செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07



இசையரசியின் இனிமையான தெரிவுகள்

இசையரசியின் அபிமானிகளே ரொம்ப நாள் கழித்து வந்துள்ளேன். இசையரசியின் இனிமையான பாடல்கள் எல்லோரும் கேட்ட பாடல்கள் தான். அவரின் வாழ்க்கை தகவல்களுடன், திரைப்படத்துடன் கொண்ட தகவல்களூடன். அற்புதமான ஒலித்தொகுப்பு சென்ற வாரத்தில் வானொலியில் ஒலிப்பரப்ப்பட்டது. அறிவிப்பாளர் மிகவும் அழகாக அவரின் தகவல்க்ளை தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. இதுபோல் ஒலித்தொகுப்புகள் இந்த தளத்தில் வந்துள்ளாதா என்று தெரியவில்லை? (ஜீரா சார், பிரபாசார் நீங்கதான் சொல்லனும்)இந்த பதிவு வரும் நாள் என் திருப்பூர் அன்பர் திரு. அகிலா விஜயகுமார் அவர்கள் மூலம் என்னிடம் இசையரசி பற்று சில தகவல்கள் கேட்டார்கள். நான் இணையத்தில் தேடி பிடித்து உடனே அனுப்பிவைத்தேன். அறிவிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இசையன்பர்களே ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் மேலான உணர்வுகளை ஒரு வரியில் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இசையரசியின் ரசிகர்கள் சார்பாக. ஆக்கத்தை உருவாக்கிய அறிவிப்பாளர் தொண்டாமுத்தூர் திரு. ரவி அவர்களூக்கு வாழ்த்துக்கள். நன்றி.

குறிப்பு: ஒலிக்கோப்பின் நீளம் அதிகம் ஆகையால் தரவிறக்கம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இசையன்பர்கள் இசையரசியின் மழையில் மறுபடியும் நனைய வாருங்கள் என்று அழைக்கின்றேன். கோவை ரவி

Get this widget | Track details | eSnips Social DNA
நீண்ட நாட்களாக இசையரசி பதிவு வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு இனிய பாடலுடன் இந்த இடைவெளியை நிரப்புகின்றேன். இந்தப் பதிவு இசையரசி பி.சுசீலாவுடன் எஸ்.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ஒரு ஜோடிப் பாடல்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடலாம், பாடல்கள் சிறப்பாக, இனிமையாக இருக்கும் என்று. ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவோடு கூட்டணி சேரும் போது மட்டுமல்ல, தேவாவோடு "என் ஆசை மச்சான்" போன்ற படங்களில் இணைந்தபோதும், "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை" திரைப்படத்தில் கே.வி.மகாதேவனோடு இணைந்தபோதும் கூட அந்தச் சிறப்பு இருந்தது.

சரணாலயம் திரைப்படம் ஆர்.சுந்தராஜன், எம்.எஸ்விஸ்வநாதனோடு இணைந்து பணியாற்றிய வந்த அருமையான பாடல்களோடு வந்த படமாகும். குறிப்பாக நான் இங்கு தரும் "நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு" பாடலைக் கேளுங்கள், உண்மை புரியும். எம்.எஸ்.வி எண்பதுகளிலும் சோர்ந்து விடவில்லை என்பதற்கு இப்படியான பாடல்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

Nedunaal aasai - SPB P.Suseelaa

சுவாமிமலை எங்கள் சுவாமிமலை சிவ
சண்முகனுக்கு ஈடு யாரும் இல்லை (சுவாமிமலை)

சப்தங்களின் தொடக்கம் பிரணவமாம்
சாரம் தெரியாமல் திகைத்தனராம்
சத்தியலோகத்து பிரம்மனுமே
சரவணன் கையாலே சிறைப்பட்டான் (சுவாமிமலை)

சங்கரன் செவியினில் சிவபாலன்
சாற்றும் உபதேசன் ஓம் நாதம்
சாமிமலை தகப்பன் சாமிமலை
சன்னிதி வந்தவர்க்கு ஏது குறை (சுவாமிமலை)




பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்


அகத்திய முனிவர் அருளிய இந்தப் பாடல்கள் மிகவும் சந்த நயத்துடன் கூடியது. சிறுவயதில் இருந்தே அன்னையாரால் அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரை பாடுவதற்கு அடியேன் மிகவும் விரும்பும் பாடல்கள் இவை. அண்மையில் இப்பாடல்களை திரு. வெ. சுப்பிரமணியன் அவர்கள் மின் தமிழ் குழுமத்தில் இட்டார்கள். அதனை இங்கே முருகனடியார்கள் பாடிப் பயன் பெறும் வகையில் பதிகின்றேன்.

ஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம் (ஷண்முக) (1)

ஆனந்த மாமலர்ச் சோலையிலே-மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக) (2)

பக்குவமாம் தினைக் காட்டினிலே- அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே -அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக)(3)

தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே-அவர்
சுற்றிச் சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே-தவ
ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக)(4)

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே-பொருள்
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே-தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக)(5)

வேதாந்த தத்துவ ஸாரத்திலே-அலை
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலி யோகத்திலே-பர
மாத்ம ஜீவாத்ம வைபோகத்திலே (ஷண்முக)(6)

அன்பர்க்கு இயற்றிடும் சேவையிலே-உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே-காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக)(7)

நண்ணும் இயற்கை அமைப்பினிலே-ஒளி
நட்சத்திரங்கள் இமைப்பினிலே
விண்ணில் விரிந்துள நீலத்திலே-மயில்
மேல்வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக)(8)

தேகவிசாரம் மறக்கையிலே-சிவ
ஜீவவிசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே_கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே- (ஷண்முக)(9)

மானாபிமானம் விடுக்கையிலே- தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே-குரு
நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக)(10)


ஆடிவரும் நல்ல நாகத்திலே-அருள்
ஆறெழுத்தின் ஜெபவேகத்திலே
கோடிவரம் தரும் கோயிலிலே-தன்னைக்
கூப்பிடுவார் மனை வாயிலிலே (ஷண்முக)(11)

ஸித்தரின் ஞான விவேகத்திலே- பக்தர்
செய்திடும் தேனபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே-அதன்
உட்பொருளாம் சிவ ஜோதியிலே (ஷண்முக)(12)

அன்னைமடித்தலப் பிள்ளையவன்
சச்சிதானந்த நாட்டினுக் கெல்லையவன்
பண்ணும் ஏகாக்ஷர போதனவன்-மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக)(13)

செல்வமெல்லாம்தரும் செல்வனவன் -அன்பர்
சிந்தைகவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும்செஞ்சேவல் பதாகை உயர்த்திய
வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக)(14)

சேர்ந்தவருக்கென்றும் சகாயனவன் -இன்பத்
தூயனவன் அன்பர் நேயனவன்
சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன் (ஷண்முக)(15)

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால்-வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய்-வந்த
விந்தைகொள் ஞானக்குழந்தையவன் (ஷண்முக)(16)

முத்தொழிலாற்றும் முதற்பொருளாம்--ஆதி
மூல சதாசிவ மூர்த்தியவன்
இத்தனி உண்மை மறந்தவனைச் -சிறை
இட்டவனாம் பின்னர் விட்டவனாம் (ஷண்முக)(17)

வள்ளி தெய்வானை மணாளனவன் -மண
மாலைகொள் ஆறிருதோளனவன்
அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகழ்
ஆகம நான்மறை அந்தமவன் (ஷண்முக)(18)

கோலமுடன் காலை மாலையிலும்-இரு
கோளங்கள் வானில் வரப்புரிவான்
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே-எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் (ஷண்முக)(19)

பேர்களெல்லாம் அவர் பேர்களன்றோ -சொல்லும்
பேதமெல்லாம் வெறும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால்-வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் (ஷண்முக)(20)

கும்பமுனிக்கருள் நம்பியன் -அன்பு
கொண்ட கஜானனன் தம்பியவன்
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின்புறும்
ஜோதியவன் பரம் ஜோதியவன் (ஷண்முக)(21)
இன்று கிருத்திகை. ஆனால் மனம் மிக கனத்துடன் இருப்பதால் பதிவை விரிவாக போட முடியவில்லை. என் அண்ணன் மகளின் கணவர் நுரையீரல் வலுவிழந்து மூச்சுவிடமுடியாமல் அப்போல்லோ மருத்துவ மனையில் தீவிர சிகித்ஸை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வயது 40தான் ஆகிறது. அவருக்காக அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப முருகனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நல்ல உள்ளங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
-
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!




திரைப்படம் - கந்தரலங்காரம்
இசை - குன்னக்குடி வைத்தியநாதன்

கருத்துகள் இல்லை: