http://eegaraionline.blogspot.com/2009/03/blog-post_27.html
புண் ஆற்றும் ஆற்றல் தேனுக்கு உண்டு.
புண்ணில் கட்டு போடும் போது தேன் வைத்து கட்டுவது vancomycin என்ற மருந்திற்கு ஈடானது என்று ஆராய்ச்சி முடிவுகள் இருக்கின்றன
நான் பல ஆண்டுகளாக புண்களுக்கு கட்டுப்போடும் போது தேன் பயன்படுத்தி வருகிறேன். பிற இராசாயண மருந்துகளை விட சிறப்பாகவே உள்ளது.
ஆதாரம் 1 : J Appl Microbiol. 2002;93(5):857-63.
The sensitivity to honey of Gram-positive cocci of clinical significance isolated from wounds.
Cooper RA, Molan PC, Harding KG.
Centre for Biomedical Sciences, School of Applied Sciences, University of Wales Institute Cardiff, Llandaff Campus, Cardiff, Wales. rcooper@uwic.ac.uk
ஆதாரம் 2 : Support Care Cancer. 2006 Jan;14(1):91-7. Epub 2005 Aug 2.
Simon A, Sofka K, Wiszniewsky G, Blaser G, Bode U, Fleischhack G.
Department of Pediatric Hematology and Oncology, Children’s Hospital, University of Bonn, Adenauerallee 119, 53113 Bonn, Germany. asimon@ukb.uni-bonn.de
–
குழந்தைகள் விளையாடும் கீழே விழுந்து சிராய்ப்பு ஏற்பட்டால் இரசாயண மருந்துகள் (உதாரணம் டெட்டால், சாவ்லான்) பயன்படுத்துவதை விட தேன் பயன்படுத்துவது சிறந்தது
No tags for this post.Related posts
- No related posts.
இந்த வலைத்தளமும் இந்நிகழ்வை வலியுறுத்த இன்று விளக்கை அணைத்து இருண்டு விட்டது. ;-)
மற்றொரு நடிகை, கண்களால் கவர்ச்சி சுனாமியை ஏற்படுத்தி ஆயிரக்கனக்கான ஆண்களை தன் வசப்படுத்திய சில்க் ஸ்மிதா பற்றிய ஒரு சில நினைவுகள். பொன்மேனி உருகுதே" பாட்டை ரசித்து பார்க்கும் அளவிற்கு எனக்கு அப்போது வயது இல்லை என்றாலுமே நான் ரசித்து பார்த்த ஒரு பாடல், இப்போது அந்த பாடலை திருப்பி பார்த்தால் அதில் கவர்ச்சி என்று எதுவுமே இல்லை.. கலை மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது. அப்படி ஒரு தெளிவான பார்வை இப்போது இருக்க காரணம் இப்போதைய நடிகைகளால் திணிக்கப்படும் தேவையற்ற கவர்ச்சி.
சரி விஷயத்திற்கு வருவோம், நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். நடிகை அனுராதா இவரை பற்றி கூறும் போது எத்தனை ஆயிரம் பேர் அவளின் உடலை பார்த்து ரசித்தார்கள், ஆனால் அந்த உடல் ஆஸ்பித்திரியில் ஆதரவற்று தனிசடலமாக ஈ'க்கள் மொய்க்க கிடந்தது. பார்க்கவே வேதனையாக இருந்தது, சகிக்காமல் விசிறி எடுத்து விசிறியவாறு இருந்தேன். என்றார்.
இது தான் வாழ்க்கை, ஏனோ ஒரு சில தினங்கள் சில்க் ஸ்மிதாவின் நினைவிலேயே நான் இருந்தேன்.. மரணம் என்பது பலருக்கு பேசக்கூடாத சங்கடமான, அபசகுனமான ஒரு விஷயம் தான் என்றாலும் எல்லோருக்கும் நடக்கவிருக்கும் உண்மை தானே.
மரணத்தை பற்றி பேசுவதில் தவறொன்றுமில்லை. நமக்கு தெரிந்து நடக்கலாம்.. தெரியாமலும் நடக்கலாம். ஆனால் நடந்தே தீரும் என்பது எழுதப்பட்டது. வேறு எந்த விஷயத்தையையும் நம்மால் நடந்தே தீரும் என்று சொல்லிவிட முடியாது. மரணத்தை தவிரத்து.
சரி இப்போது என்ன அதற்கு என்று யோசிக்க ஆரம்பித்தவர்களுக்காக சொல்ல வருவது , உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை நாம் பெற வேண்டும். மண்ணுக்குள், தீயிக்குள் போகும் இந்த உடலின் உறுப்புகளை தயவு செய்து தானம் செய்யுங்கள், கண் தானம் பற்றி முன்னரே பதிவிட்டு இருக்கிறேன்.
கண்தானம் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருந்தாலும், உடல் உறுப்பு தானமும் அதை போலவே மிகவும் முக்கியமான ஒன்று. அதற்கு எடுத்துக்காட்டாக சமீபகாலமாக விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் உடல் உறுப்புகள் உடனனுக்குடன் மாற்றப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு சிலரின் உயிர்கள் காப்பற்றப்பட்டன. எத்தனை உன்னதமான ஒரு செயல் என்பது அந்த உயிர் பெற்றவர்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது.
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம், மண்ணுக்கு போகும் உடலின் மேல் ஆசை எதையும் வைக்காமல் உடல் உறுப்பு தானம் செய்வோம்.
அணில் குட்டி அனிதா:- ஓ செய்துடலாமே. .கவி'கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம். .சரியா.. கவிக்கிட்ட என்னவெல்லாம் எடுக்க முடியும்னு பாக்கலாம்...
Eyes - பகல்ல பசுமாடு தெரியாது இருந்தாலும் ஒகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..ஒன்னும் தெரியாததற்கு இதை வச்சி சமாளிக்கலாம்
Lungs -ஒகே
Liver - டபுல் ஒகே
Kidneys - ட்ரிபிள் ஒகே
Heart - :)) ஹா ஹா ஹா.. அது தேறாது.. அதை மட்டும் எடுத்தா கவி மாதிரி ஆயிடுவீங்க சோ வேண்டாம்.. எஸ்கியூசுடு....
இது தவிர...
Brain - ஹி ஹி..அது இருக்கவங்க கிட்ட தானே எடுக்கமுடியும்.. :)))
Hands & Legs : -இந்த ரெண்டு ஐடம் மட்டும் உயிரோடு இருக்கும் போதே அடிச்சி ஒடச்சி எடுக்கவேண்டியது... சோ.. நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.. எப்பன்னு சொல்லிட்டீங்கன்னா.. விடியோ கேம் மோட நான் ரெடி... :))))))
பீட்டர் தாத்ஸ் :-
1. We cannot live only for ourselves. A thousand fibers connect us with our fellow men.
2. Don't think of organ donations as giving up part of yourself to keep a total stranger alive. It's really a total stranger giving up almost all of themselves to keep part of you alive.
3. Don't take your organs to heaven with you. Heaven knows we need them here.
4. Be a blood and organ donor. All it costs is a little love.
எல்லாத்துக்கும் முந்திக்கொள்ளும் வழக்கப்படி இந்த பூமி நேரத்துக்கும் முந்திக்கிட்டோம். மேலும் எங்களுக்கு இப்போ 'டே லைட் சேவிங்ஸ்' இருப்பதால் இன்னும் ஒரு மணி நேரம் முன்பே பூமி நேரத்தைக் கடைப்பிடிச்சு எங்க பங்குக்குப் புவியைக் காப்பாத்தியாச்சு.
நம்ம கோகிதான் இருட்டுலே என்னமோ ஏதோன்னு பயந்துக்கிட்டு அப்பா மடிமேல் ஏறிப் படுத்துக் குறட்டைவிட்டு அப்படி ஒரு தூக்கம்.
ஏதோ நம்மால் ஆனது...இல்லீங்களா??
எங்க கடமையை ஆத்தியாச்சு. நீங்களும் ஆத்துங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக