வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

திருகோணமலையில் 6 வயது சிறுமி ஜூட் ரெஜி வர்ஷா படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது எனக் கோரி திருகோணமலை நகரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

சிறுமி வர்ஷாவின் கொலையை தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் ஆகிய சகல இனமக்களும் கண்டிப்பதாக அப்பதாதைகளில் குறிப்பிட்டு, கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சார்பில் சடத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதான 6 பேரில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிலும், மற்றுமொருவர் சயனைட் அருந்தியும் மரணமடைந்துள்ள நிலையில் ஏனைய 4 பேரும் அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த கலாநிதி பிறைன் செனிவிறட்ன தலைமையில் "இலங்கையில் தமிழர்களுக்கு நீதியான சமாதானம்" என்னும் தலைப்பில் வரலாற்றுப் பின்னனியுடன் கூடிய சமகாலக் கருத்தரங்கு நடைபெற்றது.

இலங்கையில் நடைபெறுவது கல்விப்படுகொலை பொருளாதாரப் படுகொலை மதப்படுகொலை கலாச்சார படுகொலை அடங்கலான திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலை என்பதை வரலாற்றுச்சான்றுகளுடன் ஆதார பூர்வமாக எடுத்து விளக்கினார்.

சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட சமாதான முயற்சிகள் போலியானவை என்றும் கிளிநொச்சி நகர்மீதான இராணுவ ஆக்கிரமிப்புடன் சமாதான முயற்சிகளுக்கான இறுதிக்கதவையும் இறுக்கி மூடிய சிங்களதேசம் தமிழர்களை தனி நாடு நோக்கிய பயணத்தில் விரைவாக பயணிக்கச் செய்திருக்கின்றது என்றும் கூறினார்.

தமிழீழம் நோக்கிய பயணத்தில் தமிழ் இளையோரிற்கு இருக்கும் வரலாற்றுக்கடமையை எடுத்து விளக்கியதோடு இலங்கையில் தமிழர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாற்று உண்மைகளை அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்துடன் சிறிலங்காவின் பொருட்கள் சேவைகளை புறக்கணிப்பதுடன் சர்வதேச ரீதியாக சிறிலங்கா பெற்று வரும் நிதி உதவிகளை தடுத்து நிறுத்தி சிறிலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்தலும் புலம்பெயர் தமிழர்களின் காலக்கடமையில் முக்கிய அம்சங்களில் ஒன்றெனவும் எடுத்துக்கூறினார்.

தமிழர்களை ஆயுதமேந்த நிர்ப்பந்தித்த ஆளும்வர்க்கம் இன்று தனித்தமிழீழம் என்னும் நிரந்தரத் தீர்வை நோக்கியும் நகர நிர்ப்பந்தித்துள்ளது. அத்துடன் சரத்பொன்சேகா மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச ரஜீவ விஜயசிங்க ஆகியோரின் தீவீரமான தமிழ் இனப்படுகொலைச் செயற்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தி தமிழ் ஈழவிடுதலையை விரைவாக்கி தமிழ் உறவுகளை காக்கும்படி வேண்டிக்கொண்டார்.

அத்துடன் மாணவர்களுக்கு வரலாற்று ரீதியாக இலங்கையில் நடந்து வரும் பல்வேறு அடக்குமுறைச் சம்பவங்களை எடுத்து விளக்கியதுடன் மாணவர்களின் பல்வேறு வகையான வினாக்களிற்கும் விடையளித்தார்.

கனடியத் தமிழர் பேரவையின் மொன்றியல் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச்சேர்ந்த தமிழ் மற்றும் வேற்று இன மாணவர்கள் கலந்துகொண்டனர்.

திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. கூட்டணியில் பாமகவை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு, தேமுதிகவையும் புதிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்பியது. ஆனால் இரண்டு கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கவே விரும்பியது. ஆனால், அவர்கள் கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து, காங்கிரஸ் கட்சியுடன் பேசவே தயாராக இருந்தனர். தொகுதிகளின் எண்ணிக்கையை காங்கிரஸ் முடிவு செய்யட்டும் என்று சொல்லி டெல்லி தலைவர்களுடன் பேசினர்.
இந்த அணுகுமுறை திமுகவுக்கு இகோவை ஏற்படுத்தியது. டெல்லி மூலம் பேசுபவர்களை விரும்பாத திமுக சில தடங்கல்களை ஏற்படுத்தவே, பாமக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. தேமுதிக பத்து தொகுதிகள் தந்தால் வருவோம் என்று சொல்கிறது. இதனால் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் திமுக தலைமை இழுத்துக் கொண்டு இருக்கிறது.

உங்களில் எத்தனை பேர் மிக வேகமாக இயங்கும் பிரவுசரான சபாரி யைப் பயன்படுத்தி வருகிறீர்கள். ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பிரவுசருக்கான புதிய தொகுப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இது சபாரி 4 பீட்டா என அழைக்கப்படுகிறது. நீங்கள் இதுவரை இந்த பிரவுசரைப் பயன்படுத்தவில்லை என்றால் இப்போது பயன்படுத்திப் பார்க்கலாம்.

முதலில் இந்த புதிய சபாரி தொகுப்பு மிக மிக பாஸ்ட். இதை இன்ஸ்டால் செய்து இயக்கிப் பார்த்த போது மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் வேகமாக இணையப் பக்கங்கள் இறக்கப்படுவதனைப் பார்த்தேன். அதே போல தகவலுக்கான பக்கங்கள் விரைவில் கிடைத்தன. இந்த புதிய பதிப்பு மிக நன்றாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. டேப்கள் அனைத்தும் ஸ்கிரீனின் மேல் பக்கத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மெனு பார் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களைக் காண அதிக இடம் கிடைக்கிறது.


முற்றிலும் புதியதாக இரண்டு அம்சங்களைச் சொல்லலாம். அவை Cover Flow மற்றும் Top Sites ஆகும். டாப் சைட்ஸ் மூலம் பல இணைய தளங்களை ஒரு சேரப் பார்க்கலாம். இவற்றை முழுத் திரையில் பார்க்கும் வகையிலும் செட் செய்திடலாம்.கவர் ப்ளோ ஐ ட்யூன்ஸ் போல செயல்படுகிறது. ஒவ்வொரு வெப் சைட்டாகப் பார்வையிட இது அனுமதிக்கிறது. ஆனால் இந்த இரண்டு வசதிகளும் பழைய கம்ப்யூட்டரில் செயல்படவில்லை. மற்றபடி அனைத்து வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளன. இதனை http://www.apple.com/safari என்ற முகவரியிலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: