விஜய்காந்த்..மக்களுடன்தான் கூட்டணி..என்று சொன்னதன் மூலம்...அவர்..தி.மு.க.,கூட்டணியிலோ..அ.தி.மு.க., கூட்டணியிலோ சேரப்போவதில்லை என்பதைக் கூறிவிட்டார்.மேலும்..நான் சொல்லும் நபருக்கு வாக்களியுங்கள் என்றும் கூறுகிறார்.
அப்படியெனில்...வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிடாது என பொருள் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட முடிவை அவர் எடுத்ததால்..யாருக்குப் பயன்?
கண்டிப்பாக..தி.மு.க.,கூட்டணிக்குத்தான்.ஏனெனில்..சாதாரணமாக விஜய்காந்த்திற்கு விழும் வாக்குகள்..அ.தி.மு.க.விற்கு விழவேண்டிய வாக்குகள்...என அரசியல் வட்டத்தில் கூறுவதுண்டு.மேலும்..பா.ம.க.விற்கும்..விஜய்காந்திற்கும் என்றும் ஒத்துப்போகாது..ஆகவே விஜய்காந்த் வாங்கும் வாக்குகளில் கணிசமானவை பா.ம.க.வாக்குகளாகவும் இருக்கக்கூடும்.
இநிலையில் பா.ம.க.எடுக்கும் முடிவு முக்கியமானது.இச் சந்தர்ப்பத்தில்..பா.ம.க., தி.மு.க.கூட்டணியில் இருந்தால் தான்..சில தொகுதிகளில் ஆவது வெற்றி பெறலாம். இல்லையேல் அதன் கணக்கு பூஜ்யமாகத்தான் இருக்கும்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு..10000 முதல் 15000 வாக்குகள் வரை விஜய்காந்த் வாங்குவார் எனில்...ஒரு பாராளுமன்ற தொகுதியில் அவரால் கிட்டத்தட்ட 90000 வாக்குகள் வரை வாங்கமுடியும்.இது பல தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம்.முக்கியமாக பா.ம.க., போட்டியிடும் இடங்களில் அதன் வேட்பாளர்களை இது பாதிக்கும்.
விஜய்காந்தின்..இந்த முடிவு..அவருக்கும் பயன் தராது..அவர் சுட்டிக்காட்டி வாக்களிக்க சொல்லப் போகும் வேட்பாளருக்கும் பயன் தராது. அவரது கட்சிக்கு இருக்கும் உண்மையான ஆதரவை இது தெரிவிக்கும்.
இது ஒரு மாநிலக் கட்சிக்கு நல்லதல்ல என்றே தோன்றுகிறது. சட்டசபை தேர்தல் எனில் இம்முடிவை வரவேற்கலாம்.
இது நாடாளுமன்ற தேர்தல்...விஜய்காந்த் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

அமெரிக்காவின் வடமாநிலமான மோன்டானாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 16 பயணிகள் கொல்லப் பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பட்டே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கும் போது அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் விமானம் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆகாய சுற்றுலா சென்ற விமானமாக இது இருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது.
பெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கார்கோ விமானம் ஒன்று டோக்கியோ அருகே நொறுங்கி விழுந்தது. அதில் பயணித்த இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் குவான்கொள விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு இந்த விமானம் வந்து கொண்டிருந்த போது நாரிடாவில் வீசிய வேகமான காற்றால் இந்த விமானம் நொறுங்கி விழுந்து தீபிடித்ததாகவும், தீயை அணைக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவைச் சார்ந்த விமான ஓட்டியும், துணை ஓட்டியும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக உறுதி செய்யப் பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக