சில சினிமா செய்திகள்
எச்சரிக்கை: அரசியல் கலந்திருக்கலாம்
1. சரத்குமார் இன்று மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். நெல்லை தொகுதியில் தான் போட்டியிடப்போவதாகவும், சிவகங்கை தொகுதியில் ராதிகாசரத்குமார் போட்டியிடப்போவதாகவு தெரிவித்துள்ளார்.
2. நான் போட்டியிடுவதை யாரும் தடுக்க முடியாது. நான் போட்டியிட தேர்ந்தெடுத்துள்ள 2,3 தொகுதிகளில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். நான் இன்னும் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால் முடிவு செய்தால் மக்களுக்கு நலன் பயக்கும் கட்சியுடன்தான் கூட்டணியை ஏற்படுத்துவேன். எந்த கட்சியும் இந்த கார்த்திக்கை விலை கொடுத்து வாங்க முடியாது. நமக்கு சுய மரியாதை முக்கியம். தன் மானம் முக்கியம். இங்கு வாய்ச்சொல் பேசும் வீரர்கள் டெல்லிக்கு சென்று கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் மக்களுக்கு நலன் பயக்கும் கூட்டணியைத்தான் ஏற்படுத்துவேன்.
இங்கு இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணா விரதம் இருக்கிறார்கள். ஆனால் நான் அப்படிப் பட்டவன் அல்ல. இலங்கை தமிழருக்கு பிரச்சினை என்றால் எல்லையில் ராணுவத்தினருடனும், போலீசாருடனும் துப்பாக்கி ஏந்தி நிற்க கூடியவன் நான். நான் தமிழக மக்களுக் காக தமிழக மக்களின் வாழ்வுக்காக பாடுபடுவேன். - நடிகர் கார்த்திக்
3. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் மக்களை உடனடியாக சென்றடைகின்றன.
ஆந்திர மக்களுக்காக அவர் கொண்டு வந்த ஆரோக்கியஸ்ரீ திட்டம் மகத்தானது. இதன்மூலம் ஏழை-நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் சிகிச்சைக்கு பணம் செலவானாலும் அதை மாநில அரசு கொடுத்து வருகிறது.
இதனால் மக்கள் அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த தேர்தலில் நான் காங்கிரசுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன். விரைவில் இதற்கான தேதியை அறிவிப்பேன். - நடிகை ஜீவிதா

சவுதி அரேபியாவின் தம்மாமில் நடைபெற்ற நல்லெண்ண ஓட்டத்தில் தமிழக இளைஞர்கள் பங்கேற்பு : சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்திய அரசு ஆதரவுடன் தம்மாம் நகரில் வருடந்தோறும் ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவும் வண்ணம் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டுக்கான ஓட்டப் போட்டிகள் தம்மாம் நகரில் 19.03.2009 வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான நன்கொடை நுழைவுக் கட்டணம் 50 சவுதி ரியால். இப்போட்டிகள் 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூர அளவுகள் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூரைச் சேர்ந்த எல்.காஜா முஹைதீன் ஐந்து கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று 25 நிமிடங்களில் கடந்து பதக்கம் பெற்றார். இவருடன் தமிழக மற்றும் இந்திய இளைஞர்கள் பங்கேற்றனர். - முதுவை ஹிதாயத்
அருந்ததி படத்தின் வெற்றியைப் பார்த்து தெலுங்கு ஹீரோக்கள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள். தமிழிலும் படத்தின் ஓபனிங் விநியோகஸ்தர்களுக்கு திருப்தியை அளித்திருக்கிறது.
அருந்ததியில் நடித்த பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் ஆந்திராவில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கோடியை தொட்டிருக்கிறது அவரது சம்பளம். அது மட்டுமா...? வேட்டைக்காரனில் ஒப்பந்தமாகியிருக்கும் அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க கரன்ஸியை கொட்ட தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த ராக்கெட் வேக உயர்வைப் பார்த்து மற்ற ஹீரோயின்களும் அருந்ததி போன்ற ஹீரோயின் ஓரியண்ட் சப்ஜெக்டில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் கோடி ராமகிருஷ்ணாவின் அடுத்தப் படத்தில் நடிக்க நடிகைகளுக்குள் போட்டா போட்டி. அருந்ததியை இயக்கியவரல்லவா?
கோடி ராமகிருஷ்ணாவின் அடுத்தப் படத்தை எம்.எஸ்.ராஜு தயாரிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முந்தையப் படமான தேவி உலக ஓட்டம் ஓடியது. போட்டிக்கு கேட்கவா வேண்டும்?
இந்த ரேஸில் மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி நயன்தாரா முதலிடத்தை பிடித்திருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா தமிழ்நாட்டுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் படத்தை ஒரே நேரத்தில் எடுக்கலாம். நயன்தாரா மற்ற நடிகைகளை முந்திக் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணமாம்.
டூ பீஸில் நடித்த நயன் அம்மன் போஸில்... ம், இந்த மாற்றமும் நல்லாத்தான் இருக்கு.
தமிழில் இப்போதுதான் பெரிய நடிகர்களின் பட்டியலில் சேர ஆரம்பித்திருக்கும் ஆர்யா, தெலுங்கிலும் இப்போது தனது இன்னிங்கஸைத் துவக்குகிறார். ஆனால் நாயகனாக அல்ல, பக்கா வில்லனாக.
தமிழில் அவர் நடித்த நான் கடவுள் தெலுங்கில் நேனு தேவுட்னி என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் ஆர்யாவின் தோற்றம், சண்டைக்காட்சிகளில் அவர் காட்டிய அசத்தல் வேகம் போன்றவை தெலுங்குப் படத் தயாரிப்பாளர்களின் பார்வையை இவர் பக்கம் திருப்பியுள்ளது.
விளைவு, நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புக்கள் குவிகிறதாம் ஆர்யாவுக்கு. ஆனால் ஹீரோவாக அல்ல, வில்லனாக.
இவற்றில் ஒன்று அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, குணசேகர் இயக்கும் புதிய படம். இதில் பிரதான வில்லன் ஆர்யாதான்.
'நான் கடவுள் படத்தில் ஆர்யா நடிப்பு அருமை. அதைப்பார்த்துதான் அவரை ஒப்பந்தம் செய்தேன். இதில் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு சமமாக, வில்லன் வேடமும் இருக்கும். இருவருக்கும் நடிப்பில் போட்டி நிலவும். படத்தின் முன்னேற்பாடு பணிகள் 8 மாதமாக நடந்தது. நேற்றுதான் ஷூட்டிங் தொடங்கினேன். ஆகஸ்டில் முடிகிறது. ஆர்யாவும் இன்னும் சில தினங்களில் ஷூட்டிங்குக்கு வந்துவிடுவார், என்றார் குணசேகர்.
ஆர்யாவுக்கும் இதில் ஏக குஷி. எந்த மொழி, ஹீரோவா வில்லனான்னு நான் பார்க்க மாட்டேன். நல்ல கேரக்டர் இருந்தா போதும். அப்படி ஒரு நடிகனா வரவே ஆசைப்படறேன் என்கிறார் ஆர்யா.
குட்... இப்படித்தான் சமர்த்தா இருக்கணும்!
பன்ச் டயலாக் 'வியாதி' இப்போது மும்தாஜையும் தொற்றி விட்டது. ராஜாதி ராஜா படத்தில் அவரை பன்ச் டயலாக் பேச விட்டு அதகளம் செய்திருக்கிறார்களாம்.
வசனத்தை வாய் வலிக்கப் பேசுவது அந்தக் காலத்து ஸ்டைல். ஆனால் எதுகை மோனையோடு, காற்றில் கையையும், காலையும் விஸ்க் விஸ்க் என்று வீசி, பேக்ரவுண்ட் சவுண்ட் எபக்டுடன் பன்ச் வைத்துப் பேசுவது இந்தக் காலத்து ஸ்டைல்.
பன்ச் டயலாக்கை கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் இன்று காதுகள் 'பங்சர்' ஆகும் அளவுக்கு பன்ச் டயலாக்குகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது.
வழக்கமாக ஹீரோக்கள்தான் பன்ச் டயலாக் பேசுவார்கள். தெலுங்கில் ஹீரோயின்களும் கூட பேசுகிறார்கள். முதல் முறையாக தமிழில் மும்தாஜ் பன்ச் டயலாக் பேசியுள்ளாராம்.
ராஜாதிராஜா படத்தில் சைதை சைலஜா என்ற கேரக்டரில் வருகிறார் மும்தாஜ். இது வி்ல்லி கேரக்டர். பிறகு வசனத்தில் பன்ச் வைக்காவிட்டால் எப்படி..
தமிழ்ல்ல சொன்னா குத்து, இங்கிலீஷ்ல சொன்னா டெத்து என்பது உள்பட ஏகப்பட்ட பன்ச் டயலாக்குகளை படு கேஷுவலாக பேசி அசத்தியுள்ளாராம் மும்தாஜ்.
படத்தில் இவரது தங்கை வேடத்தில் வருகிறார் மீனாட்சி. நாயகன் ராகவா லாரன்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக