செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது. மோதல் தவிர்ப்பு வலயத்தில் இலட்சக்கணக்கான
காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சாட்சிகளிடம் முதல்சுற்று விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரகு, சுந்தரேச அய்யர் உட்பட 9 பேர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 15 பேர் ஆஜராகவில்லை. இன்றைய வழக்கு விசாரணையின்போது ஜெயேந்திரர் தரப்பில் வழக்கறிஞர்கள் செந்தில், நாராயணன், சிவக்குமார் ஆகியோரும், அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவதாசும் வாதாடினர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்து மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் முதல்கட்ட குறுக்கு விசாரணை நடைபெறவிருப்பதால், வருகிற 4ம் தேதி சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரி, மகன் ஆனந்த கிருஷ்ணசர்மா, கோவில் ஊழியர் கணேஷ் ஆகியோரிடமும், மற்றவர்களிடம் 5ம் தேதியும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

புதுவை அரசு பாலிடெக்னிக்கில் ஷிப்டு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று உயர்கல்வித் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

புதுவை அரசு பாலிடெக்னிக்கில் உள்ள 300 இடங்களுக்கு 1800 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதேப்போல் காரைக்காலில் உள்ள அரசு பாலிடெக்னிக்கிலும் 420 இடங்களுக்கு 1200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், தமிழகத்தை போன்று புதுவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கைக்கான இடத்தை உயர்த்த வேண்டுமென்றும், இது தொடர்பாக தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குனருக்கு புதுவை அரசு கடிதம் கொடுத்தால் அது சம்பந்தாக அமைச்சர் பொன்முடியிடம் பேசி வழிவகை காண தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில்நுட்ப மையத்தில் இதுவரை 35 இடங்கள் புதுவையைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த இடங்கள் மறுக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் நாராயணசாமி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், காரைக்காலிலேயே தேசிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க முயற்சி எடுக்க வேண்டுமென்று நாஜிம் வலியுறுத்தினார்.

இதுபோன்ற நிலையில் அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை அரசு பாலிடெக்னிக்கில் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால் அவர்களின் கல்விகற்கும் ஆர்வத்தினை நிறைவேற்றும் பொருட்டு இடவசதிகள் அதிகரிக்கப்படுவதுடன், ஷிப்டு முறையில் பாலிடெக்னிக்குகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதென தெரிவித்துள்ளார்.

புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகள் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்குவது தொடர்பாக நிர்வாகத்தினருடன் முதல்வர்வைத்திலிங்கம் இன்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்க வேண்டுமென்று, தடையில்லா சான்றிதழ் கொடுக்கும்போதே ஆணை வழங்கப்பட்ட போதிலும், அரசுக்குரிய 50 சதவீத இடஒதுக்கீடு இன்று வரை முறையாக வழங்கப்பட்டதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினருடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் அரசு நிர்ணயித்துள்ள 50 சதவீதம் என்பது இதுவரை கனவாகவே உள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது 50 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டுமென்று அரசு தரப்பில் கடந்த சில தினங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வனத்துறை கருத்தரங்கு கூடத்தில் நேற்றும், இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர் வல்சராஜ், சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

அப்போது அரசுக்குரிய 50 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கம்போல் இழுபறியே நீடித்தது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: