நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.
2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.
3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.
4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..
5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..
6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?
வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடும் நிதி சிக்கலில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வேகனர் பதவியில் இருந்து விலகினார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலகின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெனரல் மோட்டார்ஸூம், இன்னொரு கார் கம்பெனியான கிரைஸ்லருக்கும் அமெரிக்க அரசிடம் இருந்து 17.4 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 87,000 கோடி ) ஏற்கனவே நிதி உதவியாக பெற்றிருக்கின்றன. இது போதாது என்று இன்னும் 5 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.25,000 கோடி ) கிரைஸ்லரும், 16.7 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.83,500 கோடி ) ஜெனரல் மோட்டார்ஸூம் கேட்கின்றன. இது குறித்து பாரக் ஒபாமா, சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசிடம் இருந்து மேலும் உதவி பெற வேண்டும் என்றால் அவைகள், தங்களது நிர்வாகத்தில் பல மாறுதல்களை செய்ய வேண்டியதிருக்கிறது என்றார். ஆனால் இன்னும் அந்த மாறுதல்களை அவைகள் செய்யவில்லை என்றும் நாங்கள் ஒரு வெற்றிகரமான ஆட்டோ இன்டஸ்டிரியை மீண்டும் உருவாக்க எண்ணியிருக்கிறோம் என்றும் சொன்னார் ஒபாமா. இவைகளுக்கு மேலும் நிதி உதவி அளிப்பது தொடர்பாக மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து அவர் தீவிரமாக பரிசீலித்தும் வருகிறார்.இதன் தொடர்ச்சியாக ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ரிக் வேகனரை அந்த பதவியில் இருந்து விலகுமாறு வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டது. அதனை ஏற்றுக்கொண்ட வேகனர் பதவி விலகி விட்டார்.56 வயதாகும் வேகனர், அந்த பதவியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்து வந்தவர். 1977 ம் ஆண்டில் இருந்தே ஜெனரல் மோட்டார்ஸில் பணியாற்றி வருபவர். கடும் நிதி சிக்கலில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ், 47,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவும், கிரைஸ்லர் 3,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன. மேலும் விற்பனையாகாமல் இருக்கும் பல மாடல்களை தயாரிக்காமல் நிறுத்தி வைக்கவும் இரு நிறுவனங்களும் திட்டமிட்டிருக்கின்றன. ஊழியர்கள் வேலை நீக்கம் 2009 இறுதிக்கும் இருக்கும் என்றும், அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டால், அதுதான் அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத மிகப்பெரிய ஜாப்கட் ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஜெனரல் மோட்டார்ஸூக்கு இப்போது இருக்கும் 47 தொழிற்சாலையை 2012 க்குள் 33 ஆக குறைத்து விடவும் அது தீர்மானித்திருக்கிறது. மேலும் அது தயாரித்து வரும் 8 மாடல் கார்களை இனிமேல் 4 ஆகவும் குறைக்கப்போகிறது, செவர்லே, புய்க், கெடில்லாக் மற்றும் ஜிஎம்சி ஆகிய நான்கு மாடல் கார்களை மட்டுமே இனிமேல் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிக்க இருக்கிறது.மக்களை திசை திருப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஈழப்பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கலைஞர், திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தேர்தலில் மக்களை திசைதிருப்புவதற்காக ஈழப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன என்றும் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை சரி என்று ஏற்றுக் கொண்ட திரு கொள்ளிமலை குப்பு கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பிய "கட் கட" தந்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்!
அப்பட்டமான உண்மை!
தாங்களும் அதையே பின் பற்றுவது
வேதனையான உண்மை!
படிக்காத மக்களில் பலருக்கு இந்த நாடகங்கள் தெரியவில்லையே தவிர
மற்றவர்களுக்கு நன்கு புலப்படுகிறது.
கே கே
மக்களை திசை திருப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஈழப்பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கலைஞர், திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தேர்தலில் மக்களை திசைதிருப்புவதற்காக ஈழப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன என்றும் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை சரி என்று ஏற்றுக் கொண்ட திரு கொள்ளிமலை குப்பு கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பிய "கட் கட" தந்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்!
அப்பட்டமான உண்மை!
தாங்களும் அதையே பின் பற்றுவது
வேதனையான உண்மை!
படிக்காத மக்களில் பலருக்கு இந்த நாடகங்கள் தெரியவில்லையே தவிர
மற்றவர்களுக்கு நன்கு புலப்படுகிறது.
கே கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக