செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

கண்ணில் பார்வை போனபோதும் கன்ணில் ஈரம் ததும்பும் - ஸ்ரேயா கோசல்
ஓம் சிவ ஓம் - விஜய பிரகாஷ்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் - மது பாலகிருஷ்ணன்
ஒரு காற்றில் அலையும் சிறகு - இளையராஜா
அம்மா உன் பிள்ளை - சாதனா சர்கம்
மாதா உன் கோவிலில் - மதுமிதா

ஒவ்வொரு பாடலைப் பற்றியும் விளக்கமாக சொல்ல விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க இளையராஜாவின் '''பாலா'' Special

பண்ணைபுரத்தாரின் உயிரை உருக்கும் இசைப் படையல்
சேதுவை மிஞ்சி
நரம்புகளை ஊடுருவிச் செல்ல
காத்திருக்கிறது பிண்ணனி இசை

பாலாவின் வார்த்தையிலே சொல்வதானால்

With the Grand Music of Mastreo Ilayaraja
நான் கடவுள்

அன்பு நண்பர்களே!


அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை சார்பாக கவிக்கோ ''அப்துல் ரகுமான்'' பங்கேற்கும் கவிதைக்கூடல் நிகழ்ச்சி நாளை மாலை கராமா சிவ்ஸ்டார் பவனில் நடைபெறுகிறது. அமீரகத்தில் இருக்கும் அனைத்து தமிழன்பர்களும் பங்கேற்கும்படி அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவையின் சார்பாக உங்களை அன்போடு அழைக்கிறேன்.



இடம்: சிவ்ஸ்டார் பவன்

நேரம்: மாலை 7.30 மணி


தொடர்புக்கு

முத்துகுமரன் 050 -6243115; கவிமதி: 050-5823764

இசாக்: 050-4804113, பரத் :050-6536125


அன்புடன்

முத்துகுமரன்

பிரபல திரைப்பட நடிகர் M.N. நம்பியார் இன்று மதியம் மரணம் அடைந்தார்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக வாழ்ந்த அவருக்கு அஞ்சலிகள்



More than a Blog Aggregator

by முத்துகுமரன்
குண்டுகள் இடு!
கொலைகள் செய்!
வன்புணர்!
யோனிகள் சிதை!
வாழ்விடங்கள் தகர்!
சவக்குழிகள் பயிரிடு!
மனிதநேயம் நிர்வாணமாக்கு!
பட்டியலிடு, இறந்த குழந்தைகளையும் தீவிரவாதிகளாக்கி!
எல்லாம் செய்!
அரசாக!
அரசாக!
எம்
தமிழன் விழிக்காதவரை

உன் இறைமைக்கு
உத்திரவாதம் கொடுக்கவும்,
கட்டிக் காக்கவும்,
கூடவும் ஆசிகளோடும்
சிரித்துக் கொண்டிருப்பர்,
காந்தி தேசத்து அகிம்சை ராமர்கள்!


More than a Blog Aggregator

by முத்துகுமரன்
விரவிக் கிடக்கும் ஒலித்திரளினூடாக பயணித்தாலும்
மெளனத்தோடு
இதயக்குழியில் உள்ளடங்கி
உதிர்த்திடாத வார்த்தைகளுக்குள்
உயிர் கொண்டிருக்கிறது
எனது கவிதைகள்
யாரும் மொழிபெயர்த்திட இயலாதவாறு

கருத்துகள் இல்லை: