செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07



More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠
எச்சரிக்கை:- இந்த வீடியோ "ஆட்டோ ப்ளே" மோடில் இயங்கும்.
_______________________________________________


குரல் பதிவு எலோரும் போடுகிறார்களேன்னு நானும் போட்டுப் பார்த்துட்டேன்.

அடுத்ததாக ஒரு வீடியோ பதிவும் போட்டுடலாம்னு தோணுச்சு.

இதோ களத்தில் இறங்கியாச்சு.

ஒரு காதல் கவிஜ எழுதி.. அதுக்கு தொடர்புடைய மாதிரி வீடியோவும் எடுத்து.. கவிஜயை பேசி.. இரண்டையும் இணைச்சு.. ஒருவழியா வேலையை முடிச்சுட்டேன்.

அது உங்கள் பார்வைக்கு.





More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠






வணக்கம் நண்பர்களே!

சந்திப்பு நடத்தி ரொம்ப நாளா ஆகிடுச்சு என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே.. சிறில் அலெக்ஸ் மெயில் அனுப்பினார். தமிழகம் வரப்போகிறேன். சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமாவென.

இதோ அவரும் வந்து இறங்கி விட்டார். சந்திப்புக்கான அறிவிப்பும் போட்டாச்சு.

மேலும், இந்த வலைப்பதிவர் சந்திப்பில் சென்னைக்கு வெளியே இருக்கும் பல பதிவர்கள் வர இருக்கிறார்கள்.




சிறிலலெக்ஸ்.



தருமி



ஓசைசெல்லா



துபாய் ராஜா



துபாய் லியோ சுரேஷ்

மற்றும்

பாஸ்டன் பாலாவும் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக சிறில் சொல்லி இருக்கிறார். அவசியம் வந்திருங்க!

அஜெண்டா இல்லாத சந்திப்பா...?

இது தான் அஜெண்டா:-





மே மாதம் கோவையில் நடக்கவிருக்கும் "தமிழ் ப்ளாக்ர்ஸ் கேம்ப்" பற்றி ஓசை செல்லா சொல்லுவார்.


இடம்: நடேசன் பார்க், தி.நகர்.

நேரம்: சரியாக மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை.

நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை.

வருகையை உறுதி செய்ய நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாம். என் கைபேசி 0-99400 45507 எண்ணுக்கும் அழைக்கலாம்.


More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠
உனக்கான
காத்திருப்புக்களிலெல்லாம்
ஏறிவிடும்
மனதின்வயது
உன்னை பார்த்தநிமிடத்திலேயே
குழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.

****

உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீஊதிக்கொடுத்த பலூன்
ஒரு இடத்தில் நிற்கமாட்டாமல்
அறையெங்கும் தள்ளாடியபடியே
வலம் வருகிறது.

***

சத்தமிடாமல்முத்தமிடத்தெரியாதா
என்று கோபப்படத்தெரிகிறது
உனக்கு
நம்ப மறுக்கும்காதுகளுக்கு
சத்தத்தைமட்டுமே
கொடுக்கத்தெரிந்திருக்கிறது எனக்கு.

***
இரவு நேரங்களில்
மொட்டைமாடிக்குவராதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
நட்சத்திரங்கள்
வெட்கித்தற்கொலை
செய்துகொள்கின்றன.

***

இலக்கணமாக நீ
இருக்கும் தைரியத்தில் தான்
உனைபேசும்கவிதைகள்
மரபுடைக்கின்றன.

***

திருவிழாவுக்குக் கூட
கிராமத்துப் பக்கம்
வருவதில்லை என்று
அலட்டிக்கொள்கிறாள் அம்மா
திருவிழா பார்க்கும்மகிழ்ச்சியை விட
பத்து மடங்கு கூடுதலாக கிடைக்கிறது
உனைப் பார்க்கும் போதெல்லாம்
நீதான் நகரத்தில் இருக்கிறாயே!

***
புரையெறினால்
தட்டுவாய் என
தெரிந்திருக்கிறதுதலைக்கு
அதனாலேயே
நீ இருக்கும்
போதெல்லாம்புரையேற்றிக் கொள்கிறது.
***
கங்கையாற்றின்
அழுக்கை கரையிலிருந்தே
பார்த்து திரும்பி விட்டாயாமே
உன் கால்களையாவது
நனைத்திருந்தால
்புனிதப்பட்டு போயிருக்கும் அது.

***

கோவிலுக்குள்
கண்மூடி வழிபடும்
போதும்முன்னும்
பின்னுமாய்
அசைந்தபடியே இரு.
சிலைத்திருட்டு செய்திகள்
எல்லா நாளிதழ்களிலும்!

***


More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠



அடுத்தவன் பேச்சை கேட்டு, நடந்து.. மாட்டிக்கொள்வதே வாடிக்கையாக போச்சு. இப்படித்தான் ஏற்கனவே ஒருமுறை சொன்னதாக நினைவு. இது அதனுடைய இரண்டாம் பாகம்னு வச்சுக்கிடலாம்.

ரொம்ப அடம்புடிச்சு.. அழைத்துக்கொண்டு போனான் சேரனின் மாயக்கண்ணாடி படம் பார்க்க. சேரனின் மேல் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லாவிட்டாலும்.. சில எல்லைகளை தொட அவர் முயற்சி செய்திருக்கிறார் என்பதால் எப்போதும் ஒரு மென்மையான முக்கு(அட! சாஃட் கார்னரின் தமிழாக்கம்) என்னுள் உண்டு. அந்த நம்பிக்கையில் தான் கிளம்பிப் போனேன்.

நவீன சலூன் கடையில்( பியூட்டி பார்லர்) வேலை பார்க்கும் காதல் ஜோடி சேரன், நவ்யா. கடையின் முதலாளியாக ராதாரவி.

நண்பனின் ஓசி வண்டியில் காதலியோடு விடுமுறை நாளில் ஊர் சுற்ற கிளம்புகிறார் சேரன். ஆனால்.. தொடர்ச்சியாக பல இடையூறுகளினால் அந்த ஜோடி போட்ட திட்டம் பனால் ஆகிறது. எல்லாவற்றுக்கும் கையில் காசு இல்லாதது தான் காரணம் என்று முடிவுக்கு வருகிறார்கள். பணம் சம்பாதிக்க, சீக்கரமே பணக்காரணாக என்று அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபட முடிவெடுத்து முதலில் எல்.ஐ.சி ஏஜெண்டாக மாறுகிறார்கள். ஆனால்.. எல்.ஐ.சி ஆபிஸர் சொல்லுகின்ற மாதிரி இவர்களால் வாடிக்கையாளர்களை பிடிக்க முடியாமல் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது.

அடுத்ததாக சினிமா நாயகனாக வலம் வரும் கனவுடன் அலைகிறார். வேலை பறி போகிறது. சில வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் சில கசப்புகளுடன் மீண்டும் முயற்சியை தொடரும் சேரனிடம், தன் சினிமா கனவுகளால் வாழ்வை தொலைத்த கதையை சொல்லுகிறார் ஒரு பெரியவர்(கவிஞர்.முத்துலிங்கம்). அத்துடன் இவரும் திசை திரும்பி வேறு வேலைக்கு போகிறார். கடத்தல் காரர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து, உள்ளே போய், வெளியே வரும் சேரன் மீண்டும் தனக்கு தெரிந்த கைத்தொழிலையே தொடர்கிறார். படம் நிறைவு பெறுகிறது.



நிறைய முரண்பாடுகள். சாதாரண மிடில் கிளாச் வாழ்க்கை வாழும் நாயகனும் நாயகியும் உடுத்தும் ஆடைகள் படு ரிச்சாக இருப்பது தொடங்கி ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங். வழக்கமான சேரன் பாணி படங்களை எதிர்பார்த்து போனால்.. ஏமாற்றமே!

முதல் பாதி முழுவதும் சவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வு மிட்டாய் போல இழுத்துக்கொண்டே போகிறது காட்சிகள். படத்தில் காட்டப்படும் அனேக காட்சிகள் ஏற்கனவே வேறு படங்களில் வேறு சந்தர்ப்பங்களில் வந்த அதே காட்சிகள் என்பதால் செம போர். துணிக்கடைக்குள் ஆடை மாற்றும் அறைக்குள் நாயகனும், நாயகியும் சேர்ந்து கனவு காணுவது, வெளியே கூட்டம் கூடி கதவை தட்டுவது...என்பது போன்ற காட்சிகளை குறிப்பிடலாம்.

இரண்டாம் பாதி முழுக்க விதவிதமான அட்வைஸ் மழை. சினிமாவில் தோற்ற பெரியவர், போதை மருந்து கடத்தும் "வெள்ளைக்காலர்" பெரியவர், ராதாரவி என எல்லோருமே இளைஞர்களை நோக்கி, அசையா கேமராவைப் பார்த்து நீளளளளளளமான வசனமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வசனங்களை நம்பிக்கொண்டிருந்த பழையகாலத்து படம் போல இருக்கிறது. நமக்கு வீட்டில் சொன்னாலே ஆவாது. காசு கொடுத்து படம் பார்க்க வந்தா.. இங்கேயுமான்னு பக்கத்து சீட்டுக்காரர் முணுமுணுத்ததை சேரன் கேட்க வேண்டும்.

குறிப்புட்டு சொல்லும் படி இப்படத்தில் இருப்பது..

முடிதிருத்துபவரின் உடலசைவை நன்கு உள்வாங்கி செய்திருக்கிறார் சேரன். மோதிர விரலில் கத்திரியை வைத்துக்கொண்டு வேலை செய்வது, கத்திரியை தட்டி ஓசை எழுப்புவது என்பது போன்ற நுணுக்கமான விசயங்களையும் கவனித்து செய்திருப்பது பாராட்டுக்குறியது.

இசை: இளைய ராஜா என்றார்கள். நம்பவே முடியலை. பாடலாகட்டும், பின்னனி இசையாகட்டும்.

சேரன் கொஞ்சம் கவனித்து பயணிப்பது நல்லது.

இது என் கருத்து. நீங்களும் பார்த்துட்டு வந்து சொல்லுங்க!!




சென்னை பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தி முடிச்சாச்சு. மீடியா மூலம் தமிழ்வலைப்பதிவூகளை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு போகும் வேலையையும் செய்தாச்சு. ஆனா.....



அங்கே எனக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதி இப்போது தான் வெளியே வந்திருக்கிறது.


சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் இன்று காலை தான் பார்வைக்கு வந்தன.. அதில் ஒன்று தான் நீங்கள் மேலே பார்ப்பது. அந்த படத்தை உற்று நோக்கினால் ஒரு எனக்கு எதிராக நடந்த சதி தெரியும்.


அந்த போட்டோவை/சதியை கீழே வட்டம் போட்டு காட்டி இருக்கிறேன்.

---


---


---


---


---




--



---


---




--




--




--



---







--




எனக்கு 'கொம்பு' வைத்த மாப்பு வரவனையின் இச்செயலை வண்மையாக கண்டிக்கிறேன். ஆமா!
நண்பர்களே!

இதோ.. தமிழ்மணத்திற்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பதிவர்களுக்காக.. இந்த பதிவு!

ஓரத்தில் இருக்கும் "பொத்தானை" அமுக்குங்கள் அது வழி நடத்தும்.

நன்றி!!

லக்கியின் பதிவு இங்கே!

குறிப்பு:--

பதிவர் குறித்த ரகசியங்களை தமிழ்மணம் வெளியே விட்டிருக்காது என்ற எங்களின் நம்பிக்கையுடன்.. எத்தனை பேரின் நம்பிக்கை இணைகிறது என்று சோதித்துப் பார்க்கவே.. பட்டையைப் போட்டோம்.

நிறைய பதிவர்கள் தங்களின் நிலைபாட்டினை ஆரதவு மூலம் காட்டிய பின் பட்டையின் தேவை இல்லாமல் போனது அதனால தூக்கியாச்சி! :))

கருத்துகள் இல்லை: