திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

1.தலைப் பிரட்டை பெண்
செதில்கள் ஒளிர வெய்யில் குடித்தபடி
யேந்திய தன் இதயங்களில் ஒன்றின்
மீதூறும் பவளப்பூச்சிகளை கொன்று
வீசுகிறாள் மாங்குரோவ் வேர்களில்

2.பிரசவ நேரத்து
நாபியாய் சுழிந்து புத்துயிர்க்கும்
புயலின் சமிக்ஞைகளிலிருந்து மீளாத
கடற்பஞ்சுகள் மெத்தைகளாகின்றன

3.மீளவியலாத விருப்பிடமாக கருவறைகள்
ஆன சாம்பல் கதைகள் டால்பின்களின்
நாட்குறிப்புகளில்
ஒரு வாட்சண்டை கற்றுக் கொடுக்கும் ஆசானிடம் ஒருவன் வந்து சேர்ந்தான். குருவே தங்களிடம் வாட்சண்டை கற்றுக் கொண்டே அடுத்த தெருவில் இருக்கும் குத்துச் சண்டையும் கற்றுக் கொடுக்கும் ஆசானிடமும் பயிலப் போகின்றேன் என்றான். குரு சொன்னார், "ஒரே நேரத்தில் இரண்டு எலிகளைப் பிடிக்கப் பாய்பவன் எதையுமே பிடிக்க மாட்டான்" அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,   கொல்லி ம‌லைச்சார‌ல் பொ.ஆனந்த் பிர‌சாத்


சோர்ந்து போய் இருக்கும் தருணங்களில் இந்தப்பாடலை ஒருமுறைக் கேட்டுப்பாருங்கள். சோர்வு , வருத்தம், கவலை, வேதனை என எல்லாம் விலகி உத்வேகம் வரும். P.B சீனிவாஸ் மற்றும் ஆபாவாணன் குழுவினருடன் பாட மனோஜ் கியானின் இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் ஊமை விழிகள் என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களில் முக்கியமான ஒன்று என சொல்லலாம்.

இந்த அருமையானப் பாடலை எழுதியவர் ஆபாவாணன்.


More than a Blog Aggregator

by குகன்
நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.



நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் 'நட்பு' என்று சொல்லிய வார்த்தை 'காதல்' என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.
ஒவ்வொரு வலைத்தளங்களில் மேயும் போது அவற்றின் முகவரி இருக்கும்
Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று பார்ப்போம்.



படிநிலை - 1

உங்களுக்கான படத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில்
twitter கணக்கு வைத்திருந்தால் அந்த படத்தை கூட எளிமையாக தேர்வு செய்யலாம். பின்னர் இந்த தளத்தில் சென்று உங்கள் படத்தை ஐகானாக மற்ற வேண்டும், ஏனெனில் முகவரிப்பட்டியில் இடம் பெறவேண்டிய குறும்படம் ஐகானாக அல்லது .gif Animated கோப்பாக தான் இருக்க வேண்டும்.

http://www.html-kit.com/favicon/


இங்கே சென்றால் உங்களுடைய படத்தை ஐகானாக அல்லது .gif கோப்பாக மாற்றி தருவார்கள். இதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். இங்கேயே
படத்திற்கு பின்புற வண்ணம் சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கருப்பு வெள்ளை ஐகானாக மாற்றுதல் போன்றவற்றை Customize என்பதை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். பின்பு Download Icon Package என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் தரவிறக்கிகொள்ளவும்.

படிநிலை - 2

உங்களுக்கான குறும்படம் தயாரானபின் அதை நீங்கள் ஆன்லைனில் சேமித்தால் தான் அதை பயன்படுத்த முடியும். அதனால் இந்த குறும்படத்தை எதாவது ஒரு இணைய சேமிப்பகம் ( Online Storage Website ) வசதி உள்ள தளங்களில் சேமிக்கவேண்டும். Photobucket போன்ற பல இணையதளங்களில் ஐகான் ( .ico ) கோப்புகளை சேமிக்கும் வசதி இல்லை. நான் இறுதியாக Fileden என்ற தளத்தில் உறுப்பினராகி என்னுடைய ஐகானை சேமித்தேன்.
இணையதள முகவரி: http://www.fileden.com/

உங்களுக்கு தெரிந்த ImageHosting தளங்கள் இருந்தால் கருத்துரை இடவும். இந்த தளத்தில் ஏற்றிய பின்னர் அதற்க்கான இணைப்பை ( Link ) பெற்றுக்கொள்ளவும்.

Link இதைப்போல இருக்கும்.

http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico

படிநிலை - 3

உங்கள் blogger கணக்கில் நுழைந்து Layouts பகுதிக்கு சென்று Edit Html என்பதை
தேர்வு செய்யவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தின் HTML கோடிங் பகுதியில்
சென்று என்பதற்கு முன்பாக கீழே உள்ள கோடிங்கை சேர்க்கவும்.
என்பது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் F3 அழுத்தி தேடிக்கொள்ளுங்கள்.






மேல் உள்ள கோடிங்கில் முக்கியமான விஷயம் உங்கள் குறும்படத்திற்க்கான
Fileden இல் கிடைத்த இணைப்பை ( Link ) மாற்றி அடித்துக்கொள்ளவும். பின்னர் சேமித்து விட்டு உங்கள் வலைப்பக்கத்தை பாருங்கள்.
ஜொலிக்கிறதா என்ன ?

கருத்துகள் இல்லை: