வதோதரா ஏப் 02 : பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் ஓசிப் பயணம் செய்த பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் 250 பேர் திங்களன்று வதோதரா ரயில் நிலையத்தில் பிடிபட்டதாக ரயில்வே போலீஸôர் தெரிவித்தனர். ஆமதாபாத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி பங்கேற்கும் பேரணியில் கலந்து கொள்வதற்காக, சூரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது அவர்கள் பிடிபட்டனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்றும், அவ்வாறு போர் நிறுத்தம் உருவாக இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கூறி இருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றில், இலங்கையின் போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களின் துயரங்கள் இந்தியாவை மிகுந்த கவலைக்கு ஆளாக்கி இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன உணர்வுடன் செயற்பட்டிருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியும்: தமிழருவி மணியன் : தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் 'புக்கர் பரிசு'ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் இவர், கடந்த 30-ம் தேதி சென்னைக்கும் வந்திருந்தார். எழுத்தாளரும் எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார் அவரை ஜூ.வி-க்காக சந்தித்துப் பேசினார். அப்போது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக