செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

தினகரன் நாளிதழை வாங்கிய சன் குழுமம் தற்போது அதை மெருகேற்றி அதன் விலையை 1 ரூபாயாக குறைத்துள்ளது. வலையில் ஈ-பேப்பர் வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பை சற்றே மாற்றி கொஞ்சம் வண்ண மசாலா தூவியிருக்கிறார்கள். செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை. :, தமிழ், தமிழ்ப்பதிவுகள், நடப்பு
மைக்ரோசாஃப்டிடம் இருந்து தப்பித்த யாஹு கூகிளிடம் அடைக்கலம் சேர்ந்துவிட்டது.10 வருட ஒப்பந்தம். ஏற்க்கனவே யாஹு ரொம்ப நிறைய இழந்துவிட்டது. கொஞ்சமே கொஞ்சம் இருந்த மரியாதையும் இப்போ காலி (!).யாஹுவின் ஓப்பன் சோர்ஸ் டெவ் குரு ஜெரிமி கிளம்புகிறார். டேட்டா குருவும் கிளம்பிவிட்டார்.ஷேர் நாளுக்கு நாள் இறங்கிகொண்டே இருக்கிறது.புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இங்கு அருமையாக பொருந்தும். யாஹு
தமிழகத்தின் முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் அத்தனையும் ஈ-பேப்பர் வடிவில் கிடைப்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.தமிழகத்தின் 3 முக்கிய ஆங்கில தினசரிகளும் ஈ-பேப்பர் வடிவில் கிடைக்கின்றனஹிந்து - 90 நாட்களுக்கு இலவசம், அப்புறம் எவ்வளவு காசென்று தெரியவில்லை. இப்போதைக்கு 90 நாட்களுக்குப் பின்னும் இலவசமாகவே ஆட்டைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.இந்தியன் எக்ஸ்ப்ரஸ் டெக்கான் க்ரோனிகிள்
தினமலரின் கடைசி செய்திகளில் கண்டெடுத்த முத்து:சென்னை: மேற்கு வங்கத்தில் 209 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 40 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும் 35 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். கேரளாவில் 88 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 51 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் அசாமில் 26 தொகுதிகளில் காங்கிரசும் 15 தொகுதிகளில் அசமாகண பரிஷத்தும் 21 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.இதுல தமிழ் நாடு
நாளை (ஜூன் 17, 2008) பயர்பாக்ஸ் தரவிறக்க நாள். உலாவியின் மூன்றாம் பதிப்பின் வெளியீட்டை முன்னிட்டு ஒரே நாளில் அதிகமாக தரவிறக்கப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை உருவாக்க மொசில்லா குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். நாளை ஒன்றிரண்டு பிரதிகளை (வீடு, அலுவலகம்) தரவிறக்கி உலக சாதனை ஜோதியில் ஐக்கியமாகுங்கள். இங்கே சென்று 'தரவிறக்கப் பிரமாணம் ' எடுத்துக் கொள்ளலாம். திறமுலத்திற்கான நம்மாலான சிறு ஆதரவை
சென்னை-ஜூலை 3

சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பலின் கடற்படை வீரர்கள் 4 நாட்கள் ஆட்டம், பாட்டத்துடன் உல்லாசமாக பொழுதை கழிக்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் தங்கும் வீரர்கள் இரவில் நடன அழகிகலுடன் உல்லாசமாக பொழுதை போக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மது விருந்துக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது.சென்னை வடபழனியில் உள்ள 'கிரீன் பார்க்' ஓட்டலில் 70 வீரர்கள் தங்கியிருந்தனர்.நேற்று இரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் பொழுதை கழித்தார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=346541&disdate=7/3/2007

எல்லாம் சரி...அது என்னையா..'ஓட்டல்களில் தங்கும் வீரர்கள் இரவில் நடன அழகிகலுடன் உல்லாசமாக பொழுதை போக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'...?

ஒரு அரசாங்கம் இதற்கெல்லாமா ஏற்பாடு செய்து தரவேண்டும்?

கருத்துகள் இல்லை: