வியாழன், 2 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-01

சிறு வயதில் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்? விளையாட்டு, குறும்பு, அழுகை, வெடிச் சிரிப்பு, டிவியில் ஒளியும் ஒலியும், கண்மணிப் பூங்கா நிகழ்ச்சிகள், அம்புலிமாமா புத்தகம்... இவற்றுள் நான் அதிகம் சிரித்தது, அதிகம் பயந்தது, அதிகம் சிலாகித்தது அம்புலிமாமா புத்தகத்துடன் தான். வண்ணமும் அல்லாமல், கறுப்பு வெள்ளையுமல்லாமல் ஈஸ்ட்மேன் வண்ணத்தினால் ஆன பக்கங்கள்.. மிகவும் பிடித்த விக்ரமாதித்தன், வேதாளம் கதைகள், தெனாலிராமன், பீர்பால், முனிவர்கள், ராட்ஸசர்கள், ஏழை விவசாயி, செல்வந்தன், பேராசைக்காரன் என எத்தனை கதாபாத்திரங்கள்...சிறுவயதில் இவர்களின் கதைகளூடே பயணிக்கும் போது ஏற்படும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை சமீபத்தில் மீண்டும் உணர்ந்தேன்.. அதே அம்புலிமாமாவால் .

கால ஓட்டத்துக்கேற்ப அம்புலிமாமாவும் இணையத்துக்குள் வந்து விட்டது. கதைகளை ஹை-டெக் வடிவில் கொடுத்து ஜெடிக்ஸ் டிவி போல ஆக்கிவிட்டிருப்பார்கள் என்றெண்ணி அந்தத் தளத்திற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அறிவியல், பொது அறிவு, செய்திகள் என பல புதிய பகுதிகளை வைத்திருந்தாலும், பழைய... அதாவது 1947ம் ஆண்டிலிருந்து வெளியான அம்புலிமாமா கதைகளை அப்படியே, அதே படங்களுடன் தெளிவாக ஸ்கேன் செய்து அளித்திருக்கிறார்கள்.

விக்ரமாதித்தன், பீர்பால், தெனாலிராமன் கதைகளும் அப்படியே, அதே வடிவில்,அதே படங்களுடன்!நான் ரசித்தேன்.. நீங்களும் அம்புலிமாமாவின் குட்டி வயது வாசகர் எனில், மாயாஜாலக் கதை பிரியர் எனில்... http://www.tamil.chandamama.com/



பிடித்திருந்தால்...பயனுள்ள தகவல் எனில்... ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்!
இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது.31/03/2009மதியம் பன்னிரெண்டு மணிக்கு பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால், மாணவர்கள் வெகு உர்ச்சாகமாக தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் அணிவகுத்து நின்று, அகவணக்கத்துடன், தேசியக் கொடிப் பாடல் இசைக்க தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதன் பின்னர் மறைந்த முன்னால் பிரித்தானிய மாணவரும் ஈகப் பேரொளியுமான முருகதாஸிற்கு சுடர் ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்பு மாணவர்கள் அனைவரும் மலர்தூவி தங்கள் மரியாதையை செலுத்தினர்.மாணவர்கள் அனைவரும் வணக்கம் செலுத்திய பின்னர் வேற்று இன மாணவாகளுக்கு இலங்கையில் இனவாத சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்புப்போர் பற்றியும், தமிழீழ வரலாறு பற்றியும் எடுத்துரைத்தனர்..
அதே வேளை சிங்கள அரசின் தமிழின அழிப்பை நிறுத்துமாறு பிரித்தானிய தலைமை அதிபர் கோல்டன் பிரவுன் அவர்களுக்கு மாணவர்களால் அஞ்சல் அட்டைகளில் அவர்களின் விபரங்கள் நிரப்பப்பட்டன.பல்கலைக் கழகம் முழுவதும் தமிழின அழிப்பு பற்றியும் எமது பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் பல பதாதைகள் ஒட்டப் பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக மாணவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவிருந்த பொழுது பல்கலைக் கழகம் தேசியக் கொடியை ஏத்துவதற்கு அனுமதி மறுத்தது. மாணவர்கள் நிர்வாகத்திடம் தாங்கள் நிட்சயம் எங்கள் தேசியக் கோடியை ஏத்துவோம், இது எங்கள் தேசியக் கொடி என்று வாதாடினர். மாணவர்களைக் கட்டுப் படுத்த முடியாத நிர்வாகம் காவல்த்துறை உதவியை நாடினர். விரைந்து வந்த காவல்த் துறையினரிடம் மாணவர்கள் தங்கள் போராட்டம் தொடர்பாகவும் தேசியக் கொடி தொர்பாகவும் விளக்கி கூறினர்.பின் காவல் துறையினர் அனுமதி அளித்தபின் பல்கலைக் கழக நிர்வாகமும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : பதிவு
http://www.outlookindia.com/images/kapil_dev_world_cup_20070305.jpg

http://mirrorreflections.files.wordpress.com/2008/06/1983-squad-for-wc.jpg

http://www.hindu.com/tss/tss2705/images/20040131006901204.jpghttp://mirrorreflections.files.wordpress.com/2008/06/kapil-dev-2.jpg
http://members.tripod.com/%7Ekkv/cricket/pics/sachin_kapildev_azhar.jpghttp://tamil.webdunia.com/sports/cricket/articles/0806/17/images/img1080617008_1_1.jpg
http://www.hindu.com/af/india60/images/2007081560031005.jpg

இன்றைய கபில்தேவ்:-


கவுரவ லெடினென் ட் ஜெனரலாக....


பயிற்சி முகாமில் அவர் கூறியது
கடந்த இரண்டு நாட்களாக போர் பயிற்சி முகாம் இங்கு நடந்து வருகிறது. இன்று இரண்டாவது நாள். போர் படை அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது புதிய அனுபவமாக உள்ளது. அவர் களது வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டு வருகிறேன். ராணுவத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒழுக்க முறைகளை, ஒரு விளையாட்டு வீரர் தெரிந்து கொள்வது நல்லது. இங்குள்ள நடவடிக்கைகளை பார்க்கையில், இப்போது கூட நான் கிரிக்கெட் விளையாடலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இங்கு நான் போர் வீரனாக வரவில்லை. நாட்டை காக்கும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராணுவத்தில் இணைந்து உள்ளேன். ராணுவ உடை அணிந்தவுடன் புதிய உணர்ச்சி வருகிறது. பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதலும் கற்று கொண்டேன். இருப்பினும் துப்பாக்கி தூக்கும் கலாசாரம் சிறந்தது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 50 வயதில் ராணுவ பயிற்சி மேற் கொள்வது என்பது மிகவும் சிரமம். ஆனால் ஆர்வம் இருந் தால், எதையும் சாதிக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைக்காதது துரதிருஷ்டம் தான். ஆனால் எனது கனவு தற்போது மெய்யாகி உள்ளது. நான் ஒரு முழுமையான இந்தியக் குடிமகனாகி விட்டதாக கருதுகிறேன்.
Kapil Dev
http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01318/kapil_dev3_1318297c.jpg
நம்மில் பலர், அறிந்திருக்கக் கூடிய செய்திதான்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆகும் செலவு குறித்த தகவல்கள். எனக்கு மெயில் அனுப்பியவரின் விருப்பத்துக்கிணங்க இந்தப் பதிவு.

மாத சம்பளம் 12,000 ரூபாய் (ரொம்பவும் கம்மி. இதற்காக ஏன் இன்னும் வெளிநடப்பு செய்யவில்லை?)
தொகுதிக்கான மாதச் செலவு 10,000 ரூபாய்.
அலுவலகச் செலவு 14,000 ரூபாய்.
பயணச் சலுகை: கி.மீட்டருக்கு 8 ரூபாய்.
படி 500 ரூபாய் (பாராளுமன்றம் இயங்கும் நாட்களில்).
இந்தியா முழுவதும் ஏ.சி முதல் வகுப்புப் பயணம் இலவசம்.
 வருடத்திற்கு 40 முறை வர்த்தகப்பிரிவில் விமானப் பயணம் இலவசம். மனைவி அல்லது உதவியாளர் உடன் பயணிக்கலாம். (எத்தனை மனைவிகளுக்கு என்று தெரியவில்லை).
பாராளுமன்ற உறுப்பினர் தங்கும் விடுதி இலவசம்.
50.000 யூனிட் வரை மாதம் மின்கட்டணம் கிடையாது.
1, 70, 000 கால்கள் வரை இலவசம்.

இரண்டு மூன்று ஆடிட்டர்களின் உதவியோடு கணக்குப் பார்த்ததில், ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு மாதம் செலவழிக்கப்படும் தொகை விவரம்:
32,00,000 ஆயிரங்கள் அல்லது 2.66 லட்சம்.

ஐந்து வருடங்களுக்கு, 1,60,00,000
534 உறுப்பினர்களுக்கும் செலவழிக்கப்படும் மொத்தத் தொகை, 8,54,40,00,000.  கிட்டத்தட்ட 855 கோடிகள்.

அற்பக் காரணங்களுக்காக வெளிநடப்பு செய்யும் மாண்புமிகுக்களே! தயவுசெய்து கொஞ்சம் ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்கள்.

நாம் , ஏழை நாடென்று எவன் சொன்னது? வருடம் 855 கோடிகள் செலவழித்து ஊழியர்களை நியமிக்கும் மக்களை, ஏழைகளென்றா அழைப்பது?

கோவி.கண்ணன்..ஒரு மூத்த பதிவாளர்.சொன்ன சொல் காப்பதில் அவருக்கு நிகர் அவரே!

அவரின் சமீபத்திய பதிவு ஒன்று..'பிழையுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம்?' (http://govikannan.blogspot.com/2009/04/blog-post.html)
என்பதாகும். அதில் காணப்படும் தவறுகள்...

சிறுது

மொழிக்களுக்கும்

முதன்மைவாய்ந்தாக

பிறகுக்குச்சொல்லி

காரணாமாக

சொற்ச்சிலம்பம்

தான் எழுதியபடி தானே நடக்கவில்லையெனில் எப்படி என்று..எண்ணி..இனி பதிவிடுவதில்லை என தீர்மானித்துவிட்டதாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஏப்ரல் முதல்நாள்.

தமிழ்நாட்டில் கருணாநிதியின் வசவுக்கு ஆளாகாத தலைவர்கள் யாருமே இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவருடைய நச்சுநாக்கின் பேச்சுக்கும், நஞ்சை மையாக ஊற்றி எழுதும் பேனாவுக்கும் இடையே சிக்கி சின்னாபின்னமாவது இந்தத் தமிழினம் தான்.

பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி...

பழ.நெடுமாறன் புலியின் முதுகை குத்தி பணம் பறிக்கும் கழுகு...

இராமதாசு ஒரு போலி...

வைகோ ஒரு சகுனி...

தா. பாண்டியன் ஒரு தற்குறி...

கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் குழப்பவாதிகள்...

இப்படி தமிழினத்திற்காக உண்மையாக போராடும், உழைக்கும், பேசும் தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்துவது இவரின் வாடிக்கை.

கருணாநிதி எது செய்தாலும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவரை வானளாவ புகழ்ந்து கொண்டு இருப்பவர்களே தமிழ்நாட்டின் தலைவர்களாக இருக்க தகுதியுடையவர்கள். அது எந்த கழிசடையாக இருந்தாலும் பரவாயில்லை... கருணாநிதியை மட்டும் ஏற்றுக்கொண்டால் போதும்...

தாங்க முடியல சாமி...

தமிழர்களுக்காக உழைப்பவர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இழித்தும் பழித்தும் பேசும் கருணாநிதி அவர்களுக்கு இந்த கையாலாகாத தமிழனின் அன்பான வேண்டுகோள் என்னவெனில்,

தாங்கள் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி...

"கருணாநிதிக்கும் அவருடைய அனைத்து குடும்பத்திற்கும் யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கே பதவியும் பவிசும் வழங்கப்படும்."

"யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு சிறை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்."

-என்ற சட்டத்தை கருணாநிதியின் நலன் கருதி பேராசிரியர் அவர்கள் முன்மொழிய வேண்டும்.

அந்த சட்டத்திற்கு "உத்தமர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப பாதுகாப்புச் சட்டம்" என்று பெயர் சூட்டவேண்டும்.

தமிழர்களை காங்கிரசுகாரர்களிடம் தவணை முறையில் அடகு வைத்து நீங்கள் காசு பார்ப்பதற்காக உங்கள் வயதிற்கு மீறி நீங்கள் உழைக்க வேண்டியுள்ளது. உங்கள் மாமாக்களுக்கும் மன்னிக்கவும் தம்பிகளுக்கும் வேலை மிச்சம்...

எனது கோரிக்கையை தமிழர்களின் நலன்கருதி தாங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக்காக இந்த ஆண்டிற்கான "உத்தமர் கலைஞர் விருதும்" ரம்பாவும் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்...

இப்படிக்கு,

கையாலாகாதத் தமிழன்

கருத்துகள் இல்லை: