செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் தேதி மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவு

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று கடந்த வருடம் அறிவித்த தமிழக அரசு இப்போது மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்....

'1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான "ஆண்டுக் கணக்கு" இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு. மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை 1971 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழனுக்கும் ஏற்றம் தரும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கணிப்பீட்டு முறைமையை அரசு மற்றும் ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கின. இதனை அரசு 2008 இல் முறையாக அறிவித்தது.

இதன்படி கடந்த தைத் திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் அகம் மகிழ சிறப்புற கொண்டாடப்பட்டது. ஆனாலும் பழைமையை மாற்ற விரும்பாத பலரும், 'தொடர்ந்து சித்திரை முதல் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.

பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கையையும் பரிவுடன் பரிசீலித்த தமிழக அரசு சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துள்ளது. இது குறித்த முறைப்படியான அரசு அறிவிப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் வெளியிடப்படும். ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை என்கிறது அரசு செய்திக் குறிப்பு.


(நன்றி: தினத்தநதி)

தேர்தல் மே மாதத்தில் வந்ததால் இந்த மாற்றம் என்று நினைக்கிறேன், மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வசதியாக இருக்கும். நடக்கட்டும்

புகார்பெட்டி இணைப்பு

இணையத்தில் புதிய புகார்பெட்டி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த இணையத்தில் அரசுத்துறைகளில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் பதிவு செய்யலாம்.

உதாரணமாக பாஸ்போர்ட் அலுவலகம், மின்சார துறை, பி.எஸ்.என்.எல், போன்ற எந்த மாநில, மத்திய அரசு துறைகளானாலும் உங்கள் தேவைகளில் ஏதேனும் குறை இருந்தால் இந்தப் புகார் பெட்டியில் பதிவு செய்யலாம். எல்லா அரசு அலுவலகங்களிலும் இருக்கும் மஞ்சள் நிற புகார் பெட்டி போல பெயருக்காக திறக்கப்பட்டது என நினைக்காதீர்கள். இதில் பதிவு செய்யப்படும் புகார்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இரு மாதங்களுக்கு முன் பரிதாபாத் முனிசிபாலிட்டியால் புதியதாக போடப்பட்ட சாலையில் பி.எஸ்.என்.எல்., குழித்தோண்ட...புதிய சாலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம். ஒருவர் இந்த புகார் பெட்டியில் இந்த பிரச்சினையை புகாராக பதிவு செய்ய... ஒரு வாரத்தில் பி.எஸ்.என்.ல், மற்றும் பரிதாபாத் முனிபலுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நோட்டீசின் ஒரு நகல் பதிவு செய்த நபருக்கும் வந்துள்ளது.

ஆச்சர்யமாக இருக்கிறதே?? இந்தியாவிலா இப்படி நடக்கிறது??? என்று கிண்டல் பண்ணுவதை நிறுத்திவிட்டு இந்த இணையத்தளத்தினைப் பற்றிய விழிப்புணர்வை எல்லா இந்திய பிரஜைகளுக்கும் ஏற்படுத்துவோமாக...

நூறு தவறுகளில் ஒன்றின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது இந்த முயற்சியின் வெற்றிதான்.
முல்லைத்தீவு, சாலைக் கடற்பரப்பில் நேற்றிரவு இலங்கை கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இரு மணி நேரச் சமரில் புலிகள் தரப்பில் பரிய இழப்பு ஏற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலின் போது கடற்புலிகளின் நான்கு வள்ளங்கள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதுடன் 26 புலிகள் கொல்லப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடற்புலிகளின் முக்கியஸ்தரான மாறனும் இந்த மோதலில் கொல்லப்பட்டமை அவர்களின் தொலைத்தொடர்பினை ஒத்துக் கேட்டபோது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்படை தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஓர் அதிகரி உட்பட மூவர் காயமடைந்தனர்.
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது கைது செய்யப் பட்ட பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் அமீர் கசாபுக்கு நீதிமன்றம் அரசு வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது.

மகராஷ்டிரா சட்ட உதவிக் குழுவில் உள்ள வழக்குரைஞர் அஞ்சலி வக்மரேவை இந்த வழக்கின் போது கசாபின் சார்பில் வாதிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகில்யானி நியமனம் செய்து இன்று அறிவித்தார்.

மேலும் லஷ்கரே தொய்பாவைச் சார்ந்த பஹீம் அன்சாரி மற்றும் சகாபுதீன் முகமது ஆகியோர் தங்களுடைய வழக்குரைஞர் குறித்து உடன் முடிவெடுக்குமாறும் நீதிபதி வலியுறுத்தினார்.
சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்ச முதல்வர் மாயாவதி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.

அதன்படி நேற்றிரவு வருண் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

முன்னதாக போடப்பட்ட 3 வழக்குகளில் பிணை கோரியிருந்த அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வருண் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, பாரதிய ஜனதா தொண்டர்கள் காவல்துறையினருடன் மோதியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 65 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிகழ்வே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய முதல்வர் மாயாவதியைத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது

கருத்துகள் இல்லை: