திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29


தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வில்


மார்ச்
30 ந்திகதி திங்கட்கிழமை
மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை
Markham & Finch சந்திப்பில் இடம்பெறும்.

1 ந் திகதி புதன்கிழமை
மாலை 4. 30 மணிக்கு கவனயீர்ப்பும் 5. 30 பாதையோர நடைபவனியும்
Markham & Kingston

மாலை 4 .30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வு 5. 30 மணியளவில் பாதையோர நடைபவனியாக அணிவகுத்து

Kingston Rd & Markham Rd
இலிருந்து நகர்ந்து Kingston Rd & Eglinton

ஊடாக இடது புறமாகத்திரும்பி Markham Rd & Eglinton சந்திப்பில் மீண்டும் இடது புறமாகத் திரும்பி நடைபயணத்தை ஆரம்பித்த இடமான Kingston Rd & Markham Rd வந்தடையும்.

01 - 4 - 2009 அன்று நிகழ உள்ள பாதையோர நடைபவனிக்கான வரைபடத்தினைக் காண இங்கே அழுத்துக.

Start
Kingston Rd & Markham Rd ->
Kingston Rd & Eglinton -> turn left
Markham Rd & Eglinton -> turn left
Kingston Rd & Markham Rd
Finish

ஏப்ரல்
4 ந்திகதி சனிக்கிழமை
முற்பகல் 11 மணியிலிருந்து 2 மணிவரை கவனயீர்ப்புடன் கூடிய பாதையோர நடைபவனி

விக்ரோரியாப்பார்க் பிரதானவீதியும், செப்பேர்ட் பிரதான வீதியும் சந்திக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து, விக்ரோரியாப் பார்க் பிரதான வீதியின் நடைபாதையூடாக நடந்து, எல்ஸ்மேர் பிரதானவீதியில் இடது பக்கமாகத் திரும்பி, பயணித்து மீண்டும் வோர்டன் பிரதான சந்திப்பில் இடதுபக்கமாக திரும்பி, நகர்ந்து மறுபடியும் செப்பேர்ட் பிரதான வீதியின் இடதுபுறமாகத் திரும்பி ஆரம்பித்த இடமான விக்ரோரியாப் பார்க் பிரதான வீதியும், செப்பேர்ட் பிரதான வீதியும் சந்திக்கும் ஆரம்பப்புள்ளியை வந்தடையும்.

4 - 4 -2009 நிகழ இருக்கும் நடைபவனிக்கான வரைபடத்தினைக் காண இங்கே அழுத்துக.

start
Sheppard Ave E & Victoria Park Ave,
Victoria park & Ellesmere – turn left
Warden & Ellesmere – turn left
sheppard & Warden – turn left
Sheppard Ave E & Victoria Park Ave,
Finish


கனடாத்தமிழ் மகளிர் அமைப்பு
ஸ்காபுரோ வளாகம்.

ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகள் பெறும்பாலும் கீழ்க்கண்டவாறே உள்ளன
The death of 49 babies in clinical trials at the All India Institute of Medical Sciences in New Delhi may have opened a Pandora's box as two of the trial drugs have never been tried on patients below 18 years, an expert said.

The dead babies were part of a pool of 4142 infants used in 42 clinical trials - one of the final stages of drug development - at AIIMS since January 2006, many for Western companies. Of the children used in the trials, 2728 were under a year old.

The AIIMS paediatrics department conducted 42 sets of trials on 4,142 babies—2,728 of them below the age of one—since January 1, 2006.
இதில் சொல்லப்படும் விஷயம் 4142 குழந்தைகளும் சோதனையில் பங்கு பெற்றார்கள். ஆனால் சொல்லப்படாத முக்கிய விஷயம் அவர்கள் அனைவருக்கும் புது மருந்துகள் அளிக்கப்படவில்லை.

சோதனையில் பங்கு பெறுவதற்கும் சோதிக்கப்படுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன ??
  • சோதனையில் பங்கு பெறுவது – Those who take part in Clinical Trial
  • சோதிக்கப்படுவது – Test Group
சோதனையில் பங்கு பெறுபவர்கள் (Those who take Part in Clinical Trial) = சோதிக்கப்படுபவர்கள் (Test Group ) + சோதனை செய்யப்படாதவர்கள் (Control Group )


4142 குழந்தைகள் = மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகள் + மருந்து அளிக்கப்படாத குழந்தைகள்

மருந்து அளிக்கப்படுபவர்களை - case என்றும் மருந்து அளிக்கப்படாதவர்களை control என்றும் அழைப்பார்கள்

அதே போல்


மரணமடைந்த 49 குழந்தைகளில் மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளுடன் மருந்து அளிக்கப்படாத குழந்தைகளும் உள்ளனர் என்ற தகவலை எந்த ஊடகமும் தெரிவிக்க வில்லை

முக்கிய குறிப்பு - மருந்து அளிக்காமல் / அளிக்கப்படாமல் எப்படி ஒரு குழந்தை மரனமடையும்  என்று பகிரங்க கடிதம் எழுதி கேட்கலாம் என்று நினைப்பவர்களுக்காக - இந்த குழந்தைகள் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்கள். அவர்கள் அந்த நோயினால் மரணமடையலாம்.

அதே போல் சோதனை என்றால் கண்டிப்பாக Caseசுடன் Control இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. (வெகு சில விதி விலக்குகள் உள்ளன)

இப்பொழுது உதாரணத்திற்காக ஒரு சோதனை எடுத்துக்கொள்ளுங்கள்

சோதனை : இரத்த சோகை நோய்க்கு இரும்பு சத்து மாத்திரை வழங்குதல்

சோதனையில் பங்கு பெற்றவர்கள் – 100 (இவர்கள் அனைவரும் இரத்த சோகை நோய் உள்ளவர்கள்)
  • மருந்து இரும்பு சத்து மாத்திரை அளிக்கப்பட்டவர்கள் – 50
  • மருந்து இரும்பு சத்து மாத்திரை அளிக்கப்படாதவர்கள் - 50
இந்த சோதனையின் முடிவுகள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.இதில் (சோதனை 1ல்) பங்கு பெற்ற 10 குழந்தைகள் மரணம் அடைகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அது எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.நான் உதாரணத்திற்கு மூன்று முடிவுகளை மட்டும் தருகிறேன்

முடிவு 1






மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


குணமடைந்தவர்கள்


40


50


90


மரணமடைந்தவர்கள்


10


00


10


எண்ணிக்கை


50


50


100


முடிவு 2






மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


குணமடைந்தவர்கள்


45


45


90


மரணமடைந்தவர்கள்


05


05


10


எண்ணிக்கை


50


50


100


முடிவு 3






மருந்து பெற்ற குழந்தைகள்


ருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


குணமடைந்தவர்கள்


50


40


90


மரணமடைந்தவர்கள்


00


10


10


எண்ணிக்கை


50


50


100

இந்த மூன்று முடிவுகளிலுமே

சோதனைகளில் பங்கு பெற்ற 100 குழந்தைகளில் 10 பேர் மரணம் என்று தான் பத்திரிகைகளில் எழுதுவார்கள்.

ஆனால் மூன்றும் ஒன்றா ??
  • முதல் முடிவின் படி அந்த மருந்து சாப்பிடுபவர்களுக்கு மரணம்
  • இரண்டாம் முடிவின் படி மரணத்திற்கும் அந்த மருந்திற்கும் தொடர்பில்லை
  • மூன்றாவது முடிவின் படி அந்த மருந்து உயிர்காக்கும் மருந்து
உயிர் காக்கும் மருந்தேயானாலும் அந்த சோதனையில் பங்கு பெறும் குழந்தைகளில் 10 குழந்தைகள் (அவர்கள் மருந்து பெறாததால்தான் இறந்தார்கள் என்பது வேறு விஷயம்) இறந்து விட்டனர் என்ற செய்தி சரிதான்


தற்பொழுது எய்ம்சின் பரிசோதனைகளுக்கு வருவோம்

மொத்தமாக 4142 குழந்தைகள் 42 சோதனைகளில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதில் ஒரு வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 2728. (சில செய்திகளின் படி இது 1768). இதில் 49 குழந்தைகள் மரணம் என்ற செய்தி மட்டும் தான் தெரிகிறது. இதில் சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்
  1. பங்கு பெற்றவர்கள் – 4142
  2. மரணம் – 49
  3. ஒரு வயதிற்கு கீழ் – 2728 அல்லது 1768
  4. ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் மரணம் அடைந்தது – தகவல் இல்லை
நாம் குறைந்தபட்ச எண்ணிக்கையான 1768யை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வோம். (4142 குழந்தைகளில் 49 குழந்தைகள் மரணம் என்பதை விட 1768 குழந்தைகளில் 49 குழந்தைகள் மரணம் என்பது முக்கியம் என்பதால்).

இந்த சோதனையின் முடிவுகள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். நான் உதாரணத்திற்கு மூன்று முடிவுகளை மட்டும் தருகிறேன்

முடிவு 1



மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் குணமடைந்தவர்கள்


835


884


1719


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


49


0


49


எண்ணிக்கை


884


884


1768
முடிவு 2


மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் குணமடைந்தவர்கள்


859


860


1719


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


25


24


49


எண்ணிக்கை


884


884


1768
முடிவு 3


மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் குணமடைந்தவர்கள்


884


835


1719


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


0


49


49


எண்ணிக்கை


884


884


1768

  • முடிவு 1 என்றால் (புது மருந்து அளிக்கப்பட்டவர்கள் மரணம்) அது கவலைப்பட வேண்டிய விஷயம்
  • முடிவு 2 என்றால் (மருந்து அளித்தாலும் அளிக்காவிட்டாலும் ஒரே பலன் தான்) மேலும் ஆராயலாம்
  • முடிவு 3 என்றால் அது நல்ல விஷயம். ஆனால் மூன்றாம் முடிவானாலும் கூட சோதனையில் பங்கு பெற்ற குழந்தைகளில் 49 குழந்தைகள் மரணம் என்று தான் கூறப்படும். 

எனவே 49 குழந்தைகள் மரணம் என்ற ஒரு செய்தியை மட்டும் வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது

அடுத்த முக்கிய விஷயம்

மருந்து பெற்றவர்களோ, மருந்து பெறாதவர்களோ அவர்கள் ஒன்று கண்டிப்பாக குணமடைந்திருக்க வேண்டும் அல்லது மரணமடைந்திருக்க வேண்டும் என்று இல்லை. சிலர் அப்படியே கூட இருக்கலாம் எனவே நமது அட்டவனையில் சிறிது மாற்றம் செய்தால் உண்மையில் இது இப்படி கூட இருக்கலாம்



மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் நலம்


??


??


??


சோதனையில் பங்கு பெற்றவர்களில் அப்படியே உள்ளவர்கள்


??


??


??


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


??


??


49


எண்ணிக்கை


884


884


1768

எனவே முழு தகவல்கள் இல்லை என்றாலும் கூட

  1. மருந்து பெற்றவர்களில் மரணமடைந்தவர்களின் சதவிதம்
  2. மருந்து பெறாதவர்களில் மரணமடைந்தவர்களின் சதவிதம்
என்ற இரு தகவல்களையும் ஒப்பிட்டு பார்த்தே முடிவிற்கு வர வேண்டும்

அதே போல் குணமடைந்தவர்களில்
  • மருந்து பெற்றவர்களில் குணமடைந்தவர் சதவிதம்
  • மருந்து பெறாதவர்களில் குணமடைந்தவர் சதவிதம்
இரண்டையும் ஒப்பிட்டே மருந்து வேலை செய்கிறதா என்று முடிவு செய்ய வேண்டும். பல சித்த மருத்துவர்கள் தங்களின் மருந்துக்களை இந்த சோதனைக்கு சம்மதிப்பதில்லை. ஏனென்றால் மருந்து பெறுபவர்களில் எத்தனை சதவீதம் குணமடைகிறார்களோ அதே அளவு மருந்து பெறாதவர்களும் குணமடைவது தெரிந்தால் அதன் பின் கடை விரிக்க முடியாது என்பதால் :) :)

எனவே 49 குழந்தைகள் மரணம் என்ற ஒரு செய்தியை மட்டும் வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஆனாலும் ஏறத்தாழ அனைவரும் அந்த நிறுவனத்தை தாளித்து விட்டனர். ஏன் ?? ஏய்ம்ஸ் மேல் ஏன் இவ்வளவு காண்டு ?? என்பதை புரிந்து கொள்வது வெகு எளிது. ஏய்ம்ஸ் மேல் இந்த "கொலைவெறி" எதற்கென்றால்  ஏய்ம்சின் மேல் கடுப்புடன் இருப்பவர்களின் பட்டியல் மிகப்பெரிது

  1. மருத்துவர்கள்: ஏய்ம்சில் படிக்கும் / வேலை பார்க்கும் மருத்துவர்களை தவிர பிறர் அனைவருக்கும் (நான் உட்பட :) :) ) ஏய்ம்ஸ் மீது பலத்த கடுப்பு உண்டு. இதற்கான காரணங்களை விளக்க தனி இடுகை எழுத வேண்டும். அந்த அளவு அங்கு பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள். உதாரணமாக எனக்கு ஏய்ம்ஸ் மீது காட்டம் இருப்பதற்கு சில காரணங்கள்
    • நடத்தப்படும் நுழைவு தேர்வின் மதிப்பெண் வெளியிடப்படுவது கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் மட்டும் தான் வெளியிடப்படும்
    • அங்குள்ள பேராசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது
  2. மரு.வேணுகோபாலை (மற்றும் அவரது அல்லக்கைகளை) பிடிக்காதவர்கள் மற்றும் அவர்களின் ஊடகங்கள். இவர்களுக்கு வேணுகோபால் மற்றும் அவர் போன்றவர்களை போட்டு தாக்க வேண்டும்
  3. மத்திய சுகாதார அமைச்சரை (மற்றும் அவரது சாதியை) பிடிக்காதவர்கள்  மற்றும் அவர்களின் ஊடகங்கள் – அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூப்பாடு போடுவதற்கு இது நல்ல சாக்கு
இப்படியாக அனைவரும் கிடைத்தது சாக்கு என்று ஏய்ம்சை துவைத்து எடுத்து விட்டனர். (இந்தியாவில் 99% சதவித மக்கள் 2 அல்லது 3ல் அடங்கி விடுவார்கள் – நான் 2 !!) நானும் கூட "மிதிவண்டி இடைவெளியில் மூவுருளி ஓட்டியதை"  எனது ஆங்கில பதிவில் காணலாம் :) ;)
  1. பின் குறிப்பு 1 : தலைப்பு விளக்கம் - புள்ளியியல் குறித்து குட்டை பாவாடையை வைத்து ஒரு ஆங்கில பழமொழி உள்ளது. முழு தகவலையும் அளிக்காமல் வெறும் எண்களை (புள்ளி விபரங்களை) மட்டும் வைத்து எதிர்மறை எண்ணங்களை கூட ஏற்படுத்தலாம் என்பதற்கு இந்த 49 குழந்தைகள் மரணம் என்ற செய்தியே உதாரணம். இது போல் பல உதாரணங்கள் உள்ளன
  2. பின் குறிப்பு 2 : இந்த பதிவு ஏய்ம்சிற்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல. இந்த சோதனைகள் குறித்த எனது ஆங்கில பதிவில் என் கருத்தை காணலாம்  இது போன்ற சமயங்களில் (முக்கியமாக வருங்காலங்களில்) ஊடகங்களில் வரும் எண்களை வைத்து நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இடுகை
  3. பின் குறிப்பு 3 : ஏய்ம்சின் பொறுப்பற்ற தன்மை குறித்த என் ஆங்கில இடுகை இங்குள்ளது 
  4. பின் குறிப்பு 4: குட்டைபாவாடை, புள்ளியல் குறித்த மற்றொரு இடுகை


    "குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்" -- பத்ரி சாரின் பதிவுக்கு ஒரு கருத்து

  5. பின் குறிப்பு 5 : சந்தேகங்களை கேட்கலாம்

நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

கருத்துகள் இல்லை: