செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23


19 ஸ்டெப்ஸ் படத்துக்காக களரி சண்டையைக் கற்றுக் கொள்ளப் போகிறாராம் ஆசின்.

இந்தியில் பிசியாகி விட்ட ஆசின் தற்போது சல்மான்கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அஜய் தேவ்கனுடனும் நடிக்கப் போகிறார்.

இதைத் தொடர்ந்து பரத் பாலா இயக்கத்தில் புதிய 19 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒரே நேரத்தில் ஆங்கிலம், தமிழ், ஜப்பான் ஆகிய மொழிகளில் உருவாக்குகின்றனர்.

இப்படத்தில் கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஜப்பான் நாயகன் ஒருவரும் படத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஆசின்.

கதைப்படி களரி தெரிந்த நாயகியாக வருகிறார் ஆசின். ஆனால் உண்மையில் களரி என்று எழுதிக் காட்டினால் படிக்க மட்டுமே தெரியுமாம் ஆசினுக்கு.

இதனால் படத்தில் கேரக்டர் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக களரி கற்கப் போகிறார் ஆசின். கேரளாவில் வந்து பயிற்சி மேற்கொள்ள விரும்பிய அவர் கோழிக்கோடு வந்து பிரத்யேக பயிற்சியில் ஈடுபடப் போகிறாராம்.

ஏ வெட்னஸ்டே படத்தின் தமிழ், தெலுங்குப் பதில் நீங்கள் கமலுடன் இணைந்து நடிக்கிறீர்களாமே என்று கேட்டால், அதெல்லாம் இல்லை, அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வரவில்லை என்கிறார் ஆசின்.

ஆயிரத்தில் ஒருவனை முடித்துவிட்டு மும்பையில் ஓய்வெடுக்கிறார் என்றுதானே ரீமாசென்னை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கொழந்தை இப்போ பண்ணிகிட்டு இருக்கிறது ரெஸ்ட் இல்லே, ஹோம் ஒர்க்! அட, மெய்யாலுமே ஹோம் ஒர்க்தான்! அடுத்ததாக இவர் விஷாலுடன் நடிக்கவிருக்கும் படத்தில் வேலைக்காரியாக நடிக்கிறாராம். இதற்காக நீங்கள் கொஞ்சம் இளைப்பதோடு, சற்றே களைப்பாகவும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம் இயக்குனர் திரு.

இதனால் வீட்டு வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாராம் ரீமாசென். படத்தில் இன்னொரு ஆச்சர்யமாக பிபாஷா பாசுவை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சச்சின் என்ற படத்தில் விஜயுடன் நடித்தவர் பிபாஷா. தமிழுக்கு சரிவராத முகம். ஆனாலும், பாலிவுட்டில் பிரபலமாக இருப்பதால், அவரோடு ஜோடி சேர வேண்டும் என்ற ஆசைப்படுகிறாராம் விஷால். இதற்காகவே வம்படியாக அவரை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். சச்சினுக்கே 80 லட்சம் சம்பளம் கேட்டவர் இவர். அதுமட்டுமல்ல, படம் முடிகிற நேரத்தில் இன்னும் 20 லட்சம் கொடுங்க என்று அடம் பண்ணி வாங்கிக் கொண்டு போனார். அவரையா கேட்கிறீங்க என்று அதிர்ந்து போயிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

ஆனாலும், புள்ள ஆசப்படுது. போடலைன்னா கோவிச்சுக்கும் என்று விஷாலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு சம்பளம் பேசி வருகிறார்கள். பேரம் படியுமா? பிபாஷா மடியுமா?

ஒரு பக்கம் எந்திரன். மறுபக்கம் அரசியல் பார்வை என்று பிசியாகவே இருக்கும் ரஜினிக்கு இன்னொரு வேலையும் முக்கியமாகவே இருக்கிறது. அது? தனது மகள் சௌந்தர்யாவின் கம்பெனிக்கு நல்ல இயக்குனர்களை தேடுவது. பிரச்சனையில்லாமல் அந்த படங்களை வெளிக் கொண்டு வருவது!

சமீபத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தை பார்த்து அந்த யூனிட்டை அழைத்து பாராட்டிய ரஜினி, அடுத்தடுத்த வாரத்தில் அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரனையும் அழைத்து தனியாக பாராட்டினார்.

இந்த அன்புக்கும் அக்கறைக்கும் கிடைத்த பரிசு என்ன? சுசீந்தரன் இயக்கத்தில் சௌந்தர்யா ரஜினி ஒரு படம் தயாரிக்கிறாராம். ரேணிகுண்டா என்ற படத்தை எடுத்துவரும் கம்பெனியிடம் இருந்து அடுத்த படத்திற்கான அட்வான்சை வாங்கியிருக்கும் சுசீந்திரன், ரஜினியின் அன்பு கட்டளைக்கும் தலை வணங்கியிருக்கிறார். ஆக்கர் ஸ்டுடியோவுக்கு ஒரு படத்தை இயக்குவதாக ஒப்புக் கொண்டிருக்கும் அவர், அதற்காக சௌந்தர்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட அட்வான்ஸ் பத்து லட்சம்! இந்த படம் சுசீந்திரனின் மூன்றாவது படமா? அல்லது சூப்பர் ஸ்டாரே கேட்டுக் கொண்டார் என்பதற்காக இதற்கு முன்பு அட்வான்ஸ் கொடுத்த கம்பெனியை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைப்பாரா? இதுதான் கோடம்பாக்கத்தை சுற்றி வரும் இப்போதைய கேள்வி
நேற்றைய பங்குசந்தை (23.03.2009)






24.03.02009(செவ்வாய்)


நேற்று உச்சத்தில் முடிந்த அமெரிக்க சந்தைகள் ...


இன்றும் தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் ...

சந்தை கிழிறங்கி விடுமோ என்ற எண்ணத்தில் நிறைய PUT OPTION வாங்கி குவித்து வைத்திருக்கின்ற தின வணிகர்கள் ...

ஆனால் 2900 PUT, WRITING செய்து வைத்திருக்கின்ற FIIக்கள் ...

இன்னும் மூன்று தினங்களில் முடிவுக்கு வரும் இந்த மாத F&O EXPIRY …

இப்படியொரு காலகட்டத்தில்,





நிஃப்ட்டி முடிஞ்சது (as on 23.03.2009) : 2840


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2900


தடை நிலைகள் : 2990,3040,3135


தாங்கு நிலைகள் : 2850,2755,2705


"பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?" என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

நேற்றைய பங்குசந்தை (23.03.2009)






24.03.02009(செவ்வாய்)


நேற்று உச்சத்தில் முடிந்த அமெரிக்க சந்தைகள் ...


இன்றும் தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் ...

சந்தை கிழிறங்கி விடுமோ என்ற எண்ணத்தில் நிறைய PUT OPTION வாங்கி குவித்து வைத்திருக்கின்ற தின வணிகர்கள் ...

ஆனால் 2900 PUT, WRITING செய்து வைத்திருக்கின்ற FIIக்கள் ...

இன்னும் மூன்று தினங்களில் முடிவுக்கு வரும் இந்த மாத F&O EXPIRY …

இப்படியொரு காலகட்டத்தில்,





நிஃப்ட்டி முடிஞ்சது (as on 23.03.2009) : 2840


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2900


தடை நிலைகள் : 2990,3040,3135


தாங்கு நிலைகள் : 2850,2755,2705


"பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?" என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

கருத்துகள் இல்லை: