ம.தி.மு.க.விலிருந்து விலகி மு.கண்ணப்பன் தி.மு.க.வில் சேர்ந்தபோதுதான் கலைஞருக்கு 1976 ஆம் ஆண்டின் நெருக்கடி காலக் கொடுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்திருக்கிறது. "நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது இந்தியாவிலே முதன்முதலாகச் செயற்குழுவைக் கூட்டி நெருக்கடி நிலையைக் கண்டித்து அதைத் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஒரே அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்... நாம் ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நெருக்கடிக்காலச் சட்டத்தை மிசா கொடுமையை எதிர்க்கிறோம் என்று பிரகடனப்படுத்திய காலக் கட்டம் அது" ('முரசொலி' மார்ச் 24) - என்று கலைஞர் மலரும் நினைவுகளை அசை போட்டிருக்கிறார்.
இலங்கை தமிழர்களின் வேதனையை நான் அலட்சியப்படுத்தியது இல்லை; ராமதாசுக்கு கருணாநிதி பதில் : இறையாண்மையை காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை அலட்சியப்படுத்த நானும் சரி- தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை' என்று டாக்டர் ராமதாசுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது : கேள்வி : "இறையாண்மை'' என்ற சொல்லைக் கூறி- இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையை இந்திய அரசு தட்டிக் கழிப்பதைப் போல- இப்போது அந்த இறையாண்மை என்ற சொல்லை தமிழக முதல்-அமைச்சரும் சொல்லத் தொடங்கி, அந்த பிரச்சினையை கைகழுவி விட்டார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே? பதில் : இறையாண்மை, ஒருமைப்பாடு இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத் தான்- அவற்றுக்கு மாறாக செயல்பட்டாலோ, பேசினாலோ, எழுதினாலோ சட்டம் கொட்டும் என்று ஒரு நிலை உருவாக்கப்பட்டிருப்பதால் தான் அறிஞர் அண்ணாவே, "வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்'' என்ற உவமையைச் சொல்லி- திராவிட நாடு பிரிவினைக்கே முற்றுப்புள்ளி வைத்தார் என்பது வரலாறு. பிரிவினையைக் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று அண்ணா அன்றைக்கு சொன்னதின் அடிப்படையிலே தான் தமிழகம் வளம் பெறவும்- வடமாநிலங்களோடு போட்டி போட்டுக்கொண்டு எல்லா துறையிலும் முன்னேறவும்- டெல்லி அரசோடு விவாதித்து மாநிலங்களின் தேவைகளை இன்றைக்கு பெற்று வருவதுடன் மாநில சுயாட்சிக்கும் உரத்த குரல் எழுப்பி வருகிறோம். இறையாண்மையைக் காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை மறுக்கவோ, மறைக்கவோ, அலட்சியப்படுத்தவோ...
இலங்கையில் அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து நீங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி எழுதிய கடிதம் என்னை மிகவும் பாதித்தது. இலங்கையில் நடந்து வரும் சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் துரதிருஷ்ட வசமாக தங்கள் உயிர்களை இழந்து வருவது வேதனையை அளிப்பதா கவும், மேலும் சண்டைப்பகுதிக்கு வெளியில் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்தும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
ஈழத் தமிழர் பிரச்சினை: மருத்துவர் ராமதாசுக்குப் பதிலடி!-முதல்வர் கலைஞரின் கருத்து : இறையாண்மை என்று சொல்லி தமிழக முதல்வரும் இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவி விட்டார் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், வேண்டுமானால் ஜெயலலிதா தலைமையில் ராமதாஸ் இலங்கை மீது படையெடுத்துச் செல்லட்டுமே என்று காட்டமாக பதிலளித்துள்ளார். இலங்கை மீது இதோ படையெடுப்பு என்ற தலைப்பில் இன்றைய முரசொலி நாளிதழ் கேள்வி பதிலில் முதல்வர் கலைஞர் எழுதியிருப்பது இங்கே தரப்படுகிறது :
சிவகங்கை அருகே 23 வயது இளம் பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்த அதிசயம் : சிவகங்கை மாவட்டம், சாளூரைச் சேர்ந்தவர் இளநீர் வியாபாரி கருப்பையா (80). இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மேலூர் அருகே உள்ள கீழையூரில் வசிக்கும் பாண்டிச் செல்வி (23) என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதற்காக பாண்டிசெல்விக்கு கருப்பையா 15 பவுன் நகைகள் வழங்கியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட கருப்பையாவின் மகன்கள், மகள்கள் அவரிடம் தகறாறு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக