திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

இலங்கை இனப்பிரச்சினைக்கான தமது தீர்வுத்திட்டம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னரே வரும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார். ஆனால், சமஷ்டி தீர்வுக்கு இலங்கையில் இடம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தனது அரசியல் தீர்வுத்திட்டமான, ''13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தை சற்று மேம்படுத்திய திட்டம்'' குறித்து பேசியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது மனதில் ஒரு தீர்வுத்திட்டம் இருப்பதாகவும், ஆயினும், அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை விவாதித்து பெற வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தான் இவற்றுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி, இருந்தபோதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் தேர்வு செய்யப்பட்ட பின்னரே தீர்வுத்திட்டம் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, எதனை கொடுக்க வேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்று தனக்கு தெரியும் என்றும், மக்கள் தனக்கு அதற்கான ஆணையை தந்திருப்பதாகவும், அதனை தான் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளைஇ தான் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உடன்பாட்டுக்காக காத்திருப்பதாக, கூறியுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கு எது கிடைக்கக் கூடியதாக இருக்கும், எது கிடைக்காது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருப்பதுடன், இந்த நாட்டில் ''சமஷ்டிக்கு'' இடம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். தேசிய நல்லிணக்கத்துக்கு பல்லினங்களின் கலப்பு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த தனது கணவர் சொர்ணம், காயத்தின் வேதனை தாங்க முடியாமல் சயனைற் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என சொர்ணத்தின் மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வவுனியா நலன்புரி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட சொர்ணத்தின் மனைவியும் மற்றைய புலிகளின் முக்கிய தளபதியுமான தேவன் என்பவரின் மனைவியும் தற்போது கொழும்பு கொண்டுவரப்பட்டு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இவ் செய்தி வெளிவந்துள்ளது.
உறுதியாக சொல்கிறேன்....பத்திரமாக இருக்கிறார் பிரபாகரன்: நெடுமாறன் பேச்சு
  
''இலங்கையில் போரை நிறுத்த கோரி தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தியது. போரை நிறுத்த கோரி தமிழகம் உள்பட பல்வேறு நாடுகளிலும் 18 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு பின்னரும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் கூட்டணியாக சேர்ந்து போரை நடத்தி சிங்கள அரசு வெற்றி பெற்று இருப்பது வெற்றி அல்ல. இது தற்காலிக வெற்றிதான்.

இப்போது இலங்கையில் சீனா ஆயுத கிடங்கும் அமைத்து வருவதோடு, பெட்ரோல், எண்ணை கிணறு அமைக்கும் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங்காலையோ, சோனியா காந்தியாலையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்பதை உறுதியாகவும், திட்டவட்டமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறேன். இதற்கு முன்பு பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் 4 முறை வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற்று பிரபாகரன் தலைமையில் தமிழ்ஈழம் அமையும். இது உறுதி. விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல.

தீவிரவாத இயக்கம் என்றால் மக்களை குண்டுவீசி கொன்று இருக்க வேண்டும். ஆனால் விடுதலைப்புலி இயக்கம் அப்படி செய்யவில்லை. சிங்கள மக்கள் மீது குண்டு வீசினார்களா? இல்லையே விடுதலைக்காக தான் போராடி இருக்கிறார்கள். ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்சே அரசுதான் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி கொன்றது. இதில் யார் தீவிரவாதி..'' என்று பழ.நெடுமாறன்  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: