புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31



More than a Blog Aggregator

by சத்தியக் கடதாசி
- சுகன் எனக்கு மகன் முறையானவன் நாலுநாள் முன்னர் இறந்தான் யானை சிங்கம் புலி தவிர அவன் எல்லாப் பிராணிகளையும் பறவைகளையும் வளர்த்தான். அவன் எப்போதாவது படித்து நான் பார்த்ததில்லை ஆனால் நானும் வேறெவரும் பார்க்காமலேயே அவன் நன்றாகப்படித்திருக்கவுங்கூடும் படிப்பை வெறுத்திருக்கவுங்கூடும். அவனும் அவனது நண்பன் ஜெயாவும் புலிகளோடு சேர்ந்தபின் ஜெயா மாத்தையாவின் கீழ் இயக்கத்தில் பெரிய ஆளாகி மாத்தையாவின் பெருந்தலைகள் பதினெட்டுப்பேரை பொட்டர் போட்டபோது பதினெண்கீழ்க்கணக்கில் வந்தான். ஜெயா அப்போது காதலித்துமிருந்திருக்கலாம். அவனுக்கு ஒரு காதல் இருந்தது என்றும் கேள்விப்பட்டதாக ஞாபகம். ஜெயாவும் எனது மகனும் அவனது இன்னொரு நண்பனான [...]
பாரதீய ஜனதா கட்சி பிரிவிணைவாத அரசியலை விதைக்கிறது என்று அக்கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். மும்பை தாக்குதல் சம்பவத்தை பா.ஜ.க. தேர்தல் பிரச்சனையாக ஆக்குவதை எதிர்த்து இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த நாடு முழுவதையும் நாங்கள் (காங்கிரஸ்) ஒரே நாடாகக் கருதுகிறோம். இந்த நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் எங்கள் எதிர்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலை விதைக்கின்றனர்" என்று ராகுல் காந்தி கூறினார்.

"சில கட்சிகள் மத அரசியல் செய்கின்றன. சில கட்சிகள் ஜாதி அரசியல் செய்கின்றன. மேலும் எங்களுக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் நாங்கள் இந்தியாவை பொதுமக்களின் பார்வை வழியாகப் பார்க்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

அவர்கள் இப்போது தீவிரவாதம் குறித்து பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இது குறித்து எதுவும் பேசவில்லை. நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த போது, ஒரு அமைச்சர் காந்தகார் சென்று தீவிரவாதி ஒருவரை விடுவித்து விட்டு வந்தார் என்று ராகுல் கூறினார்.
தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங்தான் என்று சமாஜ்வாதி கட்சி கூறி உள்ளது. டெல்லியின் செய்தியாளர்களுடன் பேசிய சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் காங்கிரசுடன் தங்கள் கட்சிக்கு தகராறு எதுவும் இல்லை எனவும், மன்மோகன் சிங்கையே மீண்டும் பிரதமராக்க விரும்புகிறோம் என்றும் கூறினார்.

உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அங்கும் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் சமாஜ்வாதி கட்சி தற்போது கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை: