
நோர்வேயிலுள்ள சீன தூதரம் முன்பாக நோர்வேவாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா அரசின் போர் பற்றிய விவாதத்திற்கு சீனாவும், ரஸ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்து சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சீனா ஒரு பெளத்த நாடு என்ற அடிப்படையில் இந்தியாவிற்குப் போட்டியாக சிறீலங்கா அரசுக்கு படைத்துறை, மற்றும் பாரிய நிதியுதவிகளை வழங்கி வருகின்றமையும் ஏற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, அதிகளவில் தமிழ் மக்கள் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் கீழே:
நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
காலம்: 31.03.2009 செவ்வாய் பிற்பகல் 2மணி முதல் 3மணி வரை
இடம்: சீன தூதரகம் முன்பாக (Tuengen Alle 2B, 0244 Oslo)
• ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் (UN Security Council) தமிழீழ மக்களின் நிலைமை தொடர்பான விவாதங்களை புறக்கணிக்காது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரியும்,
• சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திடுமாறும்,
• சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறும்,
சீன அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் முகமாக இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பு:
Tuengen Alle 2B எனும் முகவரியில் சீனத் தூதரகம் அமைந்துள்ளது. Frognerseteren ஐ நோக்கிக்செல்லும் 1ஆம் இலக்க நிலக்கீழ் தொடரூந்து (T-bane) மூலம் Vinderen தரிப்பிடத்தில் இறங்குவதன் மூலம் சீனத் தூதரகம் அமைந்துள்ள Tuengen Alle 2Bஐ சென்றடையலாம்.
(T-bane 1 mot [Frognerseteren ], Gå av på Vinderen stasjon. Gangvei fra Vinderen til Tuengen allé 2B ca . 4 minutter)
சென்னை: திமுகவில் சீட் இல்லாமல் விடப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவுதான் மனித நேய மக்கள் கட்சி. இக்கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஏகப்பட்ட சீட் தர வேண்டும் என இக்கட்சி கோரி வந்தது. ஒரு சீட் தந்தால் ஏற்க மாட்டோம் எனவும் கூறியிருந்தது.ஆனால்
குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர்!!60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கழிப்பறை கட்டியதில் தான் முன்னேறி இருக்கிறார்கள். மற்ற துறைகளில் தலித்களை விட கல்வி வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மிக மிக பின்தங்கி உள்ளனர் என்று சச்சார் கமிட்டி கூறியது. இதற்கு காரணம் நம் சமுதாயத் தலைவர்களின் தகுதியற்ற தலைமைத்தனமும், நான் என்ற கர்வம், தலைக்கனம் என்ற பிரண்ட் லைன் பத்திரிக்கை செய்தியை மறந்து விட
உடல் கருக்கும் தீ சுட
மெழுகு உருகும்
திரை கம்பத்தில் ஏற
தேசியக் கூச்சல் ஜுவாலைவிட்ட மெழுகாய்...
மலர்களைக் கொய்தவன் காசு பண்ண
தமிழீழ விடுதலை மனத்தில்
வித்துடலெனச் சொரியும் பூக்கள்
வன்னியில் குவளை ஏந்தும் சா பிணம்
குற்றுயிரைக் கொல்லப்படும்வரை கையிற் பிடிக்க!
தெருக்கள்தோறும்
புலிக்கொடி ஏந்தி
மண்டையில் புலித் தொப்பி வைத்து
மனமெல்லாம் கொலைக்கு இசைந்து
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என...

பிணங்களின் மீது உரிமைகள்
கொடிகளைக் கட்ட
உயிருள்ளோர் செத்தாக வேண்டும்
இனி,அடுத்தவர் எவர்?
அள்ளிக்கொண்டு
அரசியல் செய்யத் தேசியத் தலைவர்
அரு மருந்துண்ணார் அவர்
அடுத்தவர் குழந்தைகளுக்குச் சைனட்டு
தேசமெனுங் கொடிய மனம்
தன் வீட்டுத் திண்ணையுள் வீழ்ந்த
பிணங்கள் எண்ணிப் பட்டுவாடா
பாயின்றித் தரையில் வீழ்த்தப்பட்ட தலைகள்
"தமிழீழத்தின் விடியலுக்கு" முந்திய வித்து
வணங்காத மண்ணும்
தமிழீழம் தாகம் என்பதாய்
கப்பலோடும் எவரெவர் பெயரிலோ

மண் வணங்குகிறதோ இல்லையோ
நீ வணங்குகிறாய்
கொலைகளுக்குத் தியாகமுங் கற்பிக்கின்றாய்
கப்பல் கட்டுவதுமட்டும் மக்களைக் காப்பதில்லை
கொலைக்குமுன் வைத்திருக்கும் உயிர்களை விட்டுவிடு
மக்களைக் காப்பதென்று புலிக்கதை சொல்ல
இனியும் நடேசன்கள் தேவையா?
ப.வி.ஸ்ரீரங்கன்
29.03.09
மெழுகு உருகும்
திரை கம்பத்தில் ஏற
தேசியக் கூச்சல் ஜுவாலைவிட்ட மெழுகாய்...
மலர்களைக் கொய்தவன் காசு பண்ண
தமிழீழ விடுதலை மனத்தில்
வித்துடலெனச் சொரியும் பூக்கள்
வன்னியில் குவளை ஏந்தும் சா பிணம்
குற்றுயிரைக் கொல்லப்படும்வரை கையிற் பிடிக்க!
தெருக்கள்தோறும்
புலிக்கொடி ஏந்தி
மண்டையில் புலித் தொப்பி வைத்து
மனமெல்லாம் கொலைக்கு இசைந்து
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என...

பிணங்களின் மீது உரிமைகள்
கொடிகளைக் கட்ட
உயிருள்ளோர் செத்தாக வேண்டும்
இனி,அடுத்தவர் எவர்?
அள்ளிக்கொண்டு
அரசியல் செய்யத் தேசியத் தலைவர்
அரு மருந்துண்ணார் அவர்
அடுத்தவர் குழந்தைகளுக்குச் சைனட்டு
தேசமெனுங் கொடிய மனம்
தன் வீட்டுத் திண்ணையுள் வீழ்ந்த
பிணங்கள் எண்ணிப் பட்டுவாடா
பாயின்றித் தரையில் வீழ்த்தப்பட்ட தலைகள்
"தமிழீழத்தின் விடியலுக்கு" முந்திய வித்து
வணங்காத மண்ணும்
தமிழீழம் தாகம் என்பதாய்
கப்பலோடும் எவரெவர் பெயரிலோ

மண் வணங்குகிறதோ இல்லையோ
நீ வணங்குகிறாய்
கொலைகளுக்குத் தியாகமுங் கற்பிக்கின்றாய்
கப்பல் கட்டுவதுமட்டும் மக்களைக் காப்பதில்லை
கொலைக்குமுன் வைத்திருக்கும் உயிர்களை விட்டுவிடு
மக்களைக் காப்பதென்று புலிக்கதை சொல்ல
இனியும் நடேசன்கள் தேவையா?
ப.வி.ஸ்ரீரங்கன்
29.03.09

தமிழகத்தில் விஜயகாந்த் தன்னை நம்பியே பல இடங்களீல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அந்த இடங்களீல் பாரதீய ஜனதா கட்சியுடனும், காங்கிரசுடனும் மோத இருக்கிறார். இந்த தேர்தல், மக்களவைக்கான தேர்தல். டில்லியில் யார் ஆட்சி அமைப்பது பற்றிய தேர்தல். இந்த தேர்தலில் விஜயகாந்த் யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்பார்? தமிழக சட்டசபை தேர்தல் என்றாலும், அவர் தன்னை முதல்வராக முன்னிறுத்தி ஓட்டு கேட்கலாம். மற்றவர்கள் விஜயகாந்தை உசுப்பி விட்டு, உசுப்பி விட்டு தன்னை ஒரு எம்.ஜி.ஆராகவே நினைத்து கொண்டு விட்டார் என்றும் விமர்சிக்கிறார்கள்.
இந்த தேர்தலில் தமிழகத்தில், பாஜக மற்றும் பி.எஸ்.பி நிலைப்பாடுகள் என்ன?
தற்போது, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் எதிராக பிரச்சாரம் செய்து ஒட்டு வாங்கும், அதிமுக, மதிமுக, பாமக, விஜயகாந்த், கம்யூனிஸ்ட்கள், தேர்தலுக்கு பிறகு, காங்கிரசையோ அல்லது, ப்ஜேபியையோ ஆதரித்து, ஆட்சியில் பங்கு பெற்றால், அந்த நிலைமை, மக்களை ஏமாற்றுவது போல ஆகாதா?
இந்த் தேர்தலில், விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, உள் நாட்டு பாதுகாப்பு போன்ற அத்தியாவசமான பிரச்சனைகளை முன்னிறுத்துவார்களா? வருண் காந்தி விவகாரம் ஒரு டிராமாவா?
மேற்கண்ட வினாக்களுக்கு, தொலைகாட்சிகளில் அரசியலை அலசும், பிரப்ல பத்திரிகையாளர் திரு டி. சிகாமணியை வெற்றிகுரலுக்காக பேட்டி கண்டேன். அந்த பேட்டியை கீழே உள்ள பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். ( இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், ஆடியோவை டவுன்லோடு செய்து mp3 பிளெய்ரில் கேட்கவும்)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857382
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக