செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

வரும் சனிக்கிழமை மாலை 3 மணி முதல் வீட்டில் இருந்து 'இப்ப வர்றிங்களா இல்லையா ?' என செல்பேசி மிரட்டல் வரும் வரை சிங்கை புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் பதிவர் சந்திப்பு நடை பெற இருப்பதாக ஏற்கனவே ஜோசப் பால்ராஜ் பதிவில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற முறை சந்திப்புகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்ததால், ஏன் சனிக்கழைமைக் கூட வைக்கலாமே என கேட்டு கலக குறல்கள் ?:))) எழுந்ததால், இந்த முறை சனிக்கிழமை வைக்கலாம் என்று பதிவர்களால் ஒருமனதாக தீர்மாணிக்கப்பட்டு இருக்கிறது.

இடம் : புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையம்

நேரம் : மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் : சிங்கை நாதன் செந்தில் மற்றும் ஜோசப் பால்ராஜ்

சந்திப்பின் கருப்பொருள் : எங்கே செல்லும் பதிவர் பாதை ?

விவாதம் : வலைப்பதிவில் இருந்து ஓய்வு பெறுவது எப்படி ? - வலைப்பதிவாளர் கோவி.கண்ணனின் சிறப்புரையுடன் தொடங்கி வைக்கப்படும்

சந்திப்பின் தீர்மானம் : புதிய பதிவர்களின் எழுத்துக்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது

நிகழ்ச்சி ஆரம்பம் : மாலை 3 மணி
இளைப்பாறுதல் : அவ்வப்போது
தேனீர் இடைவேளை : மாலை 5 மணி

இந்த முறை முந்தைய சந்திப்புகளில் விடுபட்ட பதிவர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527


More than a Blog Aggregator

by கோவி.கண்ணன்

பூவின் வாசமோ, வண்ணமோ
எதோ ஒரு ஈர்ப்பில்
பார்த்துக் கொண்டு இருந்த
என்னை அழைத்தது அருகில்,

எல்லாப் பூக்களைப் போலத்தான்
இந்த பூவும் நன்றாக இருக்கிறதே
ஒட்டி உறவாடினேன்
அந்த ரோஜாவுடன் !

நெருங்கிப் பழகியதாலோ என்னவோ
உரிமை எடுத்துக் கொண்டு,
என்னிடம் பழகும் நீ
ஏன் காட்டுப்பூக்களிடம்
பழகுகுறாய் என்று கடிந்து
கொண்டது ரோஜா.

பூவெல்லாமே எனக்கு ஒன்றுதான் !
நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும்,
என்னைவிட அந்தபூக்கள்
என்ன உயர்வு உனக்கு ?
கடிந்து கொண்டது ரோஜா !

மீண்டும் சொன்னேன்,
பூக்களெல்லாமே பூக்களே
எந்த பூவும் என்னிடம் பேசினால்
நானும் பேசுவேன் !

நீ பூவென்று நினைப்பது பூவல்ல
பூநாகம், நீ தொடர்ந்து
பழகினால், உன் கூடா ஒழுக்கமாக
உன்னை வெறுப்பதைத் தவிர எனக்கு
வழி இல்லை என்று சொன்னதுமின்றி
முட்களால் என்னைத் தீண்டிவிட்டு மவுனமானது !

வருடிக் கொடுக்கும்
என் விரலில் தீண்டினாலும்
இதயத்தில் தீண்டியதாகவே உணர்ந்தேன்.
நீ மட்டும் என்ன ? நீயும் முட்களால் தீண்டி
காட்டு ரோஜாதான் என காட்டிவிட்டாயே !

அன்பு ரோஜாவே,
பூவில் பூநாகம் இருப்பதெல்லாம் எனக்கு
தெரியாது, என்னைப் பொருத்து
அது நாகலிங்கப் பூதான்,
அந்த பூமட்டுமல்ல,
எந்த பூவும் என்னுடன் பழகினால்
நான் பழகுவேன் !
உன்னுடன் மட்டும் பழகி,
நீ சொல்வதை மட்டும் கேட்கவேண்டும் ?
நீ நினைப்பதை என்னால் நிறைவேற்ற முடியாது !

உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை,
என்னைத் தீண்டியதில் உதிர்ந்துவிட்ட
உன்முட்களால் ஏற்பட்ட காயம்
உனக்கு வலிக்குமே...
அதற்க்காக நானும் கூட வருந்துகிறேன்.

என்றோ ஒருநாள்,
பூந்தோட்டத்தில் எல்லாப்பூக்களுடன்
நீயும் இருக்க வேண்டும்,
அன்று என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !


வறுமைகள் கூட இவர்கள் வரிகளின் பொற்காசுகள் !
சிறுமைகள் கூட இவர்களின் கவிதை அலங்காரங்கள் !

துன்பவேளையை கவிதை யாழாக இசைப்பவர்கள்,
இன்ப வேளையை கவிதையில் ஏளனம் செய்பவர்கள் !

நாட்டுப்பற்றும் இவர்களால் நக்கல் செய்யப்படும் !
வீட்டுப்பற்றும் இவர்களால் சிக்கல் ஆகிவிடும் !

சோற்றுக்கு வழிதேடாமல் தூற்றலால் பசியாறுவார்கள் !
மாற்றுக்கு துணியில்லாவிட்டாலும் காற்றுக்கு ஆடை தைப்பார்கள் !

நெருப்பு சுடுவதுதான் இயற்கையா ? எங்கள் சொற்களின்,
வெறுப்பு சுடாவிட்டால் நீர் இயற்கை எய்தியவர் என்பர் !

வெடிகுண்டு வெடித்துவிட்டால் வெகுண்டெழு(த) - வரி
அடிகொண்டே அனைத்தையும் அடக்கிவிட நினைப்பர் !

பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !

அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்துவிட்டர் என்பர், சோம்பியிருந்தே
அரிசிகூட இவர்கள் கவிதையால் வெந்துவிடுமென்பர் !

வரிகளை வரிசை மாற்றிப் போட்டுவிட்டு, போற்றிக் கொடுக்கும்
பரிசுக்கு என் கவிதை பெற வாய்ப்பில்லை என்பர் !

கற்கண்டு இனிப்பதெல்லாம் இனிப்பா ? என்
சொற்கண்டால் அவை வெறும் இளிப்பே என்பர் !

சமூக அவலம் இவர்களின் எழுத்துக்கு தீனி, அதைப் போக்கி
சுமூகமாக்க இவர்கள் இறங்கியிருக்கிறார்களா நானி ?


பின்குறிப்பு : கவிஞர் நெல்லக் கண்ணன் நடத்தும் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக்கும் இந்த கவிதைக்கும் தொடர்ப்பு இல்லை :)
தேர்தல் வந்துவிட்டது,
எந்த அலையும் வீசவில்லை
என்கிறார் முதல்வர்
விலைபோகும் அளவுக்கு
இடைத் தேர்தல் அல்லதான் !

இலவச வலைகளால்
உங்களுக்கே வாக்குகள் கிடைக்கலாம்,
இன்னும் கூட வாக்குக்கு வழியுண்டு,

ஈழவர்களின் நலனுக்கு தீக்குளித்த
கட்சிக்காரர்களின் கருகிய படம் இருந்தால்
ஆளுக்கு 4 தொகுதிகள்
ஆளும் கட்சிக்கு கூட்டணிக்கு கிடைக்கலாம் !

தேர்தல் உடன்படிக்கைபடி
முத்துக்குமாரின் படம் யாருடைய
பிரச்சாரத்துக்கு என்கிற கேள்விக்கு
யாருக்கும் இன்னும் விடைதெரியவில்லை !

கருத்துகள் இல்லை: