வியாழன், 2 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-01

வன்னி போர் நடவடிக்கை 31.03.09 (வீடியோ 1)



வன்னி போர் நடவடிக்கை 31.03.09 (வீடியோ 2)



வன்னி போர் நடவடிக்கை 31.03.09 (வீடியோ 3)



வன்னி போர் நடவடிக்கை 31.03.09 (வீடியோ 4)


முல்லைத்தீவில் ஏ-35 வீதியின் ஊடாக முன்னேறிச் செல்லும் படையினர் நேற்றைய தினம் அமெரிக்கன் சந்தி என்றழைக்கப்படும் பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 53வது படையணியினரே அப்பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ளனர். புதுமாத்தளன் தெற்கிலிருந்;து வரும் வீதியும், முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வரும் வீதியும் ஒன்றிணையும் இடத்தையே புலிகள் அமெரிக்கன் சந்தி என அழைப்;பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதுக்குடியிருப்பின் கிழக்குப் பிரதேசத்திற்கான புலிகளின் விநியோக நடவடிக்கைகள் இச்சந்தியுடன் இணைந்ததாகவே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இப்பிரதேசத்தைத் தற்போது படையினர் கைப்பற்றியுள்ளதால் புலிகளின் மற்றுமொரு விநியோக மார்க்கம் துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு புதுமாத்தளன் எல்லைப் பகுதியில் புலிகளிடமிருந்து தப்பி வந்த 1648 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்றுத் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்;சு அறிவித்;துள்ளது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகள் நடாத்திய எறிகணை மற்றும் ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் துணிவுடன் தப்பி வந்துள்ளதாகவும் தப்பி வந்தவர்களில் 309 ஆண்களும் 630 பெண்களும் 357 சிறுவர்களும் 352 சிறுமிகளும் உள்ளடங்கியுள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுத் தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் மனிதாபிமானம் காட்டுமாறு பிரிட்டிஷ் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியை ஒருவர் தனது இரு மாணவிகளுக்காக அந்நாட்டு உள்துறை அமைச்சு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .

இலங்கைக்கு தாங்கள் பலவந்தமாக திருப்பி அனுப்பபட்டால் தாங்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பீதியை பிரிட்டனிலுள்ள இலங்கையை சேர்ந்த ஜோசப் குடும்பம் தலைமை ஆசிரியையான ஜோ ஹக்ஸிடம் கூறியுள்ளார்.

ஜீவிதா, நீரஜா ஆகிய இருவரும் ஆங்கிலேய தியாகிகள் பாடசாலையில் 2008 அக்டோபர் 6ம்திகதி வகுப்பில் சேர்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் கல்விகற்று வருகின்றனர். அவர்கள் முன்மாதிரியான மாணவிகள் அசாதாரணமான முறையில் கடினமாக படிப்பார்கள் எப்போதும் சீரான உடையணிவார்கள் கற்பதில் மிகஆர்வம் உடையவர்கள் சகபாடிகளிடம் நட்புறவை பேணி வருகின்றனர். ஆசிரியைகள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அவர்களுக்கு கவ்வித்துறையில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்று தலைமையாசிரியை கூறியுள்ளார்.

அங்கு கற்கும் மாணவிகளுக்கு பாடசாலை சீறுடையும் கற்றல் உபகரணங்களையும் வழங்குவதுடன் ஆங்கிலம் கற்க அனுசரணையும் வழங்கி வருகின்ற உள்துறை அமைச்சு இந்த விடயத்தில் சட்டரீதியான பார்வையைச் செலுத்துகிறது.

தந்தை கடத்தப்பட்டு வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டார் என நான் உதாரணமாக கூறுகிறேன் என்றும் ஹக்ஸ் கூறியுள்ளார்.
அமரர் கல்கியின் படைப்புகள், கள்வனின் காதலி, அத்தியாயம் 16-திருடன் திருடன். அதிகாலை.காம் குரல் நூலகம்.  வழங்குபவர் : "அதிகாலை" நவின், கலிபோர்னியா டவுன்லோட் : கள்வனின் காதலி - அத்தியாயம் # 16 : திருடன் திருடன்

கருத்துகள் இல்லை: