வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02

இங்கு காணலாம்

Nicolas Sarkozy 

இன்றைய பண பிரச்சனைக்கு தீர்வு காண போதிய
முறைகளை G 20 காணாது போனால் தான் வெளி
நடப்பு செய்வேன் என்று அறிவித்துள்ளார்  ---

இவரை ஜெர்மன் ஜனாதிபதி Angela Merkel சபோர்ட்
செய்வார்  ---

Brazil நாட்டு  Lula da Silva வும் இதே மன நிலையில்
உள்ளார் என்று ஏற்கனவே தெரிந்துள்ளோம் !

Barak Obama ''சிறு பிழைகளை பெரிதாகாதீர்'' என்ற
நிலையிலும்  ---

Summit Meetings ஏமாற்று வித்தை  -  இவைகளை தடுப்பது எங்கள் கடமை என ''எதிப்பாடகாரர்களும் London ல் குழுமி உள்ளனர்  ---

                

நாளை பார்போம்  கச்சேரியை !  

தமிழ்நாட்டிலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடித் தொழிலுக்கு 750 படகுகளில் சென்ற 23 பேரை சிறீலங்கா கடற்படையினர் தலைமன்னருக்கருகில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 750 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களில் 23 பேரை மட்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், ஏனையவர்கள் கரை திரும்பியுள்ளதாய் மீனவர் சங்கத் தலைவர் அந்தோனிராசு தமிழ்ச் செய்தி மையத்திடம் தெரிவித்தார். 
மார்ச் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 0.31 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.27 சதவீதமாகத்தான் இருந்தது. மிக குறைந்த அளவான 0.04 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 7.8 சதவீதமாக இருந்திருக்கிறது. டீ, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், குளிர்பானங்கள், ஆயில்கேக், வாசனை திரவியங்கள் போன்ற உணவுப்பொருட்களும், ரப்பர், பிளாஸ்டிக், பி.வி.சி.பைப்கள் போன்றவைகளின் விலை உயர்ந்திருப்ப தால் பணவீக்கம், கடந்த வாரத்தை விட சிறிதளவு உயர்ந்து விட்டது என்கிறார்கள். கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் தேயிலையின் விலை 48 சதவீதமும், பாக்கெட் செய்யப்பட்ட தேயிலை விலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை 22 மற்றும் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
இந்தியாவில் தனியார் வாகன சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து அதிகம் விற்கும் கார் என்ற பெயரை தக்க வைத்திருக்கும் மாருதி 800 கார், 2016ம் வருடத்திற்கு பிறகு கிடைக்காது. அடுத்த வருடத்தில் இருந்து அதன் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, 2016ம் வருடத்துடன் அது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாகனங்கள் வெளியிடும் புகை குறித்த புதிய வரைமுறைகள் அப்போது இந்தியாவில் தீவிர நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், இந்த காரின் தயாரிப்பது நிறுத்தப்படும் என்று மாருதி சுசுகி இந்தியா தெரிவித்திருக்கிறது. மாருதி 800 காருடன், அவர்களது இரண்டாவது பழைய வாகனமான ஆம்னி தயாரிப்பும் நிறுத்தப்படுகிறது. அடுத்த வருடத்தில் இருந்தே இந்தியாவில் 11 நகரங்களில் மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்கள் கிடைக்காது. அடுத்த வருடத்தில் இருந்து வாகனங்கள் புகை வெளியிடுவது குறித்து மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ' பாரத் ஸ்டேஜ் - 4 எமிஸன் ' வரைமுறை ( இது யூரோ - 4 எமிஸன் வரைமுறைக்கு நிகரானது ) டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுரு உள்பட 11 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த 11 நகரங்களிலும் மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்கள் விற்பனை நிறுத்தப்படுகிறது. அடுத்த வருடம் 11 நகரங்களில் மட்டும் நடைமுறைப் படுத்தப்படும் யூரோ - 4 எமிஸன் வரைமுறை, 2015 - 16 வாக்கில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்களின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும் என்றார் மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் ஆர்.சி.பார்கவா.
நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: