செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

உலகின் பெரிய முட்டை இட்ட சூப்பர் கோழி!

bigegg.jpg

சாதாரண கோழி ஒன்று உலகில் மிகப்பெரிய முட்டையை இட்டிருக்கிறது. அதுவும் இது சீனக் கோழி.

வெகு விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கும் இந்த முட்டை குறித்து கோழியின் முதலாளி ஷாங் இண்டே கூறுகையில், ”என் கோழி இட்ட முட்டை 201 கிராம் இருக்கிறது. சாதனை முட்டையை விட இது 25 கிராம் எடை அதிகமிருக்கிறது. 6.3 சென்டிமீட்டர் அகலத்தில், 9.2 சென்டிமீட்டர் நீளமுள்ள இம்முட்டைக்கு ஒப்பீடுகையில், சாதாரண முட்டை இதில் மூன்றில் ஒரு பங்கே இருக்கிறது” என்கிறார்.

முட்டையின் பெருமையைப் பற்றி குறிப்பிட்ட இவர், இப்போது முட்டையிட்ட கோழியின் பெருமைகளைச் சிலாகிக்கிறார்.

”இது ஒரு சூப்பர் கோழிங்க. இதுபோன்ற பெரிய முட்டை (மூன்று) களை இது ஏற்கனவே இட்டிருக்கிறது. ஒருமுறை ஒரே நாளில் நான்கு முட்டைகளை(!) இது தொடர்ந்து இட்டு ஆச்சரியப்படுத்தியது” என்றவர்,

”அவளுக்கு (கோழிக்குத்தான்) என்னுடைய நாய் வீட்டை சுற்றி வருவது என்றால் மிகவும் விருப்பமானது. ஒருவேளை நாய்க்கான உணவை தின்றிருப்பாள் எனச் சந்தேகப்படுகிறேன்” என்கிறார்.

கின்னஸ் சாதனை நிறுவனம் வந்து, சோதனையிட்டு, மிகப்பெரிய முட்டை என அறிவிக்கப்படும் வரை ஷாங் இண்டேவின் குளிர்பதன பெட்டிக்குள் சிலுசிலுவென அமர்ந்திருக்கப் போகிறது இம்மாம் பெரிய  முட்டை.

நண்பர்களே இணையத்தில் எத்தனை முறை வீடியோ பார்த்திருப்போம்.  ஆனால் வீடியோ பார்க்கும் போது உங்கள் வேலைகளை செய்ய இயலாது.  ஏதாவது ஒன்றுதான் இயலும் ஒன்று வீடியோ பார்க்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும்.  நீங்கள் வீடியோ பார்த்துக் கொண்டு உங்கள் வேலைகளையும் செய்ய ஆசைப்படுகிறீர்களா????? 
உங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி 
அது மட்டுமில்லை இந்த மென்பொருள் மூலம் இணைய வீடியோ மட்டுமில்லாமல் நீங்கள் உங்கள் கணிணியில் சேமித்து வைத்திருக்கும் வீடியோக்களையும் பார்க்கலாம்..
இந்த மென்பொருளை நிறுவி விட்டு நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவின் லிங்க்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள் பின்னர் நேரடியாக படம் பார்க்க இயலும் அந்த நேரத்தில் நீங்கள் எக்ஸல், வேர்ட், எந்த கோப்புகள் வேண்டுமோ திறந்து வேலை செய்யுங்கள். 
மேலும் தெரிந்து கொள்ள மென்பொருளின் இணையத்தளம் சுட்டி

உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ் மணத்திலும் குத்துங்கள்.  அப்படியே கீழே மேலே உள்ள விளம்பரங்களையும் கிளிக் செய்து எங்களுக்கு ஒரு காபி குடிக்க உதவி செய்யுங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

சியர்ஸ் கட்டட கண்ணாடி பால்கனி: சிக்காகோ திகில்!
sears-tower.jpg

யரத்தைக் கண்டால் நடுநடுங்குபவர்கள் சிக்காகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் பக்கம் வராமல் இருந்தால் நல்லது. அப்படி வந்துவிட்டால், அதை அண்ணார்ந்துப் பார்க்கும்போதே உயிரும் மேலே போனாலும் போய்விடும்.

சிக்காகோ நகரில் கட்டப்பட்டுள்ள சியர்ஸ் கட்டடம் 103 மாடிகளைக் கொண்டதொரு பிரமாண்ட உயரமுள்ள கட்டடம். இதன் 1,450 அடி உயரத்தில், உச்சியில் கட்டடத்தின் வெளிப்பக்கமாக 4அடி சுற்றளவில் கண்ணாடி பால்கனிகள் பொருத்தப்பட்டன.

sears-tower-in-chicago.jpg

சுற்றுலாப் பயணிகளுக்கு இது த்ரில்லிங்கான சமாச்சாரம்தான். இத்தனை உயரத்தில் இருந்தபடி காலுக்கு அடியில் பார்த்தால் அடிவயிறு கலங்கிப் போகும். மார்பு துடிப்பதும் நின்றுபோகும்.

கட்டடத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் வண்ண விளம்பர வாசகங்களும் அந்த உயரத்தில் ஒட்டப்பட்டன. வருடம் முழுவதும் இங்கு வந்து குவியும் சுமார் 13 லட்சம் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இவை செய்யப்பட்டன.

sears-tower-in-chicago1.jpg

இதுகுறித்து கண்ணாடி பால்கனி நிறுவியவர்கள் சார்பில் கூறப்பட்ட செய்தியில், ”இது 1.5 இன்ச் கனத்திலான கண்ணாடி தான். ஆனால் 5 ஆயிரம் டன் வரை எடையைத் தாங்கும். பள்ளிச் சிறுவர்கள் குறிப்பிட்ட உயரத்தில் குதித்தால் ஏற்படும் தரை அதிர்வுகூட இதில் ஏற்படாது” என்று எளிதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடி பால்கனில் நின்றபடி பார்க்கும்போது சிக்காகோ நகரும், நகருக்கும் ஓடும் சிக்காகோ ஆறும், சிறுத்துபோன மனிதர்களும் வாகனங்களும் நிச்சயம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாக அமையும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: