எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்,
இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.
ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.
எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.
மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.
எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?
தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். "எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்." எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, "ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்."
இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.
மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.
சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.
.
25 வருட காலமாக தனது மகளை இருட்டறையில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், தனது மகனையும் அதே வழியில் குற்றம் புரியத் தூண்டிய குற்றச்சாட்டில் இத்தாலிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் வட தூரின் நகரைச் சேர்ந்த மைக்கேல் மொங்கெல்லி (64 வயது) மற்றும் அவரது மகனான கியுஸெப்பே ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைக்கல் மொங்கெல்லி என்ற இந்த நபர் தனது மகளான லோராவை, அவர் 9 வயது சிறுமியாக இருந்தது முதற்கொண்டு இருட்டறையில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது லோராவுக்கு 34 வயதாகும்.
அது மட்டுமல்லாமல் லோராவை பாலியல்வல்லுறவுக்குட்படுத்த தனது மகன் கியுஸெப்பேயையும் வழிநடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கியுஸெப்பே தனது சகோதரி லோராவை மட்டுமல்லாமல், 6 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட தனது சொந்தப் பிள்ளைகள் நால்வரையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
25 வருடங்களாக இருட்டறையில் சிறைப்பட்டிருந்த லோராவுக்கு மிக அத்தியாவசியமான சமயங்களில் மட்டும் (அதுவும் தனது தந்தையின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே) வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது.
அதேவேளை தனது தந்தையிடமிருந்து தப்பித்து தனது சகோதரரின் வீட்டில் தஞ்சமடைந்த அவரை, அவரது சகோதரரும் தனது தந்தை யின் வழியைப் பின்பற்றி அவர் மீது குற்றம் புரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சகோதரனின் வீட்டிலிருந்து தப்பித்து லோரா செய்த முறைப்பாட்டைய டுத்தே உண்மை அம்பலத்துக்கு வந்தது.
ஏற்கனவே 16 வருடங்களுக்கு முன்பு தந் தையின் பிடியிலிருந்து லோரா தப்பிச் சென்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போது, தனது மகள் மனநிலை பாதிக்கப்பட்ட வர் எனக் கூறி மொன்கெல்லி மகளை மீண் டும் அழைத்துச் சென்றுள்ளார்.
மொங்கெல்லியும் கியுஸெப்பேயும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள னர்.
8 மகன்மார் 2 மகள்மார் உட்பட 10 பிள்ளைகளின் தந்தை மொங்கெல்லி என்பது குறிப்பிடத்தக்கது. மொங்கெல்லின் மனைவி கதெரினாவும் லோராவைத் தவிர்ந்த ஏனைய பிள்ளைகளும் மொங்கெல்லி குற்றமற்றவர் என கூறியமை தமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது கணவர் லோராவை இருட்டறையில் சிறை வைத்தது உண்மை என்பதை ஏற்றுக் கொண்ட கதெரினா, தனது மகள் லோராவின் மனநிலை பாதிப்பு காரண மாகவே அவர் இவ்வாறு அடைத்து வைத்த தாகக் கூறினார்.
மேற்படி வழக்கு விவகாரம் தொடர்பில் ஆஜராகியுள்ள தலைமைச் சட்டத்தரணி பியார்டோ பொர்னோ விபரிக்கையில், மொங் கெல்லி தனது மகளை பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியமையை, தனது பாலியல் ரீதி யான ஓர் உரிமையாக கருதி வந்ததாகத் தெரிவித்தார்.
லோராவும் கியுஸெப்பேயின் 4 பிள்ளை களும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட் டுள்ளனர்.
உலகில் மிகவும் அச்சமூட்டும் பிசாசுத்தனமான தோற்றப்பாட்டை பிரதிபலிக்கும் புகைப்படங்களுக்கான போட்டியில், பிரித்தானிய புகைப்படம் ஒன்று வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நோர்த் பெர்விக் எனும் இடத்திலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றின் ஜன்னலூடாக கழுத்து மூடிய ஆடையை அணிந்தபடி ஒருவர் வெறித்துப் பார்க்கும் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
மேற்படி புகைப்படத்தில் செயற்கையாக தந்திர வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதைப் புகைப்பட நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர் சிவகரன். வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல நிலையில் வாழ்ந்தவர். இவரது மனைவி சிவகரன் சியாமளா (வயது 34). இவர்களுக்கு சிவகரன் சுவர்ணன் (வயது 12), துளசி (வயது 10), என்ற இரு மகன்களும் சிவகரன் புவிதாஜினி வயது 4 என்ற மகளும் உண்டு.
இந்த குடும்பம் இலங்கையில் ஏற்பட்டுள்ள போரை அடுத்து 1990இல் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தது. பின்னர் அங்கிருந்து முல்லைத்தீவு செல்லும் வழியில் விசுவமடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
இந்த நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு அகதியாக சிவகரன் குடும்பத்தை பிரிந்து இந்தியா வந்தார். அகதிகளை பரிசோதித்த போது சிவகரன் உள்ளிட்ட சிலர் மீது சந்தேகம் அடைந்த கியூ பிரிவு பொலிஸார் சிவகரன் உள்ளிட்ட சிலரை சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் திருச்சி நீதிமன்ற உத்தரவுப்படி சிவகரன் உள்ளிட்டோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் ஆனாலும், கியூ பிரிவு பொலிஸாரின் பரிந்துரைபடி இவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்பட்டன சிவகரன் உள்ளிட்டோர் பூந்தமல்லியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் தாக்குதல் காரணமாக,சிவகரனின் குடும்பம் முல்லைத்தீவில் உள்ள மாத்தளன் பகுதியில் அடைக்கலம் புகுந்தது.
இறுதியில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற எறிக ணைத் தாக்குதலில் சிவகரனின் மனைவி சிவகரன் சியாமளா, மகன்கள் சிவகரன் சுவர்ணன், சிவகரன் துளசி, மகள் சிவகரன் புவிதாஜினி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மனைவி மக்கள் அனைவரையும் இழந்து ஆதரவற்ற நிலையில், குடும்பத் தலைவன் என்ற முறையில் இறுதிச் சடங்கு களைக் கூட செய்ய முடியாத நிலையில் சிவகரன் பூந்தமல்லியில் ஒரு முகாமில் அடைக்கப்பட்டுள்ளது இதயம் உள்ள அனைவரையும் துயரத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.
நான் உயிருடன் இருந்தும் குடும்பத்தினரை காப்பாற்ற முடியாமல் போனேனே என்கிறார் சிவகரன் கண்ணீருடன்.
குடும்பத்தினரை இழந்து தவிக்கும் இது போன்ற சிவகரன்களின் குரல், தமிழ் உணர்வு வியாபாரத்தில் மூழ்கித் திளைக்கும் தமிழக அரசியல் வாதிகளின் காதில் விழுவது எப்போது. புத்திர சோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிவகரனின் பரிதவிப்பு, புத்திரபாசத்தில் மூழ்கிக்கிடக்கும் தமிழக தலைவர்களுக்கு புரிவது எப்போது என்பதே தமிழர்களின் கேள்வி.
ஒரேயொரு தடவை இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கே பலரும் அஞ்சி பின்வாங்குகின்ற சூழ்நிலையில், பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி சாரா ஹெஸெல்குரோவ் 17 இருதய அறுவை சிகிச்சைகளை துணிச்சலு டன் எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
இருதய நோயுடன் உரிய பிரசவ காலத்திற்கு 5 வாரங்கள் முன்னதாக சாரா பிறந்தபோது, அவர் 7 நாட்களுக்கு அதிகமாக உயிர் வாழும் சாத்தியமில்லை என்றே கருதப்பட்டது.
எனினும் மருத்துவர்களின் அயராத முயற்சியின் பயனாக தற்போது இயல்பு வாழ்க்கை வாழும் நிலைக்கு அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.
சாரா பிறந்து 3 மாத காலத்தில் அவரது இருதய துவாரத்தை அடைப்பதற்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தனது இரு வயதுக்குள் மட்டும் 10 இருதய அறுவை சிகிச்சைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக