வியாழன், 2 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-01

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்றும், அவ்வாறு போர் நிறுத்தம் உருவாக இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கூறி இருக்கிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றில், இலங்கையின் போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களின் துயரங்கள் இந்தியாவை மிகுந்த கவலைக்கு ஆளாக்கி இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் அம்மக்களைப் பாதுகாக்கவும் அவர்கள் நலனைப்பேணவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும், முதற்கட்டமாக அங்கே போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று மேலும் கூறும் சோனியா காந்தி, இந்தியா இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருப்பவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
வவுனியா நெலுக்குளம் முகாமுக்குச் சென்ற அவர், முகாமிலிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார். எனினும், ஊடகவியலாளர்கள் எவரும் செய்தி சேகரிக்க முகாமுக்குள் அனுமதிக்கப்படவில்லையென பிராந்தியச் செய்தியாளர் அறியத்தருகிறார்.
அதேநேரம், முகாம்களின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்ட அழுத்தத்துக்கமைய நலன்புரி நிலையங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

எனினும், வவுனியாவிலுள்ள முகாம்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் அவதானிக்க முடியவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுக் கூறினார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 61,000 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இடம்பெயர்ந்து வரும் மக்களை யூ.என்.எச்.சீ.ஆர். மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன ஓமந்தைச் சோதனைச்சாவடியில் சந்தித்துப் பேசமுடியும் என்றார்.

அத்துடன், நலன்புரி நிலையங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் நலன்புரி நிலையங்களின் முகாமைத்துவத்தை மீள்குடியேற்ற அமைச்சிடம் அரசாங்கம் கையளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றிவர முட்கம்பி வேலிகள்

இதுஇவ்விதமிருக்க அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதநேய உதவித் திணைக்களத்தின் தலைவர் கென்ற்கின்ஸ்சி, முகாம்களில் பொதுமக்களைவிட இராணுவத்தினரையே அதிகமாகக் காண்டதாகக் கூறியிருந்தார்.

"சுற்றிவர முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு முகாம்களிலுள்ள மக்களைவிட அதிகமான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடையில் ஈடுபட்டிருப்பதையே முகாம்களில் காணக்கூடியதாகவிருந்தது. அங்கு பெருமளவான இராணுவத்தினர் உள்ளதுடன், பொதுமக்கள் முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு நடமாடும் சுதந்திரம் இல்லை" என அவர் கூறியிருந்தார்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள பொது மக்களை விடுவித்தால் போதும். ஏனைய விடயங்களை படையினர் கவனித்துக்கொள்வார்கள் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து தகவல் வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர சர்வதேச ரீதியில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து பாதுகாப்பு வலயத்திலிருந்து பொது மக்களை சுதத்திரமாக வெளியேற அனுமதிக்காத வரையில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் பிடியில் சிக்கி அவதியுறும் பொது மக்களை வெளியேற அனுமதித்தாலே போதும். ஆயுதக்களைவையும் புலிகளைச் சரணடைய வைப்பதையும் படையினர் கவனித்துக்கொள்வார்கள்.

யுத்த நிறுத்தம் மற்றும் மோதல் தவிர்ப்பு ஆகிய இரு சொற்பிரயோகங்களும் இடையில் உள்ள வித்தியாசத்தை சில வெளிநாட்டு ஊடகங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

புலிகளின் பிரதேசத்திலிருந்து பொது மக்கள் வெளியேறுவது பற்றிய தகவல்கள் கிடைத்தால் படையினர் உடனடியாக அப்பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவர். கடந்த மூன்று மாதங்களாக இந்த மோதல் தவிர்ப்பு தேவைக்கேற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மையில் ஜனதிபதியின் உத்தரவின் பேரில் 48 மணிநேர மேதல் தவிர்ப்பு இடம்பெற்றது. இராணுவ ரீதியில் 99 சத வீதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

எனவே எக்காரணம் கொண்டும் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.


More than a Blog Aggregator

by panguvaniham
A
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகளே விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

கடந்த ஞாயிறு இரவு இப்பகுதிகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் பெட்டி வீயூகம் அமைந்து மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

பலமணி நேர மோதல்களின் பின்னர் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் நோக்கி 500 மீற்றர் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் பக்கவாட்டாக வலதுபுறம் 8 கிலோ மீற்றர் வரையான காவலரண்கணை தாக்கி அழித்து, குறித்த பிரதேசங்கள் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஊடறுப்புத் தாக்குதலை தளபதி கேணல் பாணு தலைமையில் விடுதலைப் புலிகளின் முன்னணி தாக்குதல் அணிகளுள் ஒன்றான சாள்ஸ் அன்ரணி படையணியே நடத்தியுள்ளது.

இந்த ஊடறுப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பெருந்தொகையான படைக்கருவிகளையும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறிலங்காப் படையினர் அங்கிருந்து தப்பியோடிபோதும் அவர்கள் மீது படைத் தளபதிகளின் உத்தரவுக்கமைய துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதிலும் பல படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.


வஞ்சிபாளையம் பிரிவில்
இறங்கி நடந்தால்
இரண்டு ரூபாய்
மிச்சம் பிடிக்கலாம்;
நடக்கலானார் நாச்சாக் கவுண்டர்

500 ரூபாய்
சேத்துத் தந்திருந்தால்
ஆலன் சோலியில் எடுத்திருப்பேன்
இப்ப
பீட்டர் இங்கிலாண்ட்தான்
அங்கலாய்த்தான்
தனியார் கல்லூரியில்
படிக்கும் அவர் மகன்

பூக்கும் கிளைகளுக்குப்
புரிவதில்லை
வேர்களின் வேதனை



Picture courtesy : QT luong.


.

கருத்துகள் இல்லை: