கள் -வலைப்பூக்கள் (blogs), காணொளிகள்(videos), மேற்கோள்கள் (quotes) ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள

4. தான் வாக்களிக்கப் போகிற தொகுதியின் முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ள

5. தற்போதைய நடப்பு MP மற்றும் அதே தொகுதியின் முந்தைய MPகள் ஆகியவர்களின் விபரங்களைப் பெற

6. பாராளுமன்ற உறுப்பினர் குறித்த தகவல்கள், தொகுதி நிலவரங்கள், வாக்களிக்கும் இடங்கள் ஆகியவற்றைக் காண இயலும்.

7. மூத்த அரசியல்வாதிகள் எந்த தேதிகளில் என்ன சொன்னார்கள் (quotes) - அவர்களது வாக்குமூலங்கள் யாவை? என்பன குறித்து அறியலாம்.

பாராளுமன்றத் தொகுதியின் பெயரை உள்ளிட்டால் (input), தொகுதி பற்றிய அனைத்துத் தகவல்களும் நொடியினில் திரையில் மலர்கிறது.

இந்தத் தளமானது ஆங்கிலம் மற்றும் இந்தி - இரு மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

சுட்டி முகவரி : http://www.google.co.in/intl/en/landing/loksabha2009/


ஒளியோவியம் : Information Technology துறையினர் பற்றிய கார்ட்டூன் படங்கள்.


இணையத் தளங்களில் உலா (surfing) வரும்போது எவையெல்லாம் நல்ல தளங்கள், எவை கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறியோம்.

ஏதேனும் தெரிந்திராத, அறிந்திராத (unknown) தளத்தைப் பார்வையிடும்போது எப்போதுமே ஒரு பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்திருப்போம்.

ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் நமது பார்வைக்கு நல்ல தளங்களாகத் தெரிகின்றன. ஆனாலும் அவற்றின் உள்ளே குறும்புசெய்யும் விசமத்தனமான, கேடு விளைக்கக் கூடிய நிரல்களை எழுதிப் பொதிந்திருப்பார்கள்.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள்.

அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம்.

நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும்.

உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம்.

மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது - அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும்.

நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை - என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம்.

நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம்.

உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை.

இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.

McAfee Site Advisor

LinkScanner Online

Norton Safe Web

Anti-malware tool by Google

Web Of Trust

தொடர்புடைய சுட்டி :
WOT (Web Of Truest) பற்றி மேலதிக தகவல்களுக்கு இந்த Firefox உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க பதிவைக் காண்க.

ஒளிக்களஞ்சியம் :
Windows Vista Vs Ubuntu Linux

How to Install Ubuntu Linux?



Installing Ubuntu with Windows Dual-Boot

ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.

ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.

ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.

இதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.

உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.

இந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.

வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.

ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.

நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.

உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.

வாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.

கையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.

குறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.

மேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com

தொடர்புடைய சுட்டி : VoIP - இணையத் தொலைபேசி

கலைச்சொற்கள் :
ஸ்கைப் - Skype
மடிக்கணினி - Laptop
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
வெப்கேமரா - Web camera
மென்பொருள் - Software Application
தரவிறக்கம் - Download
பயனர் கணக்கு - User Account
ஸ்கைப் உள்ளே / வெளியே - Skype In / Skype Out
கடனட்டை - Credit Card
பேபால் - Paypal
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
செல்பேசி - Mobile / cell phone
வருடச் சந்தா - Yearly fee
வாய்ஸ் மெயில் - Voice Mail
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA - Personal Digital Assistant, Hand held devices

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தனியாக தட்டச்சு நிலையங்கள் (Type writing institutes) இருந்தன. அவற்றில் பல்வேறு காரணங்களுக்காக (!) ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக அலை மோதுவர்.

மோகன் நடித்த 'விதி' படத்தில் அவர் தட்டச்சு பயில்வதற்காக, மனோரமா நடத்தி வந்த தட்டச்சுப்பயிலகத்தில் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லோரும் அறிவோம்.

ஆனால் இப்போது வீட்டுக்கு வீடு கணினி மயமாகி விட்டது. அதனால் நாம் கணினியிலேயே தட்டச்சுப் பயிலலாம்.

உங்களது தட்டெழுதும் வேகத்தை உடனடியாக அறிவதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது.

தள முகவரி : http://speedtest.10-fast-fingers.com/

அந்தத் தளத்தில் திரையில் தெரியும் வரிகளை அதன் கீழ் உள்ள text box ல் type செய்ய வேண்டும். சரியாக ஒரு நிமிடம் முடிந்தவுடன் அறிக்கை(result) வெளிவரும். அதில் நிமிடத்தில் எத்தனை வார்த்தைகளை தட்டும் வல்லமை பெற்றுள்ளீர்கள் என அறியலாம்.

எனக்கு 60 வார்த்தைகள் / நிமிடம் இருப்பதாக அந்தத் தளத்தின் அறிக்கை முடிவு காண்பித்தது. அதைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்.

60 words
சிறு குறிப்பு :
உங்களது தட்டெழுதும் வேகத்தை அதிகரிக்கவோ / புதிதாகத் தட்டெழுத்துப் பயிலவோ இந்த மென்பொருளைத் தரவிறக்கி கணினியில் நிறுவிப் பயன்படுத்தவும்.

ஒளிக்களஞ்சியம் :
கணினியில் தொடர்ந்தாற்போல் வேலை செய்வபர்களுக்கு வரும் ஒரு புதிய நோய் குறித்த காணொளி. நோயின் பெயர் carpal tunnel syndrome

கருத்துகள் இல்லை: