திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

அவர்கள் விளையாடுகிறார்கள்
ஒரே நேரத்தில்
விளையாட்டு மைதானத்திலும்
மக்களின் வாழ்விலும்

ஸ்கோர் என்னவென
கேட்பவர்களுக்கு
அவ்வப்போது சொல்கிறார்கள்
நாலு விக்கெட்டிற்கு
நூறு ரன்
ஒரு ரவுண்ட்
விமான குண்டு வீச்சுக்கு
நூறு பிணங்கள்.
மைதானத்தில்
வேகமாய் சுழன்று வரும் பந்துகளில்
நடவு செய்த குச்சிகள்
சரிந்து வீழ்கின்றன.
விமானத்தில்
குறிபார்த்து போடப்படும் குண்டுகளில்
சிதறி விழுகின்றன
வீதியில் நடமாடும்
மனித உடல்கள்

தொலைக்காட்சியின் முன்னால்
தவமிருக்கும் ரசிகர்களுக்கோ
பரம திருப்தி
ஒரே நேரத்தில்
இருவேறு சேனல்களில்
விறுவிறுப்பான விளையாட்டையும்
உக்கிரமான போரின் மரண ஓலத்தையும்
ஒரே நேரத்தில் பார்க்க முடிவதில்.

இ.சாகுல் அமீது
அவர்கள் விளையாடுகிறார்கள்
ஒரே நேரத்தில்
விளையாட்டு மைதானத்திலும்
மக்களின் வாழ்விலும்

ஸ்கோர் என்னவென
கேட்பவர்களுக்கு
அவ்வப்போது சொல்கிறார்கள்
நாலு விக்கெட்டிற்கு
நூறு ரன்
ஒரு ரவுண்ட்
விமான குண்டு வீச்சுக்கு
நூறு பிணங்கள்.
மைதானத்தில்
வேகமாய் சுழன்று வரும் பந்துகளில்
நடவு செய்த குச்சிகள்
சரிந்து வீழ்கின்றன.
விமானத்தில்
குறிபார்த்து போடப்படும் குண்டுகளில்
சிதறி விழுகின்றன
வீதியில் நடமாடும்
மனித உடல்கள்

தொலைக்காட்சியின் முன்னால்
தவமிருக்கும் ரசிகர்களுக்கோ
பரம திருப்தி
ஒரே நேரத்தில்
இருவேறு சேனல்களில்
விறுவிறுப்பான விளையாட்டையும்
உக்கிரமான போரின் மரண ஓலத்தையும்
ஒரே நேரத்தில் பார்க்க முடிவதில்.

இ.சாகுல் அமீது


More than a Blog Aggregator

by மானுடம்


More than a Blog Aggregator

by மானுடம்
இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் வேகமாக வளர்கின்றன : ஒபாமா புகழாரம் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று வியந்துள்ளார்.  அதிபர் ஒபாமா ரஷ்யத் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மிகவும் வேகமான வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                         இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், வடபகுதி மக்கள் வேண்டுவது உண்மையான வசந்தமேயன்றி முகவராட்சியல்ல. யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவிவரும் தள நிலைபற்றி நான்  அறிந்;தவற்றையும், பிறர் கூறக் கேட்டவற்றையும் இச்சந்தர்ப்பத்தில் சுயாதீனமாகக் கூறி வைக்க விரும்புகின்றேன் யாழ்ப்பாணத்தில் வசந்தம் வீசவில்லை. மக்கள் தங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அனுபவிப்பது அமைதிப்புயலே. பன்னிரண்டு ஆண்டுகளிற்கு முன் ஆரம்பித்த புயல் படிப்படியாக வலுவடைந்து சில நபர்களிற்கு வழங்கப்பட்டிருக்கின்ற சலுகைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் உச்ச நிலை அடைந்துள்ளது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணம் எதுவித பலனையும் [...]

கருத்துகள் இல்லை: