வீதியோரம் வண்ணத்துப்பூக்கள்
நம்
விழியோரம் ஆனந்த
மகிழ்நீர்த்துளிகள்
பச்சைநிறப் பயிர்களில்
இச்சைக்கொள்ளும்
நம் விழிகள்
இது
உழவனின் வேர்வைத்துளிகள்
விவசாயமில்லாத நாடு
உயிரில்லா எழும்புக்கூடு
பயிர்களின் வளர்ச்சியே
உயிர்களின் உணர்ச்சி
உழவனின் நம்பிக்கைத்தான்
நாட்டின் அஸ்திவாரம்
அழும்குழந்தைக்கு
அமுதம் ஊட்டுவதைப்போல்
வாடும்பயிர்களுக்கு
பாசனம்மட்டுமல்ல
பாசத்தையும் ஊட்டும்
உழவர்கள்
உணவுபண்டங்களுக்காக
மண்ணை உழுது
பயிர் செய்யும் நாம்
மனதை உழுது
மனிதனாவது
எப்போது...?
பாசவண்ணத்தில்
வாழ்க்கைகூட்டை
வடிவமைத்து
நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி
நேர்ந்தாரையும்
சார்ந்தோரையும்
சடதிச் செய்யமுடியுமா...?
பிச்சைப் பாத்திரம்ஏந்தும்
இச்சைமுத்து
பச்சைநிற வாகனத்தில்
வளம்பெற முடியுமா...?
கயல்விழியோடு
காதலில் முழ்கி
மனம்கலந்த மனங்கள்
காதலைமறக்க முடியுமா...?
பல்லாக்கு தூக்கும்
பணியாளன்
பவனிவரும் அரசனைப்போல்
அரசாளத்தான் முடியுமா...?
தேன்கூட்டைக் காக்கும்
தேனிக்களை
ஒருகல் விட்டால்போதும்
கலைந்துவிடுவது போல்
முடியாத முயற்சிகளை
முடித்துவிடும்
முறித்தும்விடும்
பணம்...!
24.03.2009. வன்னியில் யுத்த சூனிய வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த நிலைமை மேலும் பாரதூரமாகக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நடைபெற்று வரும் வலயத்தில் சுமார் 150,000 சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 35 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அப்பாவிச் சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சிவிலியன்கள் பாதுகாப்பு வலயத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்தால் அரசாங்கத்தின் [...]
மகாத்மா காந்தி உபயோகித்த பொருட்களை எலம் விட்டு கொஞ்சம் நாட்களே ஆகி இருக்கும் நிலையில் இப்போது திப்பு சுல்தானின் மதிப்பு மிக்க பொருள் ஒன்று ஏலத்திற்கு வருகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தை அலங்கரித்த நவரத்தினங்கள் பதித்த, தங்கத்தால் ஆன, புலியின் தலையை போன்ற தோற்றத்தை கொண்ட அலங்காரப்பொருள் லண்டனில் ஏப்ரல் 2 ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இந்த பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஏலத்திற்கு வருகிறது. இது அதற்கு முன் கடந்த 100 வருடங்களாக நார்த்தம்பர்லேண்ட் என்ற இடத்தில் இருக்கும் ஃபெதர்ஸ்டோன் கோட்டையில் இருந்திருக்கிறது. 1799ல் திப்பு சுல்தானை தோற்கடித்த ஆங்கிலேயர்கள், அவரின் சிம்மாசனத்தை பெயர்த்து அதிலிருந்த இந்த அலங்கார பொருளை எடுத்து சென்றதாக தெரிகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட இன்னொரு பெரிய அலங்கார பொருள் வின்ஸ்டர் கோட்டையிலும், இன்னொரு பகுதி போவிஸ் கோட்டையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ஏலம் விட இருக்கும் அலங்கார பொருள் 8.00,000 பிரிட்டிஷ் பவுண்ட்க்கு ( சுமார் 5,84,00,000 ரூபாய் ) ஏலம் போகும் என்று சொல்லப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாக கருதப்படும் இந்த பொருள், ஏலம் விடப்பட்டு யாரிடம் செல்லப்போகிறது என்பதை இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்
அஜீத்தின் அசல் படத்திலிருந்து விலகி விட்டார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
அசல் படத்தை முதலில் கெளதம் இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் படத்தின் கதையை இறுதி செய்யவே நெடு நாட்களாகும் போல இருந்ததால் தயாரிப்பாளர்கள் கெளதமை கழற்றி விட்டு விட்டனர்.
இதையடுத்து சரண் இப்படத்தின் இயக்குநராக புக் ஆனார். அஜீத்துக்கும், சரணுக்கும் சினிமா கெமிஸ்ட் சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் என்பதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகி விட்டார்.
டைமுக்கு ட்யூன்களை கொடுக்க முடியாமல் போனதால் படத்திலிருந்து அவர் விலகி விட்டாராம்.
இதுகுறித்து ஹாரிஸிடம் கேட்டபோது, ஆமாம், நான் அசல் படத்தில் இல்லை. இது எனது முடிவுதான். யாரும் என்னை நீக்கவில்லை.
படத்தின் கதையை இறுதி செய்ய தயாரிப்பாளர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொண்டனர். ஆனால் இப்போது நான் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆதவன், பாஸ்கரின் தெலுங்குப் படம் ஆகியவற்றில் பிசியாகி விட்டேன்.
இதனால் இப்போது இந்தப் படத்திற்கு என்னால் வர முடியவில்லை. அடுத்த படங்களில் சேரலாம் என அசல் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
ஹாரிஸ் விலகியதைத் தொடர்ந்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். தீனா, பில்லா, ஏகன் ஆகிய படங்களுக்கு ஏற்கனவே அஜீத்துக்காக சூப்பர் ட்யூன்களைப் போட்டுக் கொடுத்தவர் யுவன் என்பதால் இசை சிறப்பாகவே அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளது அசல் டீம்.
எந்திரன் படத்துக்காக இது நாள் வரை கடைப்பிடித்து வந்த பத்திய சாப்பாட்டைக் கைவிட்டு விட்டார் ரஜினிகாந்த்.
உடல் எடையைக் கூட்டுவதற்காக நிறைய சாப்பிட ஆரம்பித்துள்ளாராம்.
ரஜினிகாந்த்தின் இடுப்பளவு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்படியேதான் இருக்கிறது. காரணம், அவர் கடைப்பிடித்து வரும் ஸ்டிரிக்ட்டான டயட் முறை. அது மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ சூப்பர் ஸ்டாரின் இடுப்பு பல 'டயர்'களை வாங்கியிருக்கும்.
ஆனால் ஒரு ஹீரோவுக்கு முக்கியமானது அவரது உடல் அழகும், வனப்பும், எடுப்பும்தான் என்பதை உணர்ந்து வைத்துள்ள சூப்பர் ஸ்டார், பத்திய சாப்பாட்டுக்கு மாறி பல காலமாயிற்று.
இந்த நிலையில் எந்திரன் படத்துக்காக இந்த பத்திய சாப்பாட்டுக்கு பிரேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
படத்தில் வரும் ரஜினியின் கேரக்டருக்கு சற்று எடை கூடுதலாக இருக்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். குறைந்தது 20 கிலோ எடையாவது அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பத்தியத்தை கைவிட்ட ரஜினி தற்போது கூடுதலாகவும், எடையைக் கூட்ட உதவும் பதார்த்தங்களையும் சாப்பிட ஆரம்பித்துள்ளாராம்.
பெரு மற்றும் ஒரு மாத கால சென்னை ஷூட்டிங்கை முடித்து விட்ட எந்திரன் யூனிட் வேலூருக்கு ஷிப்ட் ஆகியுள்ளது. அங்கு உடல் எடை கூடிய ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவுள்ளனராம்.
வேலூர் என்றால் முதலி்ல் நினைவுக்கு வருவது கோட்டை. கூடவே நினைக்கு வருவது மணமணக்கும் பிரியாணிதான். அதிலும் ஆம்பூர் பிரியாணி என்றால் வாயில்லாதவர்களுக்கும் எச்சில் ஊறும்.
தற்போது அந்த ஆம்பூர் பிரியாணியைத்தான் ரஜினி பிடி பிடித்துக் கொண்டிருக்கிறாராம். அவர் மட்டுமல்லாமல் யூனிட்டாருக்கும் ஆம்பூர் பிரியாணியை வாங்கி பிடிக்கச் சொல்லியுள்ளார்.
இப்போது தினசரி ஆம்பூர் பிரியாணிதான் ரஜினியின் சாப்பாடாக மாறியுள்ளதாம். இப்படி தினசரி பிரியாணி சாப்பிட்டதால் 6 கிலோ எடையை கூட்டி விட்டாராம் ரஜினி.
வழக்கமாக அரிசி சாதத்தையே தொடுவதில்லை ரஜினி. உடல் எடையை சிக் என்று வைத்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று முன்பு ஒரு முறை சென்னையில் நடந்த விழாவில் அவர் விளக்கியது இளம் ஹீரோக்களுக்கு பாடம் எடுத்தது போல இருந்தது.
ஆனால் இப்போது எந்திரன் படத்துக்காக அவர் எதையெல்லாம் விட வேண்டும் என்று சொன்னாரோ அதையெல்லாம் சாப்பிட முன்வந்துள்ளார். இதுதான் தொழில் பக்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக