நண்பர்களே இந்த பதிவு நம் நண்பர்களில் சில நண்பர்களின் என்னம் மிகவும் கெட்ட என்னமாக இருக்கிறது அவர்களை பற்றி விளக்கவே இந்த பதிவு. ஒரு சில நண்பர்களை மட்டுமே குறிப்பிட்டு சொல்கிறேன்.உதாரனத்திற்கு நான் எனது வியாபரத்திலோ அல்லது எனது அலுவலக வேலையிலோ வளர்ச்சி அடைகிறேன் என வைத்துகொள்வோம் அதை கண்டு சில நன்பர்கள் மிகவும் வருத்தமடைகிறார்கள்.ஏன் சில நன்பர்கள் என்னிடம் பேசுவதை கூட நிறுத்திவிட்டார்கள். இதற்கு நான் சொல்லும் பதில் அவரவர் திறமை அவரவர் கையில் இதற்காக பொறாமைபட்டு என்ன செய்ய முடியும். மர்றும் சில நண்பர்கள் நமக்கு தெரிந்ததை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மறுப்பது,ஏனென்றால் பகிர்ந்து கொண்டால் அவன் பெரிவனாகிவிடுவான் என்ற என்னம். தயவவு செய்து உங்களுக்கு தெரிந்ததை தயவுசெய்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.அப்படி பகிர்ந்து கொண்டு, அவர் உயர்ந்து சென்றால் அது உங்களுக்குதான் பெருமை. அப்படி எனது நன்பர் என்னிடம் சிலவற்றை பகிர்ந்திருந்தால் நான் பலவற்றை எட்டி பிடித்திருக்கமுடியும். இதை அவருடைய தவறு என்று நான் சொன்னால் நான்தான் முட்டாள்.ஆனால் ஏன் எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.ஏனென்றால் அவருடைய மனதில் அழுக்கு இருந்திருக்கிறது.ஒரு தேர்வு எழுதுகிறோம் அந்த தேர்வில் தோல்வி அடைகிறோம்.உடனேயே அந்த தேர்வு எழுதுவதையே கைவிடுவது மகாமுட்டாள்தனம்.முயற்சி என்பதை கடுகளவேனும் பயன்படுத்தவேண்டும். அப்படி தேர்வு எழுதுவதை கைவிட்டவர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள் இது சிலபேருக்கு புரியும்.தயவு செய்து முடிந்தால் உங்கள் நண்பரை ஊக்கபடுத்துங்கள்.தயவுசெய்து காயப்படுத்தாதீர்கள். நான் பெருமைக்காக சொல்லவில்லை நான் அப்படி ஊக்கப்படுத்தி சில நண்பர்களை பார்க்கும் போது எனக்கு அளவிள்லா மகிழ்ச்சி. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இது தமிழ்நாட்டில் நடந்த குத்தாட்டம் மேடை நிகழ்ச்சி.இதுவரை நான் பார்த்ததில்லை அப்படி ஒரு ஆபாசம்.அதுவும் ஒரு மேடை நிகழ்ச்சியில் செய்கிற அட்டூழியம்.இதை எப்படி அந்த ஊர்மக்கள் அனுமதிக்கிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.அந்த ஊர் இளைஞர்கள் அப்படித்தான் ஜொல் வழிந்து பார்த்துகொண்டிருக்கிறார்கள்.
இது புதுக்கோட்டை மாவட்டம் பூவற்றகுடி அப்படித்தான் பின் உள்ள பேனரில் உள்ளது இதில் இன்னும் கொடுமையான செய்தி என்னவென்றால் கோவில் திருவிழாவுக்காக ஏற்பாடு செய்யபட்ட கலைநிகழ்ச்சியாம்.அதுவும் அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் சிங்கை,மலேசியா,அபுதாபி வாழ் அதிரடி அம்பாள் தொண்டர்கள்,என பின்னுள்ள பேனரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வருத்தமாக உள்ளது.இப்படி கோவில் நிகழ்ச்சியென்று அம்பாள் படத்தை பின்னுள்ள பேனரில் போட்டு படத்தின் முன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.ஒருதடவை நடிகை குஸ்பு ஏதோ மேடைநிகழ்ச்சியில் சாமி
சிலை முன்பு செருப்புகாலுடன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒரு வாரப்பத்திரிகையில் படித்ததாக ஒரு ஞாபகம்.அந்த போராட்ட நாய்கள் இப்போது எங்கு போனார்கள்.இப்படி செய்வது அல்லாமல் இந்த குத்தாட்டத்தை சிடியில் காபி செய்து காசு பார்த்துகொண்டிருக்கிறது, ஒரு வியபாரகும்பல்.இப்படியே போனால் நமது தமிழ்நாட்டு கலச்சாரம் சீரழிந்துவிடும்.
நான் அரிசந்திரன் மாதிரி பேசல இப்படியேபோனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் காலம் கேள்விக்குறியாகிவிடும்.
சமூக நலத்தோட பார்த்தால் இவர்கள் செய்வது மிகதவறு.ஆனால் இப்படியும் பெண்கள் பொது இடங்களில் தங்களை தொட அனுமதிப்பார்கள் என இதை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.ஆனால் அவர்கள் சூழ்நிலை என்ன என எனக்கு தெரியாது. இதை ஒரு பிழப்பாக தேர்வு செய்வது கையாலாகாதனம்.இந்த நிகழ்ச்சி சில பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக