செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-24

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக வுடன் தேர்தல் கூட்டணி காண்பதாக தெரிய வந்துள்ளது.
ஏழு மக்களவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் என்ற பேரம் படிந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தங்கள் கூட்டணியில் பாமகவை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகின்றது. மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று காலை மருத்துவர் இராமதாஸைச் சந்தித்து கூட்டணி பற்றி பேசினார். அதன்பின் முதலமைச்சர் கருணாநிதியையும் சந்தித்த தங்கபாலு பாமக கூட்டணி பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

மத்திய அமைச்சரும், இராமதாஸ் மகனுமான அன்புமணி காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் விருப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 26ந்தேதி கூடவிருக்கும் மாநில செயற்குழுவில் தங்கள் முடிவு திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்று பாமக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுக தருவதாகச் சொல்லியுள்ள 7 மக்களவை+1 மாநிலங்களவை தொகுதிகளை இராமதாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்படி அதிமுகவுடன் கூட்டணி உறுதியானால் "அன்புமணி, வேலு ஆகிய மத்திய அமைச்சர்கள் பதவி விலகிவிடுவார்கள் - நேச்சுரலி" என்றார் அவர்.


More than a Blog Aggregator

by கிருஷ்ணா

பட்டில் புடவை கட்டி
  • பாவை நான் இங்கிருக்க..

தொட்டில் உறங்க வைச்சு

  • துணை சேர காத்திருக்க..

கட்டில் கதை படிக்க

  • கண் முழிச்சி வேர்த்திருக்க..

தட்டில் பால் பழமும்

  • மாமனுக்கு காத்திருக்க..


"யாரோ தானே மாமியார்

  • எனக்கு என்ன தேவையா..?

மோரோ கூழோ கொடுப்பாங்க

  • மூத்தவரு கிட்ட அனுப்புங்க..
ஊரோ உலகோ பழிச்சாலும்..
  • ஒன்னும் கெட்டுப் போகாது..
காரோ வீடோ வாங்கிப்புட்டா..
  • கடுதாசி போட்டு அழைச்சிக்கலாம்..!"


தலையணை மந்திரம் நான் போட

  • தாயும் மகனும் பிரிஞ்சாங்க..
சிலையென என்னைக் கண்டவுடன்
  • சிந்தனை எல்லாம் இழந்தாக..
சரியென அண்ணன் வீட்டுக்கு
  • சாயங்காலம் போனாக..
விதியென எண்ணி அத்தையுந்தான்,
  • விம்மிக் கொண்டே போனாங்க..!


ஆவி கொதிப்பதை நான்

  • ஆருகிட்ட சொல்லி அழ..?

பாவி மனுசன் அவன்

  • இன்னும் வந்து சேரலையே!

கூவி விடிய வைக்க

  • கோழியுந்தான் வந்திருச்சே..
தேவி எனை மறந்து,
  • தேவருந்தான் போனதெங்கே..??!!

-K. கிருஷ்ணமூர்த்தி

(இது வெறும் கற்பனைக் கதைக் கவிதையே. அன்னையை கூட்டிக்கொண்டு போன கணவன் வீடு திரும்பவே இல்லை. மாமியாரையும் பெற்ற தாய் போல போற்றுவதே நமது பண்பாடு.. .)

சடங்குகளும் சம்பிரதாயங்களும் மக்களை வழி நடத்துகின்றதா இல்லை மக்களை சீரழிக்கின்றதா என்று பட்டி மன்றம் வைக்க நான் வரவில்லை அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவத்தைத் தான் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

அண்மையில் தான் அவளுக்கு அவர்களின் ஊர் வழக்கப்படித்தான் திருமணம் நடந்தது. ஆனால் நடந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அந்த ஊர்வழக்கமும் அவர்களது கலாசாரமும் அவளை என்ன கொடுமைப்படுத்துகின்றது.
திருமணம் ஆகி இரண்டு நாட்கள்தான் தாலி கட்டும்போது மாப்பிள்ளை தாலியை மாற்றிக் கட்டிவிட்டாராம் பெண்ணுக்குக் கட்டாமல் தங்கைக்கு கட்டினதாக நீங்கள் நினைக்க வேண்டாம் தாலி தலைகீழாக கட்டிவிட்டாராம்.
அதற்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் பெண் வீட்டார் நீ வந்த நேரம் தான் இப்படி நடக்கின்றது என்று அவளது முகத்திற்கு முன்னாலே சொல்கின்றனராம்.
நான் கேட்கின்றேன் மாப்பிள்ளை ஒழங்காக தாலியைக் கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.
அதற்காக நீங்கள் நினைக்க வேண்டாம் பெண் அழகில்லாதவள் என்று மாப்பிள்ளையை விட பெண் அழகாக இருப்பது தான் அந்த ஊர் மக்களிடமும் அவனது உறவினர்களிடமும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
வயது போன பட்டி கூட என்ன கோயில்ல இருக்கின்ற சிலையை கொண்டு வந்து விட்டானா. பொம்மை மாதிரியே இருக்கு.
என்ன இந்தப் பெண் இப்படி மெல்லிசாக இருக்குதே என்று சொல்கின்றார்.
அந்தக் காலத்தில பெண்கள் உரல் குத்திமாதிரியோ தெரியவில்லை.தாலியை
தலைகீழாகக் கட்டியதற்காக முதல் இரவைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள் என்ன கொடுமை பாருங்களேன்.
பூனை குறுக்கே போனால் பயணத்தை ரத்துச் செய்கின்றார்கள்.காகம் பசியினால் கத்தினால் கூட அதற்கு ஒரு அர்த்தம் கண்டுபிடித்து விருந்தினர் வரப்போகின்றார்கள் என்று சொல்வது.
விதவைப் பெண்களை நற்காரியங்கள் செய்வதற்கு முன்னிலையில் விடுவதில்லை.இப்படியன செயல்களால் பலரது மனங்கள் வேதனைப்படுகின்றது.
ஏன் ஒரு கூட்டத்தில் சமூகத்தில் தள்ளி வைக்கப்படுகின்றார்கள். சம்பிர்தாயங்களைக் கடைப்பிடிக்கின்றோம் என்று என்ன என்ன கொடுமைகளை இந்த சமூகம் செய்து கொண்டிருக்கின்றது.
இந்த படத்தில் நீங்கள் காண்பது நான் அக்கா வீட்டில் பார்த்த லேடிபக்.
இரண்டில் எது ஒரிஜினல் என்பதைக் கண்டு பிடிக்க நிச்சயம் ஒன்றிரண்டு நிமிடங்களாவது ஆகும்.பார்த்த உடன் "என்னை எடுத்து உன் வலைப்பதிவில் போடேன்"என்று கேட்டது போல் உடனே பிடித்தேன் .அடைத்தேன் .

அவருடைய நகைச்சுவை உணர்ச்சியைப் பற்றி ஒரு பதிவு வெளியிட்டுருந்தேன் .இங்கே சொடுக்க:
http://haasya-rasam.blogspot.com/2008/04/blog-post_04.html

இந்த பதிவு மிளிர்வது அவருடைய கைவண்ணத்தால்
.அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வருகிறது
இந்த லேடிபக்.
நம் கண்ணுக்கு வெறும் கூழாங்கல்லாகத் தெரிவது அவள் கலைக் கண்ணுக்கு ஒரு உயிராக உருவெடுத்திருக்கிறது.
நீங்களே பாருங்கள் கல் ஒன்று லேடி பக் ஆனதை.மேலே இரண்டே வர்ணங்கள்,அடியில் கால்களுக்கு ஒரு கார்ட் போர்ட். முடிந்தது ஸ்ரிஷ்டி.
.....
அவருடைய கலைக்கண் பற்றி நான் எழுதியிருந்த ,கதை பரிசுப் பேழையிலிருந்து ஒரு சில வரிகள்.
"....ஐந்தாவது குழந்தையாக தங்கம்,நிதானமாகவந்தாள்.வந்தவள் கை நிறைய,வண்ண வண்ண நூல்களும்,தையல் ஊசியும்,பெயிண்ட்களும் பிரஷ்களுமாக முகம் நிறைய மகிழ்ச்சியுமாக நின்றாள்.கையில் எதை எடுத்தாலும் அதைக் கலை நயம் மிகுந்த பொருளாக மாற்றுவது எப்படி என்பதைக் கற்றவள். அவள் அதை, ஜடப் பொருளில் மட்டும் காட்டாமல் மனிதர்களிடமும் பிரயோகிக்க வேண்டும் என்று நினைப்பாள்.குப்பைத் தொட்டியில் எறியப் படும் வெள்ளை பூண்டின் தோலை பூக்களாக மாற்றும் கலையை அறிந்து வைத்திருந்ததோடு நில்லாமல் ,பலரும் ஒதுக்கும் ஒரு மனிதனை,எல்லோரும் மதிக்கும் வண்ணம் மாற்றிப் பார்க்கவேண்டும் என்று, தன் கலைத்திறமையை சமுதாய மட்டத்துக்கு உயர்த்திப் பார்ப்பாள்.எத்தனையோ முறை,தோல்விகளைத் தழுவியிருந்தாலும் சளைக்காமல் தன் கலைத் திறமையை ஜடப் பொருளுக்கும் ஜனங்களுக்குமாக உபயோகமாக்கப் பார்ப்பாள்,அருமையான பெண் பொன்னும் பொருளும் கேட்டு வாங்கி,அந்த அற்ப சந்தோஷத்தில் திளைக்காமல்,வண்ணப் பூக்கள்,அது இறைவன் படைத்ததாக இருக்கட்டும்,இயந்திரத்தில் உருவானதாக இருக்கட்டும் அதன் அழகில் திளைப்பாள்.சின்னச் சின்னக் கலைப் பொருட்கள்போதும் ,அவளைக் களிப்பில் ஆழ்த்த.இந்த எளிமையை அவள் தாயிடமிருந்து அள்ளி வந்திருப்பாளோ ?
மேலும் ஆழ்ந்து வாசிக்க
http://valluvam-rohini.blogspot.com/2008/01/blog-post_18.html
.



















.

































பி.கு: தயவு செய்து பிறர் முன் திறக்க வேண்டாம். நன்றி.

கருத்துகள் இல்லை: